"டாக்டர் சார்! என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!"
""டாக்டர் :ஏன் என்னாச்சு?"
"அது ஒண்ணுமில்லை டாக்டர் என் கூந்தலில் இயற்கையாகவே மணம் இருக்கா இல்லையான்னு மோந்து பார்த்தார்!"
என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது! டாக்டர் !
அம்மா! நீங்கள் தலை குளித்து எத்தனை நாளாட்சு !
30 நாள் தான் ஆவுது சார் !
அதான் !
**********************************
எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்தவர் என்ன பண்றதுன்னு
தெரியாம ரொம்ப நேரம் திரு திருன்னு முழிச்சுகிட்டு இருந்தார் !
அப்புறம்?
புதுசுல்ல! அப்புறம், நான் தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்…!
*************************************
செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கல்கிரயம் இல்லைன்னு நகை வாங்கினது தப்பா போச்சு!"
"என்னாச்சு?"
"பேங்க்ல அடகு வைக்கப் போனப்ப இது தங்கமே இல்லைனு சொல்லிட்டாங்க"
************************************
"செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு..?"
"சின்ன சத்தம் கேட்டாகூட உடனே முழிச்சுப்பேன் சார்!"
************************************
சீரியல், சினிமா இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?
எடுக்கறவங்க அழுதா அது சினிமா ! பாக்கறவங்க அழுதா அது சீரியல் !
*************************************