Total Pageviews

Wednesday, February 12, 2020

தலை சுத்துது!



சோமு: என் மனைவி எப்போ சொன்னாலும், எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காம உப்புமா செய்து தருவா..

ராமு : உப்புமாவில வண்டும், புழுவுமா இருக்கிறப்பவே நினைச்சேன், சலிக்காமத் தான் செஞ்சிருப் பாங்கன்னு.!

******

நண்பன் 1 : மச்சி உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?

நண்பன் 2 : அந்தக்கொடுமைய ஏன் மச்சி கேட்குற? இன்னும் இல்லை.

நண்பன் 1 : காலாகாலத்துல கல்யாணம் பண்ணிடனும் மச்சி!

நண்பன் 2 : மச்சி பொண்ணு பார்க்க போனா துவைக்கத்தெரியுமா?சமைக்கத் தெரியுமான்னு கேட்கிறாங்க!

நண்பன் 1 : இதெல்லாம் தெரியாம யார்டா பொண்ணு  கொடுப்பா?

 தெரியும்னு           சொல்ல   வேண்டியது தானே?

நண்பன் 2 : அட நீ வேற! பொண்டாட்டி புடைவை துவைக்கச்சொன்னா பரவா இல்லை, மாமனார் மாமியார் டிரஸ்களையும் துவைக்கனும்னு சொல்லுராங்கப்பா!

நண்பன் 1 : பக்கிப்பயலே? நீ வீட்டோட மாப்பிளையா போக ட்ரை பண்ணுனியா? அப்ப செஞ்சுதான் ஆகனும்டியேய்!

*******
நோயாளி: டாக்டர் தலை சுத்துது!

டாக்டர்: சுகர் இருக்கா?

நோயாளி: இருக்கு டாக்டர்!

டாக்டர் : எப்ப பார்த்தீங்க?

நோயாளி: இன்னைக்கு காலைகூட பார்த்தேன் டாக்டர் !

டாக்டர்: வெரி குட். எவ்வளவு இருந்திச்சி?

நோயாளி: அரை டப்பா இருந்திச்சி டாக்டர்!!

டாக்டர்: உனக்கு அப்ப! அப்ப! தலை சுத்தத்தான் செய்யும்!

சக்களத்தி யாரு'ன்னு. எனக்கு தெரிஞ்சு ஆகனும்!




என்ன மச்சி! ஞாயிற்றுகிழமை ! கறி சாப்பாடா ! கோழியா! மீன் சாப்டா! தூக்கமா?

அடேய்.. டி.நகர் சரவணா ஸ்டோர் மொட்ட மாடில லெமன் சாதம் சாப்டுட்ருக்கேன்டா !

ஏண்டா !

காலைல 9 மணிக்கு புடவை எடுக்க போனா! இன்னும் திரும்பலடா..!

******
ஹலோ.. ஈபி ஆபிசுங்களா..."

"ஆமாங்க.. சொல்லுங்க..."

"தெரு விளக்கு எரியுதுங்க சார்.."

" எரியட்டும்பா நல்ல விசயந்தானே... உனக்கு என்ன பிரச்சனை.. அத சொல்லுங்க.."

அய்யா ..எங்க ஏரியால உள்ள தெருவிளக்கு விடாம எரியுதுங்ங்க சார்..

அட எரியட்டும்னுதானே மின்சாரம் கொடுக்கிறோம்.. எரியட்டுமே உன் பிரச்சனை என்னானு சொல்லு..

சார்ர்ர்ர் எங்க எரியால தெருவிளக்கு பத்திக்கிட்டு நெருப்பா எரியுதுங்ங் சார்.

அட அப்படி விளக்கமா சொல்லுக! இதோ மின்சாரத்த சுவிட்சு ஆப் பண்னிட்டு ஆள அனுப்பிவிடுறோம்!

******
கல்யாணமான புதுசுல என் பொண்டாட்டி தோசை சுடவா மாமா!

இட்லி சுடவானு மாமான்னு கேட்பா!

அப்ப இப்பலாம் ?

இப்பலாம் தோசை சுடு மாமா! இட்லி சுட மாமான்னு சொல்லுரா! மாப்பிள்ளை!

*******
வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளருக்கு வெறும் மூன்று ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன!

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெறுத்துப் போய் வீட்டுக்கு வந்தார்.

எரிச்சலாய் அவர் மனைவி கேட்டார்!

