Total Pageviews

Saturday, August 11, 2012

நகைச்சுவை கீதை:-



எதை நீ படித்தாய் மறப்பதற்கு;

எதை நீ கவனித்தாய் அது புரியாமல் இருப்பதற்கு;

என்று நீ கல்லுரிக்கு ஒழுங்காக வந்தாய் !

வருகை பதிவு குறையாமல் இருப்பதற்கு;

எந்த பிகர் இன்று உன்னுடையதோ !

அது நாளை மற்றொருவராகிறது !

மற்றொரு நாள் அது வேறொருவராகிவிடும்...






Thanks to Baaneerjee!

Wednesday, August 8, 2012

கணவர் சந்தேகப்படுறாரு



வீட்டுக்காரருக்கு சந்தேகம்

பெண் : என்னோட கணவர் சந்தேகப்படுறாரு டாக்டர் !
டாக்டர் : அப்படின்னா மனநல மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்க
பெண் : டாக்டர் அவர் சந்தேகப்படுறதே நீங்க, போலி டாக்டரா இருப்பீங்களோன்னுதான்.! ...

சீரியல் பார்த்து தூங்கத்தான்

மகேஷ் : எங்க ஆபிஸ்ல புதுசா டிவி வாங்கியிருக்கோம்
சுரேஷ் : என்ன திடீர்னு?
மகேஷ் : தூக்கம் வராம கஷ்டப்படுறவங்க டி.வி. சீரியல் பார்த்து தூங்கட்டுமேன்னுதான். ...

பெட்ரோலை குடிச்சிட்டார்

பெண் : டாக்டர் என்னோட கணவர் நீங்க குடுத்த டானிக்கை குடிக்கிறதுக்கு பதிலா பெட்ரோலை குடிச்சிட்டார்
டாக்டர் : அப்புறம் என்ன ஆச்சு?
பெண் : நீங்க குடுத்த டானிக்கை வண்டிக்கு ஊத்திட்டார். ...

ஆர்டர் கொடுத்தா வந்திடும்

சுதா : ஹோட்டல் சர்வரை கல்யாணம் பண்ணிக்கிட்டது ஒரு விதத்தில நல்லதா போச்சுடி
மகா : ஏன் அப்படி சொல்றே சுதா : நான் ஆர்டர் செய்தா போதும் உட்கார்ந்திருக்கிற இடத்திற்கே எல்லாமே வந்திடும். ...

வயலின் மேதை

மாலா : உன்னோட கணவர் வயலின் மேதையாமே நல்லா வாசிப்பாரா?
கலா : அட நீ வேற!....
வயலைப் பற்றி ஆராய்ச்சி பண்றதாலே கிராமத்தில விவசாயிகள் அவரை அப்படி கூப்பிடுறாங்க. ...

எல்லாமே மங்கலா தெரியுது

மகேஷ் : கொஞ்ச நாளாவே எனக்கு எல்லாமே மங்கலா தெரியுது
சுரேஷ் : டாக்டரை பார்க்க வேண்டியது தானே?
மகேஷ் : பார்த்தேனே அவரும் மங்கலாத்தான் தெரிஞ்சார். ...

கேள்வி கேட்க கூடாது

அம்மா : இன்னிக்கு உனக்கு இன்டர்வியூதானே ஏன் போகலை
மகன் : நீங்கதானேம்மா நாலு பேர் கேள்வி கேட்கிற மாதிரி நடந்துக்கு கூடாதுன்னு சொன்னீங்க அதான் போகலை. ...

Thanks to One India.com

Tuesday, July 17, 2012

மாப்பிள்ளை அழைப்பு


ஏன் மாமா வீட்டிற்கு டி.வி. வாங்கலை?
 

பையன் படிப்பு கெட்டுவிடும் அதனால் டி.வி. வாங்கவில்லை.
 

பையன் எங்க மாமா போயிருக்கான்.?
 

பக்கத்து வீட்டிற்கு டி.வி.பார்க்க போயிருக்கான்.
---------------------------------
 

கல்யாண வீட்ல, ரொம்பநேரமா செருப்புகளை உத்து உத்து பார்க்கறீங்கேள, உங்க செருப்பை கானோமோ?
 

ம்ஹும், நல்ல டிசைன் செருப்பா தேடிக் கிட்டிருக்கிறேன
-----------------------------------
 

ஹேலோ அது நான் பார்த்து வெச்சிருக்குற செருப்பு, நீங்க வேற ஏதாச்சும் எடுத்துக்குங்க
 

அடப்பாவி இது என்னோட சொந்த செருப்புய்யா.
-------------------------------

மாப்பிள்ளை அழைப்பு எங்கியிருந்து ஆரம்பம்!
 

சென்டரல் ஜெயிலில் இருந்து.
--------------------------------------
ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
என்னாச்சி?
 

போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்ச!
---------------------------------------

நூறாவது


என் பர்ஸை பிக்பாக்கெட் அடிச்ச திருடன் கிட்ட இருந்து எனக்கு பார்சல் வந்திருக்கு! 

என்னன்னு!
 

