ராமு : நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது !.
வீடு கட்டற செலவு பெண்டாட்டி ஆபீஸில் லோன் போட்டு வாங்கியது !.
வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சது .. ..
எப்படி இருக்கு என் வீடு ?
சோமு : ம் .. .. .. இது... உன் வீடா ?
******************
ராமு : என்னது... திருவோடு ஃபிலிம்ஸா ?
சோமு : ஆமாம், நாலைஞ்சு பிச்சைக்காரங்க ஒண்ணா சேர்ந்து மெகா பட்ஜெட்ல படம் எடுக்கிறாங்க !
******************
சோமு : எதுக்குப்பா சாப்பிடும் போதெல்லாம் நின்னுக்கிட்டே சாப்பிடுற.. .?
ராமு : பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறான்னு மத்தவங்க யாரும் கேலி பண்ணக் கூடாதுல்லே..! அதான்!
******************
ராமு : சிகை அலங்காரம் செய்ய வந்த பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே... என்னாச்சு ?
சோமு : பின்னி எடுத்துட்டா
**********
சோமு : என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா !
ராமு : என் மனைவி என் மேலே கோபம்ன்னா தான் சமைப்பா!
**********
ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க! இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?
சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம்! இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.!
**********
ராமு : எங்க ஆத்துல 700 அடி போர் வெல் போட்டும் தண்ணீர் வரல!
சோமு: எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற ஆத்துல போரே போடாம தண்ணி வருதே!
*******
No comments:
Post a Comment