Total Pageviews

Monday, August 3, 2015

சேரனா , பாண்டியனா!



மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே.
 அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“

கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி. !

மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“

*********************

மனைவி - "ஏங்க என்ன பொண்ணு பார்க்க வரும் போது நான் கட்டியிருந்த புடைவை கலர் ஞாபகம் இருக்கா?? "

கணவன் : "இல்லையேமா"

மனைவி: "ம்ம்... தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை..."

கணவன் "அது இல்லடா செல்லம் தண்டவாளத்துல தலை வைக்க போறகிறவன் வருகிற இரயில் சேரன் எக்ஸ்பிரஸா, பாண்டியன் எக்ஸ்பிரஸான பாத்துட்டு இருப்பான்..."

***************************

கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை வாங்கலாம்ன்னு இருக்கேன் !“

மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?“

கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன் !

*********************************

 மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“

கணவன் – “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“

******************************

3 comments:

  1. முடிவில் உள்ள இரண்டு நகைச்சுவையும் தொடர்பு உள்ளதோ...?

    ReplyDelete
  2. சேரன் பாண்டியன் சூப்பர் நண்பரே...
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. வணக்கம் புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.நன்றி

    ReplyDelete

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...