"யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து..
ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.."
"சும்மா இருய்யா.. கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு."
"யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தான்யா!"
----------------------------
"சே.. அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு.."
"பேசட்டுமே சார்... நம்ம கட்சி பிரமுகர்தானே.."
"நீங்க வேற... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்.."
------------------------------
"நம்ம தலைவருக்கு ரொம்பத்தான் குசும்பு" "ஏன்.. என்னாச்சு?"
"கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய முடியலையாம்...
கோர்ட்லயே ஒரு ரூம் வாடகைக்குக் கேக்கிறார்"
-----------------------------------
"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?"
"உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"
"ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"
----------------------------------
"காதலன்: அன்பே நாம் மோதிரம் மாற்றிக் கொள்வோமா?
காதலி: நான் போட்டிருப்பது தங்கம். நீங்க போட்டிருப்பது டூப்ளிகேட்.
நீங்களும் தங்க மோதிரம் போட்டுட்டு வாங்க, மாத்திக்குவோம்.
காதலன்: ? ? ? ? ?
----------------------------------