மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே.
அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“
கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி. !
மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“
*********************
மனைவி - "ஏங்க என்ன பொண்ணு பார்க்க வரும் போது நான் கட்டியிருந்த புடைவை கலர் ஞாபகம் இருக்கா?? "
கணவன் : "இல்லையேமா"
மனைவி: "ம்ம்... தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை..."
கணவன் "அது இல்லடா செல்லம் தண்டவாளத்துல தலை வைக்க போறகிறவன் வருகிற இரயில் சேரன் எக்ஸ்பிரஸா, பாண்டியன் எக்ஸ்பிரஸான பாத்துட்டு இருப்பான்..."
***************************
கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை வாங்கலாம்ன்னு இருக்கேன் !“
மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?“
கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன் !
*********************************
மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“
கணவன் – “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“
******************************