மச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீ தாண்டா காரணம்!?
நானா ....எப்படிடா??!!....
இப்பவோ......அப்பவோன்னு இருந்த என் மாமனார்கிட்ட நீ எழுதின ஒரு ஜோக்க படிச்சு காட்டினேண்டா அவ்வளவுதான் பொட்டுன்னு போயி சேர்ந்துட்டாருடா! அப்புறம்! அவருடைய சொத்தெல்லாம் எனக்கு வந்துடுச்சில்ல??!!!
******************************
உடம்பு பூராவும் தங்க நகைகளை மாட்டிக்க பயமாயிருக்கு.”
“ஏன்?”
“திடீர்ன்னு ஞாபகமறதியா என் கணவர் என் கிட்டயே கத்தியைக் காட்டி, எல்லாத்தையும் கழட்டுன்னு சொல்றார்.”
******************
அந்த பொண்ணைப் பார்த்து மத்தாப்பூ மாதிரி சிரிக்கிறேன்னு
சொன்னது ஒரு தப்பா?
ஏன்டா என்ன ஆச்சு?
அவ அண்ணன் சாட்டையோட வந்து வெளுத்துட்டான் முதுகை. ..!
************************
‘‘டாக்டர்... எனக்கு சுகரும், மனைவியும் ஒண்ணுதான்!’’
‘‘எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘ரெண்டையும் என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை டாக்டர்...’’
*******************************
கணவன் : "எதுக்கு பக்கத்து வீட்டுக்காரியோட புடவையை வாங்கி கட்டிக்கிட்டு இருக்கே...?"
மனைவி: "அப்படியாவது நீங்க என்னைப்பார்த்து பல்லைக் காட்டறீங்களான்னு பார்க்கலாம்னு தான்!
கணவன்:(உள்ளுக்குள் முணங்கிய படி) நான் பல்லை காட்டுனதை இவ எப்படி பார்த்தா?
**********************
போன்ல, நான் அழகா இருக்கேன்னு ஒரு முறை கூட எனக்கு பார்த்த மாப்பிள்ளை சொல்ல வில்லையே தரகரே…!
நான் தான் சொன்னேனேம்மா…மாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு!
************************
காதலி: டியர் சில்மிஷம் எதும் செய்யமாட்டேன்னு சத்யம் செஞ்சா தான் சினிமாக்கு வருவேன் !.
காதலன்: டியர் வேணாம்....! எதுக்கு தண்டச்செலவு!
*************************