Total Pageviews

Friday, June 5, 2015

ஆட்சி மாற்றம் !



ஏம்பா, இவ்வளவு குப்பையும், கூலமாக, துர்நாற்றமாக உள்ள இந்த வீட்டில் இருப்பவர் யாரப்பா ?

நம்ம சுகாதாரத்துறை அதிகாரிதான் !

************************

செய்தி : ஆட்சிக்கு வந்த நாலாவது  ஆண்டில்  41வது முறையாக வெளி நாடுகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பயணம் !

நிருபர் : அடிக்கடி வெளி நாடுகளுக்கு சுற்று பயணம் செய்கின்றீர்களே ஏன்?

அமைச்சர் : இந்த முறை ( 5 ஆண்டுகளில்)  இன்னும் 19 நாடுகளின் சுகாதாரத்தை அறிந்து கொண்டு,
 அடுத்த முறை மக்கள் எம்மை தேர்ந்தெடுத்தால்  உலகத்திலேயே சுகாதரத் துறையில் நம்பர் 1 நாடாக மாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்!

நிருபர் : கடந்த முறையும் இதே தான் சொன்னீர்கள், இந்த முறையும் இதையே சொல்கிறீகளே !

அமைச்சர் : எனக்கு ஒரு சொல்! ஓரு வார்தை! மாறி மாற்றி பேசுபவன் நானல்ல!

************************************

விருந்தாளி :  உன் மகன் என்னப்பா செய்கிறார் ?

தந்தை : அதுக்கெல்லாம் தண்ணி தெளிச்சி அனுப்பி ரெம்ப நாளச்சி !

அப்போது வந்த மகன் :  எனக்கு தெளிச்ச தண்ணிய செடிகளுக்கு தினமும் தெளிச்சிருந்தா இன் நேரம் பெரிய மரமாகி இருக்குமேயப்பா !

***********************************

கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை !.

மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்!

*************************************

தலைவர்: ஆளே இல்லாத இடத்துக்குப் போய் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கணுமே…எங்கய்யா போகலாம்..?

தொண்டர் : நம்ம கட்சி ஆபிசுக்குப் போகலாம் தலைவரே…!

******************************

நிருபர் : 5 வருடத்திற்க்கு ஒரு முறை கட்சி மாறினாலும் எப்போதும் மந்திரியாகி விடுகீறீர்களே!  எப்படி !

மந்திரி:  மக்கள் 5 வருடத்திற்க்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை விரும்பும் போது நான் என்ன செய்ய முடியும் ! இதைத் தவிர !

Wednesday, June 3, 2015

புனிதம் !



காதலி : நம்ம காதல் புனிதமானது சிவா !'

காதலன் : 'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !

*************************

பிறந்த நாளுக்கு நம்ம தலைவர், கைதிகளுக்கு இனிப்பு கொடுக்க போனப்ப, வார்டனுக்கு ஏதுக்கு ரெண்டு லட்டு அதிகமா குடுத்தாரு? ஏன் தெரியுமா  ?

'தலைவர் பழசை மறக்காதவர்' அதான் !

*******************

ராமு : உங்க சம்சாரத்துக்கு நீங்க மரியாதை தர்ற மாதிரி அவங்க உங்களுக்குத் தருவாங்களா ?'

சோமு : 'ம்...... ’அவ மரியாதை’ தருவா ?'

*******************************

டாக்டர் : ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !'

நோயாளி : 'ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?'

டாக்டர் : ''நீங்க சாப்பிட வேண்டிய அவசியமிருக்காதுன்னு  நினைக்குறேன் !

**************************
தலைவரே !.. எதிர்க்கட்சி தலைவருக்கு நீங்களே உங்க சொந்தச் செலவுல ஏன் சிலை வக்கிறீங்க ?

நடுரோட்ல உன்னை நிறுத்திக் காட்டறேன்னு சாவால் விட்டிருக்கேனே?  அதான் !

************************


ஏதோ கதை இருக்குன்னு ........ஜனங்க நம்புவாங்க !'



காவல் துறை அதிகாரி : யோவ்! நான் இல்லாதப்ப புகார் தர வந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியமே?'

காவலர்  : 'நீங்கதானே அய்யா, உங்க வேலையையும் சேர்த்து என்னை பார்க்க சொல்லிட்டு போனிங்க!' அதான் !

**************************

நர்ஸ் : ஆப்ரேசன் தியேட்டலேர்ந்து நோயாளி ஏன் பயந்து ஒட்றாரு?..'

வார்டு பாய் : 'ஆப்ரேசன் தியேட்டர் உள்ளே ’கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே’ அப்படின்னு  டாக்டர் எழுதி வச்சிருக்காரே!' அதான் பயந்து ஒடுறார் !

*************************

காதலன் : டார்லிங்! நமக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும்னு கோயில்ல நேற்று பிரார்த்தனை செய்தேன் பலிக்குமா?'

காதலி : 'அம்பது சதவிகிதம் பலிச்சிடுச்சி! வீட்ல எனக்கு வாத்தியார் மாப்பிள்ளை பார்த்துட்டாங்களே!

***************************

சினிமா இயக்குனர்: இந்தக் கதையை சினிமாவா எடுக்க நான் பத்து வருடம் தவம் இருந்தேன் !'

தொலைக்காட்சி நிருபர் : ஏன் ?

'சினிமா இயக்குனர்: இதே கதையை வெச்சு, இதுக்கு முந்தி வந்த படத்தை ஜனங்க மறக்க வேண்டுமா?' அதான் !

**************************

தொலைக்காட்சி நிருபர் : எதுக்கு நீங்களே ஒரு ஆளை செட் பண்ணி ’உங்க படத்தோட கதை என்னோடது’ன்னு கேஸ் போட வெச்சிருக்கீங்க ?'

'சினிமா இயக்குனர்: அப்பதானே படத்துல ஏதோ கதை இருக்குன்னு ஜனங்க நம்புவாங்க !' படம் பார்க்க வருவாங்க ! அதான் !

******************************


அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...