இரண்டு போலீஸ்காரர்கள் ஏன் அந்த வாழை மரத்தை சுற்றி சுற்றி வருகிறார்கள்.
அங்கே கொலை விலை போகுதாம்.
லஞ்சம் கேட்டதால பொது மக்கள் சக்கையாய் பிழிஞ்சு எடுத்துட் டாங்களா, யாரை?
கரும்பு இன்ஸ்பெட்டரை.
ஹலோ.. போலிஸ் ஸ்டேஷனா? கேடி கபாலியை பிடிச்சி வச்சிருக்கோம்.. சீக்கிரம் வாங்க.
தப்பிச்சிடாம பார்த்துக்கோங்க... நிறைய மாமுல் பாக்கி இருக்கு...!
மாமூல் ரொம்ப பப்ளிக்கா மாறிடுச்சி.
ஏன் சலிச்சிக்கிறீங்க?
பின்னே என்னங்க? போலீஸ் ஸ்டேஷன்ல பாருங்க. விழா எடுத்து திருடனுக்கு மாமூல்
மாணிக்கம்னு இன்ஸ்பெட்டர் பட்டம் தர்றாரு.
திருடனுக்கும் போலீசுக்கும் என்ன வித்தியாசம்?
தொப்பைதான்.
என்னை கண்டு எல்லோரும் போலீஸ்னு நெனைச்சி பயந்துக்கிடுறாங்க.
ஆமா இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க...!
வாழ்க்கையிலே பல நாள் ஜெயில்லே கழிஞ்சு போச்சுன்னு வருத்தப்படுறீங்களே...!
என்ன தப்பு செஞ்சீங்க?
நீங்க வேற....! ஜெயிலராயிருந்தேன்...!
அந்த ஆபிசர் கமிஷன் வாங்கினது தெரிஞ்சு போச்சு.
அப்புறம்?
கமிஷனை விசாரிக்க ஒரு கமிஷன் போட்டாங்க.
பின்ன என்ன ஆச்சு?
கமிஷன்கிட்டே கமிஷன் கொடுத்து தப்பிச்சிட்டார்.
கள்ள நோட்டு அடிச்ச, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?
ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல,
கந்தசாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!
திருடன் - எதுக்கு என்ன ஜாமீன்ல எடுத்தீங்க..!
போலீஸ் - நீ உள்ள போனதிலேர்ந்து என்னோட மாமூல் வாழ்க்கை பாதிச்சிடுச்சி...!
----------------------------------------------------
No comments:
Post a Comment