Total Pageviews

Tuesday, July 16, 2013

வீட்டு சொந்தக்காரன் பேருக்குத்தான்.





‘‘நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை...

கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்!’’‘‘

உன் பொண்டாட்டியையா..?’

இல்ல... சைக்கிளை!’’
---------------------------------------

"இருக்கற வீட்டை உயில்ல எழுதி வைக்கப் போறீங்களா!

 யார் பேருக்கு?"

"வீட்டு சொந்தக்காரன் பேருக்குத்தான்.

என் மறைவுக்குப் பிறகு

அவனே இதை அனுபவிக்க வேண்டியதுன்னு உயில் எழுதிடப் போறேன்!"
-----------------------------------------
ஆபரேஷன் ஆன பிறகுதான் மயக்கம் தருவீங்களா!

 ஏன் நர்சம்மா இப்பட சொல்றீங்கி?"


"மயக்கம் கொடுக்கிற டாக்டர் ரெண்டு மணி நேரம் லேட்டாகத்தான் வருவாராம்.

 அதுக்குள்ளே ஆப்ரேஷன் பண்ற டாக்டர் அவசரப்படறார்..

வேற ஒரு ஆபரேஷனுக்கு போகணுமாம்..!

*******************
என் காதலை அவளிடம் சொன்னேன்.


அவள் சிரித்துக்கொண்டே ஒரே வார்த்தை சொன்னாள்...


"நீ ஆயிரத்தில் ஒருவன்!"

******************
"என்ன மொக்கை...

பாதி ராத்திரியில் வீடேறி வந்து எழுப்பி எதுக்காக கோணிப் பை இருக்கான்னு கேட்கறீங்க?"


"எங்க வீட்டுக்கு வந்திருக்கிற திருடன்தான் கேட்கச் சொன்னான். திருடின பொருளை மூட்டை கட்ட வேணுமாம்...."


----------------------------------------------
"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."


"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"


-----------------------------------------------

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...