வீட்டுக்காரர்: ஏம்பா வாரம் ஒரு தடவையாவது என் வீட்டுக்கு வந்து போப்பா!
திருடன் : எதுக்கு!
வீட்டுக்காரர்: என் மனைவி உன்னப்பார்த்து பயந்து நடுங்கறத வாரம் ஒரு முறையாவது பார்க்கனும்!
திருடன்: ??????
-------------------------------------------------
கணவன்: நம்மளை அடி அடின்னு அடிச்சுட்டு, திருடிட்டு போற திருடன் கிட்டே
என்னடி பேச்சு உனக்கு!
மனைவி: உங்கம்மா ஊர்ல இருக்கிறப்ப ஒரு தடை வந்துபோகச்சொன்னேன்!
-----------------------------------------------
எங்க ஆபீஸ்ல கூட்டி பெருக்க ஒரு ஆள் வேணும்..."
"முன் அனுபவம் இருக்கணுமா?"
"ஏதாவது ஒரு கம்பெனில அஞ்சு வருஷம் குப்பை கொட்டிருந்தா போதும்!"
------------------------------
கணவன் : எதுக்கு பக்கத்து வீட்டுக்காரியோட புடவையை வாங்கி கட்டிக்கிட்டு இருக்கே...?"
மனைவி: "அப்படியாவது நீங்க என்னைப் பார்த்து பல்லைக்காட்டறீங்களான்னு பார்க்கலாம்னு தான்...!"
---------
"மாப்ளே, ஒரு பஞ்ச் டயலாக் சொல்லு பார்ப்போம்''
"புலிக்குப் பின்னாடி போன மானும்
ஃபிகருக்குப் பின்னாடி போன ஆணும்
பிழைச்சதா சரித்திரம் இல்லை''
-----------------------