Total Pageviews

Monday, September 14, 2015

போலீஸ் வந்திருக்கு!!


கணவன்: பக்கத்து விட்டு அம்மணிக்கு தீபாவளி பலகாரம் கொடுத்தாயா ?

மனைவி: ஆமாங்க!! நிறைய கொடுத்தேங்க!!

கணவன்: வெளியே வந்து பாரு! போலீஸ் வந்திருக்கு!! கொலை முயற்சின்னு கம்ப்ளெயிண்ட் பண்ணி இருக்காங்க!!...

*********************
பெண் வீட்டார் :  எதுக்கு  வரதட்சணை பணத்தை கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே கேட்கிறீங்க..?.."

"மாப்பிள்ளை வீட்டார் : ” "மாப்பிள்ளையை ஜாமீனில் எடுக்க தான்..!,,"

*********************
ஜவுளி கடைக்காரர்: "ஐயாயிரம் புடவை வாங்கிட்டு, பத்தாயிரம் ரூபாய்க்கு பில் கேட்கிறீங்களே.. ஏம்மா ..?.."

பெண்: "பில்லை காட்டினா தான் புடவை ரூபாய் 10,000 /- பக்கத்துக்கு வீட்டுக்காரி நம்புவா...!.

*********************
ஒருவர் : வீட்டுக்குள்ளே தங்கத்தை புதைச்சு வச்சிருக்கேன்! அதை நீயே வச்சுக்கோ!!ன்னு வீட்டுக்காரன் சொன்னதை நம்பி வீட்டை வாங்கினதுனால, ஜெயிலுக்கு வர வேண்டியதாப் போச்சு!

மற்றொருவர் : எப்படிங்க?

ஒருவர் : அவன் வீட்டுக்குள்ளே புதைச்சு வச்சிருந்தது அவன் பொண்டாட்டி தங்கத்தை!!

*********************

2 comments:

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...