Total Pageviews

Saturday, June 30, 2012

என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.


பொருட்காட்சியில்
 

ஒருவர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?

பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

ஒருவர்: நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.
----------------------------------

போலீஸ் அதிகாரி: இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்...

புகார் கொடுத்தவர்: என்ன ஸார் அநியாயமா இருக்கு... அப்ப என் தலையில முடி வளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?!
----------------------------
பையன்: பாட்டி! நா ஓட்ட பந்தயத்தில கலந்துக்க போறேன். ஆசீர்வாதம் பண்ணுங்க!

பாட்டி: பார்த்து மெதுவா ஓடுப்பா... வேகமா ஓடி கைய கால ஒடிச்சிக்காதே!!

---------------------------------
என்ன சார், இரயில் பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்ததா?”
 

“இல்லைங்க, upper Berth குடுத்துட்டாங்க. ரொம்பக் கஷ்டமாப் போச்சு”
 

“Lower Birth" காரங்க கிட்டே சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?”“
 

இந்த ஐடியா எனக்கு வராமப் போயிருக்குமா,
 

கீழ் பெர்த்திலே யாருமே இல்லை. யாரைக் கேக்கிறது?”
-------------------------------------------

“இந்தாப்பா, கொஞ்சம் சாம்பார் கொண்டா”

“அறிவு இருக்கா… யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?”

“சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?”

“நான் உட்கார்ந்துட்டேன்னா "டேபிளை" எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?”

----------------------------------------------

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...