உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார்.
ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.
------------------------------
மேடம்... ஒரு அஞ்சு நிமிஷம் வெளில வெய்ட் பண்ணுங்க...
எதுக்கு டாக்டர் ?
தெர்மா மீட்டர் வெச்சு டெம்பரேசர் பார்க்கணும்... நீங்க பக்கத்துல இருக்கறதால உங்க கணவர் வாயைத் திறக்க மாட்டேங்கறார் !
---------------------------
டாக்டர்... அடிபட்ட கோபத்துல என் மாமியாரை நாய் கடிச்சுடுச்சு... !
அப்படியா ! முதலுதவி ஏதாவது பண்ணிங்களா...?
இல்லை டாக்டர்... நாய் வலி தாங்கம எங்கயோ ஓடிடுச்சு !
------------------------
அந்த நோயாளி உங்களைப் பார்த்து ரொம்பப் பயப்படுகிறார், டாக்டர்.
இப்போ அப்படித்தான் பயப்படுவாங்க. அப்புறம் ஆவியா வந்து பயமுறுத்துவாங்க.
_________________
அந்த தெர்மா மீட்டர் செம... ஹா.... ஹா...
ReplyDelete