Total Pageviews

Saturday, April 30, 2016

அஞ்சு மணிக்கே எழுந்து....................... !





வாடிக்கையாளர் : அரிசி 25 கிலோ எவ்வளவு அண்ணாச்சி ?

முதாலாளி : வாங்க அண்ணாச்சி வாங்க ! நீங்க ரெகுலர் வாடிக்கையாளர் ஆயிற்றே உங்களுக்கு கூடாவா சொல்லப்போறோன்.

 வேலை பார்ப்பவரிடம் அண்ணாச்சிக்கு அரிசி போடு, நான் 5 நிமிடத்தில் வந்துடுறேன் !

அரிசி அளப்பவர்: நீங்க நிறுவனத்தின் MD முதலாளியாக இருந்தால் ரூ.5000/- மேலாளராயிருந்தால்-ரூ4000/-, கணக்கப்பிள்ளையாய் இருந்தால் -ரூ2000/-, நீங்கள் காவலாளி அல்லது தோட்டத் தொளிலாளியாகவோ அல்லது பியூனாகவோ இருந்தால்- -ரூ1000/- மட்டுமே!  நீங்க யாரு?

வாடிக்கையாளர் : ஏம்பா இப்படி ?

அரிசி அளப்பவர்:  அரிசி விலையை  சம்பளம்  வாங்கும்  தகுதிக்கு ஏற்பத்தான்யா நான் நிற்னயம் செய்துள்ளேன் !

******************************************

சார், ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?

நோயோடதான்!

**********************************

சார் உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?

அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி !

******************************

ஆறு மணிக்கு, பெட் காபி குடிக்கலாம்னு ஆசையா மாடு வாங்கினேன்..."

"என்ன கஷ்டம் இப்போ?"

"அஞ்சு மணிக்கே எழுந்து அதுக்குத் தீனி வைக்க வேண்டியிருக்கே?"

************************************.

Wednesday, April 20, 2016

இலவசம் என்றால் .....................



கஞ்சன் 1 : ரொம்ப வெய்யில் தாங்க முடியலேன்னா என்ன செய்வீங்க?

 கஞ்சன் 2 : போய் ஏசி முன்னாடி உக்காருவேன்.

 கஞ்சன் 1 : அப்பயும் முடியலேன்னா?

 கஞ்சன் 2 : ஏசியை "ஆன்" பண்ணுவேன்.

*****************************
வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?

மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன்,

பட்டதுன்னா அவள் சிரிப்பா.

**********************************

இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...

அப்படியா?..

ஆமாம்!

இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...

***************************

இருபது கிலோ எடை குறைஞ்சது. !


நீதிபதி : நீ செய்த குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.

குற்றவாளி : எவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்?

****************************

மச்சான் நீயே சொல்லு, என்னைப்பாத்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?

அந்த பொண்ணுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.

*******************************
உன் மனைவி உடம்பைக்குறைக்க குதிரை சவாரி செஞ்சாங்களே, பலன் இருந்ததா?

ஓ இருந்ததே! இருபது கிலோ எடை குறைஞ்சது.

நெஜமாவா?

எடை கொறஞ்சது குதிரைக்குன்னு சொல்லவந்தேன்.

***********************************

காலில் என்ன காயம்?

செருப்பு கடித்து விட்டது!

பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?

*********************************
சார்! உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும்!  வீட்டுக்கு வரலாமா ?

ஐயய்யோ ! ! வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணா தீங்க ! ஆபீசுக்கே வந்துடுங்க ! ! ஒரு மணி என்ன,

ரெண்டு மணி நேரம்கூட பேசலாம் ! ! !

***********************

சுரங்கப் பாதை !

Pin by Selvaraj on JOKES | Comedy quotes, Funny comments, Funny quotess

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

ஏன்.. குடிச்சிட்டு வந்து ரொம்ப சண்டை போடறாரா..?

இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..!

***********************************************
மறுபடியும் நான் எப்ப வரணும் டாக்டர்?"

"பீஸ் கொடுக்க நூறு ரூபா சேர்ந்த பிறகு வாங்க போதும்"

***********************************************
"மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் வயசாகி இருக்கலாம்... அதுக்குன்னு பொண்ணுவீட்டுக்காரங்க இப்படிப் பேசக்கூடாது..."

"ஏன்...?"

"'மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்க...?'னு கேட்டா, 'பல்செட் போட்றோம்'னு சொல்றாங்க!"

*************************************************

தலைவர் : டாக்டருக்கு படிக்கலாம்னு இருந்தேன், பாதிலயே படிப்பை நிறுத்த வேண்டியதா போச்சு.

தொண்டர் : அப்புறம் ?

தலைவர் : அஞ்சாங் கிளாஸோட ஸ்கூல் லைஃப்புக்கு முற்றுப் புள்ளி வெச்சிட்டேன்

****************************************
தொண்டர்  : "உங்க ஆட்சியில் சுரங்கப் பாதைகளை அமைச்சதுக்காகவா இப்ப உங்க மேல் வழக்குப் போட்டிருக்காங்க ?"