'மூனு ஓட்டுல ஒன்னு ஒங்களது.! இரண்டாவது என்னது!

அந்த மூனாவது ஓட்டுப் போட்ட சக்களத்தி யாரு?'ன்னு. எனக்கு தெரிஞ்சு ஆகனும்!
 
******

NOT REACHABLE !

Pin by Puppy on Meme | Funny facts, Tamil funny memes, Comedy quotes

ஏங்க! அண்டா குண்டா 
 
பாத்திரங்களையெல்லாம்  ஏங்க விக்கிறீங்க?
 என்னோட பையன் பட்டணத்திலே சினிமாவில் 

சின்னச் சின்ன பாத்திரத்திலே நடிக்கிறானாம்!

செலவுக்குப் பணம் அனுப்பச் சொன்னான்! 
அதான்!
 

******
டாக்டரும் , பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ?
 
ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !


 *****

பாபு: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிவிடலாம்...
கீதா: எனக்கு தனியா வர பயமா இருக்கு....
பாபு: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...
கீதா: ?!?.... 

 *****
 அந்தத் திருடனைப் பிடிக்க முடியாதுன்னு எப்படிச் சொல்றீங்க?” 

"அவனோட செல் நெம்பர்ல ட்ரை பண்ணினேன். Not 


Reachableனு வந்தது சார்…!”
  
 *****
 "இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்" !

ஏன் ?"அவ்வளவு பிசி ஒர்க்கா?"

"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும் 
எழுப்பிவிடலை" !

****

Wednesday, June 26, 2019

அரக்கி தேய்க்கணும்னு!

சிரிக்காமல் படிக்க வேண்டும் நண்பர்களே!


எல்லோரும் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணும்.. சந்தோசம் மட்டுமே வாழ்க்கை இல்லை  - வைரலாகும் கணவன் மனைவி மீம்ஸ் | Funny Memes Husband And Wife Memes In Tamil  – News18 ...

மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??"

கணவன் : *Unmarried* - *னு சொல்லுவாங்க*"

மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"
________________________________
 
*கணவர்:"இந்த பொடுகு மருந்தை*

*தேய்ச்சி விடேன்டி!"*

*மனைவி: "ஏன்,*

*நீங்களே தேய்க்க கூடாதா?"*

*"அரக்கி" தேய்க்கணும்னு டாக்டர்*

*சொல்லி அனுப்பினார்,அதான்"*
_______________________________


*சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?*

*புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.*

*புலியுடனேயே தூங்குபவார் சம்சாரி.*
________________________________


கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*

ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி *"வரமா"* இருக்கனும்

இல்ல ஊருக்கு போன மனைவி *"வராம"* இருக்கனும் 

_______________________________
மகன்: சகலை என்றால் என்னப்பா?

அப்பா: ஒரே கம்பெனி பொருள வாங்கி ஏமாந்தவங்கப்பா...
_____________________________

Daddy....இந்த

அப்ளிகேஷன்லே,

'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??.." 

"ரொம்ப நீளம்னு எழுது..."

Tuesday, July 31, 2018

கோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு !




ராமூ   - என்னடா உதட்டெல்லாம் காயம்?

சோமு  - ஒன்னுமில்லடா மனைவி [wife] ஊருக்கு போறா ரயில் ஏத்திவிட்டு வந்தேன் !

ராமூ   - அதுக்கு.....?

சோமு  - சந்தோஷத்துல எஞ்சினுக்கு முத்தம் கொடுத்தேன் அதான்...!!

************

ஆசிரியர்: "என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"

 மாணவன்: "கொஸ்டீன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!

************

டாக்டர்: வாங்க , உட்காருங்க , சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க , நாக்க நீட்டுங்க.. திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சு விடுங்க....

 இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?

 வந்தவர் : ஒன்னுமில்லை டாக்டர் , என் மகளுக்கு கல்யாணம்... பத்திரிகை கொடுக்க வந்தேன்....!?!

************


மகன்: அப்பா... இந்த அப்ளிகேஷன்லே, 'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??.."

அப்பா: "ரொம்ப நீளம்னு எழுது..."

************
 நண்பர் 1 : உங்க மனைவி ஏன் எப்போதும் கோவமாவே இருக்காங்க?

நண்பன் 2 : கோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு ஒரு நாள் தெரியாம சொல்லிட்டேன் அதான் ..

