மறதிக்கு பெயர் போன புகழ் பெற்ற ஓர் அறிஞர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் சோதனையாளர் பயணிகளிடம் டிக்கெட்டைக் வாங்கி பார்த்து விட்டு அந்த அறிஞரிடம் வந்து அவருடைய டிக்கெட்டை கேட்டார். அறிஞர் அதை வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருந்தார்.
அவர் யார் என்பதை அறிந்திருந்த டிக்கெட் சோதனையாளர் பரவாயில்லை நான் உங்களின் வார்த்தைகளை நம்புகிறேன். டிக்கெட் தேட வேண்டாம் என்று சொன்னார். அதற்கு அறிஞர் எனக்கு தற்போது பெரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. நான் இப்பொழுது எந்த ஊருக்கு போய்க் கொண்டிருக்கிறேன் என்பது தெரியவே அந்த டிக்கெட் எனக்கு இப்பொழுது தேவைப்படுகிறது.
பால் எப்போது வெட்கப்படும்?
அதன் ஆடையை எடுத்தப்பின்.
காலில் சுத்தின பாம்பு கடிக்குமா? கடிக்காதா?
ஏன் கேட்கிறே?
உங்க கால்ல ஒரு பாம்பு சுத்தியிருக்கேன்னு கேட்டேன்...!
இந்த காலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு
ஆமா சரியா சொன்னீங்க...
தெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வெச்சீங்க...!
நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ற?
பாபுஸ் பேஸ்ட்
நீ என்ன சோப் யூஸ் பண்ற?
பாபுஸ் சோப்
அது என் புது பிராண்டா?
அட பாபுன்றது என் ரூம் மேட்டோட பேருப்பா !.
No comments:
Post a Comment