தலைவர் : "ஆமா. என்னோட பெரிய வீட்டுல இருந்து, சின்ன வீட்டுக்குப்போய் வர்ற மாதிரி,

சுரங்கப் பாதைகளை அமைச்சிருந்தேன்!" அதான் !..................


*******************

(ரேஷன் கடையில்)

என்னப்பா இது.. அநியாயமா இருக்கு.. பட்டப்பகல்ல இப்படி மூட்டை மூட்டையா அவருக்கு அரிசி கொடுக்குறே..?

பின்னே.. அவரோட குடும்ப கார்டுல மொத்தம் 234 பேர் இருக்காங்களே..!? என்ன செய்ய முடியும் ?


*********************

Saturday, April 16, 2016

யாருங்க அந்த மகாலட்சுமி ?


61 Tamil comedy ideas | tamil jokes, comedy quotes, photo album quote


மனைவி : ஏழு! ஏழு! பிறப்பிலும் நான் உங்களுக்கு மனைவியாக பிறக்க வேண்டும்

கணவன் : எனக்கு இதுதாம்மா ஏழாவது பிறப்பு !

******************************

கணவன் : டார்லிங் உன்னோட பிறந்த நாளுக்கு நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு.

மனைவி : ஒரு கார் வாங்கிட்டு வந்திருக்கலாமே.

கணவன் : கார் கவரிங்ல வராதுடா டார்லிங்.

மனைவி : ??????

********************************

மனைவி : ஏங்க! ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினாராமே. நான் செத்தா நீங்க என்ன கட்டுவீங்கன்னு ?

கணவன் : உன் தங்கச்சியை கட்டுவேன்.

***********************************


மனைவி : இந்த காக்கா கத்தறதைப் பார்த்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது?

கணவன் : எப்படி சொல்றே?

மனைவி : எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்டே இருக்கே, அதவச்சுதான்..

***********************************


கணவன் : நாளைக்கு அம்மா வர்றாங்க டியர் !

மனைவி : என்ன விளையாடுறீங்கள? அவங்க வந்து 4 மாசம் தானே ஆச்சு. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற ஆட்டோக்காரனே இருக்க மாட்டான். நானேலேட்டாதான் எழுந்திருப்பேன். என்ன சமைக்கிறதுன்னு தெரியலை. 
 
அதுசரி எத்தனை நாள் அவங்க இங்க இருப்பாங்க?

கணவன் : வரப்போறது எங்க அம்மா இல்லை உங்க அம்மா !

மனைவி : அட அத நீங்க முதலியே சொல்லியிருக்கலாமே? 
 
எங்கம்மாவை பார்த்து 2 மாசம் ஆச்சு. ஆட்டோகாரங்க நம்பர் என்கிட்ட இருக்கு ஸ்டேசனுக்கு போய் அழைச்சுட்டு வரச் சொல்லனும். நாளைக்கு காலையில நல்ல டிபனா செய்யணும். இந்த முறையாவது அவங்களை நிறைய நாள் இருக்கச் சொல்லணும்.

கணவன் : ?!?!?!....

********************************************
கணவன் : இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...

மனைவி : யாருங்க அந்த மகாலட்சுமி ?

கணவன் : எங்க ஆபிஸ் ஸ்டெனோ கிரபர்...!

******************************

வாட்ஸ்அப்-ல அனுப்பியிருக்கா!''




'உன்னோட மருமக தீபாவளிப் பலகாரமெல்லாம் அனுப்பியிருக்காளா... பரவாயில்லையே!''

''அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்கிறே? எல்லாத்தையும்

வாட்ஸ்அப்-ல அனுப்பியிருக்கா!''

*********************************

மனைவி : ”என்னங்க, அழகான பொண்ணுங்களை எப்படி நினைக்கணும் ?”

கணவன் : ”உன் தங்கச்சியா நினை !”

*****************************
மனைவி :- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

கணவன் :- சொன்னேனே... மறந்துட்டியா...

மனைவி :- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...

கணவன் :- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..

மனைவி :-????????

*******************************

மனைவி : என்னங்க இது. நான் சொல்றதை இந்த கம்ப்யூட்டர் கேக்கவே மாட்டேங்குது...

கணவன் : கண்டிப்பா டார்லிங், ஏன்னா அது கம்ப்யூட்டர்.. உன் புருஷன் கிடையாது!

******************************

மனைவி : “வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா.... நீங்க பேசாம நிக்கிறீங்களே....“

கணவன் : “திரும்பி வரட்டும்.... பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன் பாரு.“

*********************************

ஊதுபத்தியெல்லாம் கொளுத்தி .................



மனைவி : என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க ..

கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று..

*********************

மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க !

கணவன் : ஒண்ணுமில்ல!

மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!

கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

************************************

மனைவி : உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல!  இட்லி தோசை போட்டா பிடிக்கல! உப்புமா போட்டா பிடிக்கல. . .

கணவன் : வேற என்னதான் போட்ட?

மனைவி : பேசாம பட்டிணி போட்டுட்டேன்.................

*************************************

மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?

கணவன் : ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?

*****************************

கணவன் : "வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல"

மனைவி : "தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே."

************************

30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...