நண்பர் 1 : ????
************
நண்பர் 1 : இன்னையில இருந்து நான்கு நாள் என் பொண்டாட்டிக்கு பயப்படரதில்லனு முடிவு பண்ணியிருக்கேன் ..

நண்பர் 2:ஏன் ?

நண்பர் 1 : நேத்துதான் என் பொண்டாட்டி ஊருக்கு போனா அதான்!

நண்பர் 2:?????

************
 கணவன் : ( மனைவியிடம் ) இன்னைக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வைச்சியா டி?

மனைவி : ஆமாங்க ஏன் கேக்குறிங்க ?

கணவன் : அதுவா தெரு ஓரத்துல ஒரு கருப்பு நாய் செத்து கிடந்தது அதான் கேட்டன்

மனைவி : ????

************

இது... உன் வீடா ?




ராமு : நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது !.

 வீடு கட்டற செலவு பெண்டாட்டி ஆபீஸில் லோன் போட்டு வாங்கியது !.

வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சது .. ..

எப்படி இருக்கு என் வீடு ?

சோமு :    ம் .. .. ..   இது...  உன் வீடா ?

******************
ராமு : என்னது... திருவோடு ஃபிலிம்ஸா ?

சோமு : ஆமாம், நாலைஞ்சு பிச்சைக்காரங்க ஒண்ணா சேர்ந்து மெகா பட்ஜெட்ல படம் எடுக்கிறாங்க !

******************

சோமு : எதுக்குப்பா சாப்பிடும் போதெல்லாம் நின்னுக்கிட்டே சாப்பிடுற.. .?

ராமு : பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறான்னு மத்தவங்க யாரும் கேலி பண்ணக் கூடாதுல்லே..! அதான்!

******************

ராமு : சிகை அலங்காரம் செய்ய வந்த பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே... என்னாச்சு ?

சோமு : பின்னி எடுத்துட்டா

**********

சோமு : என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா !

ராமு : என் மனைவி என் மேலே கோபம்ன்னா தான் சமைப்பா!

**********

ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க!  இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?

சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம்!  இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.!

**********

ராமு : எங்க ஆத்துல 700 அடி போர் வெல் போட்டும் தண்ணீர் வரல!

சோமு: எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற ஆத்துல போரே போடாம தண்ணி வருதே!

*******

Sunday, March 12, 2017

ஒரு MRF டயர் வாங்கிக்கொடு....???

Pin by Gurunathan Guveraa on JOKES | Funny motivational quotes, Comedy  quotes, Photo album quote

 
ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....???

ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்!


 *********************

ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்.... 

 மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...

***************************
 டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!! முதல் உதவி என்ன செஞ்சீங்க....??? 

வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்....!!! 

******************

கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே....???'' 

டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்......??? 

பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே....!!!'' 

***********************

 "மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."

"அப்ப... கீழே இருந்து மேலே போனால்....???"

"அது.... குருவி....!!!"
******************************

ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே....??? 


உங்களுக்குத் தெரியுமா.....??? 


நண்பர்: தெரியுமாவாவது....??? 

நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்.  

**********************

பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,


நான் வாய் பேச முடியாத ஊமை.

"வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...

எனக்கு காது கேட்காது."

*****************************

ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும்.

 என்ன தரட்டும்...??? 

 ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
 
வேற எதாவது பெரிசா சொல்லு.

ஒரு MRF டயர் வாங்கிக்கொடு....???

************************************

 (பரீட்சை ஹாலில்)


 ரகு : வயித்தைக் கலக்குதுடா.

ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு


அப்பவே சொன்னேன், கேட்டியா...??? 

*********************

முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்...??? 

ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார்.

 நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்.....!!!

 ***************************

 வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
 

டிரெயினைப் புடிக்கணும்.....!!!  

 கடைக்காரர்: சாரி சார்....!!! டிரெயின் புடிக்கிற அளவுக்குப் 

பெரிய பை எங்க கடையில இல்லியே...!!!

**********************

இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்!

அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்

************************

"கடலை எண்ணெய் என்ன விலைங்க...???"

 "நூத்தி இருபது ரூவா"

 "எப்போ குறையும்?"

"அளந்து ஊத்தும்போதுதான்...."

******************************* 

Thanks to KARUNA MSM

ஈசானி மூலை !