டாக்டர் : நோயாளியிடம் இந்த ஆபரேஷன் சக்ஸா ஆகலைனா வருத்தப்படும் முதல் ஆள் நான்தான் !.
நோயாளி : ஏன் டாக்டர்.. .?
டாக்டர் : பின்னே... நீங்க இருக்கமாட்டீங்களே! ... நான் மட்டும்தானே வருத்தப்பட்டு ஆகணும்!
----------------------------
உங்க கணவருக்குக் குளிர் ஜுரம் .. அதனால நீங்க பக்கத்துல இருக்காதீங்க !
ஏன் டாக்டர் ?
நீங்க பக்கத்துல இல்லன்னா அவருக்குக் குளிர்விட்டுப் போயிடும் !
-----------------------------
ஹலோ டாக்டர், என் மாமியார் மூச்சு விட முடியாம ரொம்பக் கஷ்டப்படறாங்க!
டாக்டர் : உடனே இங்கே கூட்டிண்டு வாங்க !
இதோ, மேக்கப் போட்டுண்டு ஒரு மணி நேரத்துக்குள்ளே வரேன்!
----------------------------------
டாக்டர்.. . என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டற மாதிரி கனவு வருது.. .
இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா ?
மனைவி : ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி என்னை இல்லே மிதிக்குறாரு !உதைக்கிறாரு !
------------------------------
ச்சே... எப்போ பார்த்தாலும் மாமியாரைத் திட்டிக்கிட்டே இருக்கியே ! மனுசியா நீ !
நான் உங்க மாமியாரையா திட்டறேன்...? என் மாமியாரைத்தானே திட்டறேன் ?
---------------------------------