Total Pageviews

Sunday, April 12, 2015

ஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை!



சுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு

வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார்.

 வழியில் சிக்னலுக்காக காத்திருந்தார். அப்போது ஒரு அசாரிரி ! நில் சிக்னல் போட்டவுடன் போகாதே !

இரண்டு நிமிடம் கழித்து செல் என்றது!

அவரும் அதே போல் செல்ல, இவருக்கு முன் சென்ற ஓருவர் லாரி மோதி பலியாகி விட்டதை கண்டு,

சற்று பதட்டத்துடன் அலுவலகம் வந்து சேர்ந்தார்.

இவரது அலுவலகம் 7வது மாடியில்,

லிப்டுக்குச் செல்ல உள்ளே புகும் நேரத்தில்,

ஒரு கை அவரை வெளியில் பிடித்து இழுத்து, வாருங்கள் நடந்தே செல்லலாம் என்றது.

வந்தவரும் சுரேசும் படிக்கட்டு வழியாக நடந்து 3வது மாடி செல்லும் போது லிப்ட் கம்பி

அறுந்து அதில் சென்ற 4 பேர் மரணம் !

சுரேஸ்  : அய்யா, நீங்கள் யார் ? என்னை ஏன் காப்பாற்றீனீர்கள் ?

வந்தவர் : நான் தான் கடவுள் !

சுரேஸ் : அப்படியா ! இப்போது வந்து காப்பாற்றினீகளே ! ஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை!

கடவுள் : உன் மனைவியின் பிரார்த்தனையே!  உன்னை அப்போதும், இப்போதும் காப்பாற்றியுள்ளது.

சுரேஸ் :  ஞேஏஏஏஏ!!!!!!!

4 comments:

  1. அருமை நண்பரே முடிவில் நல்லதொரு விடயமும்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!
    புதுவை வேலு

    ReplyDelete

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...