‘‘நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும்
பயங்கர சண்டை...
கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்!’’‘‘
உன் பொண்டாட்டியையா..?’
இல்ல... சைக்கிளை!’’
---------------------------------------
"இருக்கற வீட்டை உயில்ல எழுதி வைக்கப் போறீங்களா!
யார் பேருக்கு?"
"வீட்டு சொந்தக்காரன் பேருக்குத்தான்.
என் மறைவுக்குப் பிறகு
அவனே இதை அனுபவிக்க வேண்டியதுன்னு உயில் எழுதிடப் போறேன்!"
-----------------------------------------
ஆபரேஷன் ஆன பிறகுதான் மயக்கம்
தருவீங்களா!
ஏன் நர்சம்மா இப்பட சொல்றீங்கி?"
"மயக்கம் கொடுக்கிற டாக்டர் ரெண்டு மணி நேரம் லேட்டாகத்தான் வருவாராம்.
அதுக்குள்ளே ஆப்ரேஷன் பண்ற டாக்டர் அவசரப்படறார்..
வேற ஒரு ஆபரேஷனுக்கு போகணுமாம்..!
*******************
என் காதலை அவளிடம் சொன்னேன்.
அவள் சிரித்துக்கொண்டே ஒரே வார்த்தை சொன்னாள்...
"நீ ஆயிரத்தில் ஒருவன்!"
******************
"என்ன மொக்கை...
பாதி ராத்திரியில் வீடேறி வந்து எழுப்பி எதுக்காக கோணிப் பை இருக்கான்னு கேட்கறீங்க?"
"எங்க வீட்டுக்கு வந்திருக்கிற திருடன்தான் கேட்கச் சொன்னான். திருடின பொருளை மூட்டை கட்ட வேணுமாம்...."
----------------------------------------------
"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
-----------------------------------------------
ஆயிரத்தில் ஒருவன் உட்பட அனைத்தும் ஹா... ஹா...
ReplyDelete