அவன் அடிச்ச நூறாவது, பர்ஸ் என்னோடதாம். அதுக்காக எனக்கு ஸ்வீட் அனுப்பியிருக்கான்.
--------------------------------------
நம்ம கபாலி ரொம்ப சின்சியர்
எப்படி சார்?
நேத்து நைட் 12 மணிக்கு திருடிட்டு, ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமூல் கொடுத்துட்டு போறான்.
--------------------------------------

ஒரே வீட்ல பத்து தடவைக்கு மேலே திருடியிருக்கியே ஏன்?
நான் அவங்க பேமிலி திருடன் எஜமான்!
------------------------------
உன் பல்லழகைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல் இருக்குன்னு என் காதலிகிட்டே சொன்னது தப்பாப் போச்சு
 

என்னவாம்?
 

பார்த்துகிட்டே இருங்கன்னு சொல்லி பல்செட்டை கழட்டி என் கையில கொடுத்துக்கிட்டு போயிட்டாள்!.
------------------------------------

இங்கே ஒருத்தன் நாயா கத்திக்கிட்டிருக்கேன் எங்கடிபோன?
 

உங்களுக்கு பிஸ்கட் வாங்க தாங்க போனேன!
-------------------------------------
திடீரென்று செருப்புக்கடை வச்சிருக்கியே எவ்வளவு மூலதனம் போட்டே?
 

மூலதனம் உழைப்புதான் எதிரே இருக்கிற கல்யாண மண்டபத்தில் 7 வருடம் வாச்மேனாக வேலை பார்த்தேன்.
 -------------------------

அதே தப்பை தான் சார்


ஆசிரியர்: உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்ச?
 

கையை நீட்டு...?
 

நீங்களும் அதே தப்பை தான் சார் பண்றீங்க...!
---------------------
 

ஏண்டா லேட்டு...?
 

பள்ளிக்கூடம் மெதுவாக செல்லவும்னு போர்டு போட்டிருந்துச்சு சார்.
--------------------------------
ஏண்டா பக்கத்து பையனை பார்த்து பார்த்து பரீட்சை எழுதுற?
 

பரீட்சையை நல்லா பார்த்து பார்த்து எழுதுன்னு எங்க அப்பாதான் சொன்னார் சார்!
------------------------------------------
ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?
 

அது வாயில்லா பிராணி சார்.!
----------------------------
 

படிச்சு முடிச்சப்புறம் என்ன செய்யலாம்னு இருக்கே...?
 

புத்தகத்தை முடிவிடலாம்னு இருக்கேன் சார் !.
---------------
-----------------

மசாலா படம்


நான் நடிகையா இருக்கிறதாலேயோ என்னேவா, என் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் என்னை பார்த்துப் பயப்படறாங்க.
 

வீட்டுல இருக்கும் போது நீங்க மேக்கப் போட மாட்டீங்களோ என்னேமா.!
---------------------------
படம் போட்டதும் எல்லோரும் தும்முறாங்களே ஏன்?
 

மசாலா படம் ஆசசே!
--------------------------------
 

நான் சினிமாவுல புகுந்து பெரிய ஆளா வரமுடியாம ஒரு ஆளு தடை பண்ணிக்கிட்டிருக்கான்.
 

யார் அது?
 

ஏ.வி.எம். ஸ்டுடியோ வாட்ச்மேன்.
---------------------------------
 

கதாநாயகியோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு 
சொன்னேனே...! கேட்டீங்களா?
 

ஏன்யா...! என்னாச்சு?
 

பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க.
-----------------------
 

ஹீரோ சொந்த குரல்ல பாடியே தீருவேன்னு அடம் பிடிக்கிறாரு சார்!
 

சரி ஆம்பத்திலேயே ஒரு மந்திரவாதி வந்து அவரை 
கழுதையாமத்திடறது மாதிரி எடுத்திடலாம்.
----------------------------

தொடாம காதலிங்க


உங்க இதயத்துல ஒரு உருவம் உக்கார்ந்திருக்கிர மாதிரி எக்ஸ்ரேல தெரியுது.
 

ஒரு பொண்ணு என் இதயத்துல இடம் பிடிச்சுட்டானு சொன்னேல, அவளா இருக்கும் டாக்டர்.
--------------------------------------
அரசியல்வாதியின் மகளைக் காதலித்தது தப்பாப் போச்சு !
 

ஏன்?
 

காதலை வாபஸ் வாங்கிக் கொள்வேன் என்று அடிக்கடி மிரட்டுகிறாள்!
----------------------------------.
என்ன தொடாம காதலிங்க சுரேஷ் !
 

சரி சுதா கோவிச்சுக்காத, சுண்டல் வாங்கித் தர்றேன!
 

அப்ப சரி !
--------------------------------------
 

முன்னெல்லாம் என் லவ்வர் பீச்சுக்கு கூட்டிட்டு போனா கடலை வாங்கித் தருவாரு. இப்ப ரொம்ப மாறிட்டாரு!
 

இப்படி எப்படி?
 

கடலை காண்பிக்கிறதோட சரி!
________________________________
டார்லிங் நம்ம கல்யாணம்?
 

சுண்டல்காரனுக்கு தரவேண்டிய பாக்கி கடன் தீர்ந்ததும்.
------------------------------------------

30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...