நீதிபதி : ஜவுளிகடையில் திருடுவதற்க்கு உன் மனைவியுடன் சென்றாயா!
திருடன் : ஆமாம் யுவர் ஆனார்!
நீதிபதி : உனக்கும் உனது மனைவிக்கும் ஆறு மாத கடுங்காவல் தண்டனை!
திருடன் யுவர் ஹானர், எனது மனைவிக்கும் திருட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை!
நீதிபதி : அப்புறம் ஏன் அவளை அவ்விடம் அழைத்துச்சென்றாய்!
திருடன் நான் எத்தனை கடைகளில் புடவைகளை திருடி கொடுத்தாலும்,
டிசைன் சரிய்ல்லை, பாடர் சரிய்ல்லை, கலர் சரியில்லை என்கிறாள்!
அதனால் தான் யுவர் ஆனர் புடவை செலக்சனுக்கு மட்டும் அவளையும்........................
----------------------------------------------------
மனைவி: என்னங்க தீபாவளிக்கு ஒண்ணுமே எடுக்காம எது கேட்டாலும் சிரிக்கிறீங்களே?
கணவன்: "நான் சிரிச்சா தீபாவளி ஹோய்..."
-------------------------------------------------------------
டேய் என் மாமனாருக்கு ரொம்பத்தான் குசும்புடா..
ஏன்டா.. அப்படி சொல்ற?
இந்த தீபாவளிக்கு, நானும் உங்க பொண்ணும் அலுங்காம, குலுங்காம போற மாதிரி ஒரு வண்டி வாங்கிக் குடுங்களேன்னு சொன்னதுக்கு
ரோடு ரோலர் வாங்கி வச்சிருக்கேன்னு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்காருடா.
---------------------------------------------------------
ஏம்பா தீபாவளி அதுவுமா நம்ம வீட்டு தெருவயே மொரச்சு மொரச்சு பார்த்துக்கிட்டு இருக்க?
இல்லடா.. போன தீபாவளிக்கு துணி எடுக்க போன உங்க அம்மா இந்த தீபாவளிக்காவது திரும்பி வீட்டுக்கு வராளான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்.
-----------------------------------------------------
No comments:
Post a Comment