சென்சஸ் அதிகாரி; போன வருசம் நான் சென்சஸ் எடுக்கும் போது உங்க வயது 23ன்னு சொன்னிங்க !
இப்போ 18 வயதுன்னு சொல்லுறிங்களே !?
நடிகை: போன தடவ நான் துணை நடிகை, இப்ப நான் கதாநாயகியாச்சே! வயசு குறைத்தானே செய்யும்?
*********************************
ஆசிரமத்தில் :
குருவே பெண்ணாசை அறவே ஒழிய தாங்கள் எனக்கு அருள் புரிய வேண்டும் !
சிஷ்யா பின்ன எதுக்கு இந்த ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்த்தாய் ?
******************************
நீதிபதி : ஏன் பகலில் திருடுனே ?
திருடன் : தொழிலுக்கு வந்த பின் ராத்திரி பகல்னு பார்க்க கூடாதுன்னு என்னோட குரு சொல்லிருக்கார் , நான் 24x7 சர்விஸ் பண்ணுவேன் ஐயா!
********************************
தரகர் : மாப்பிள்ளை மெகாசீரியல்ல நடிக்கறார்..
பெண் : அப்ப மாப்பிள்ளை நிரந்திர வேலைல இருக்கார்னு சொல்லுங்க !
******************************************
நடிகர் : இது என்னோட மானப்பிரச்சனை விடமாட்டேன்னு சொல்றாங்களே என்னாச்சி ?
நடிகை : படத்துல நான் நடித்த குளிக்கிற ஸீனை சென்ஸார்ல கட் பண்ணிட்டாங்களாம்!
*******************************
தொண்டர் 1 : தலைவர் வீட்டுல ஆயிரக்கணக்குல செருப்பு இருந்ததுக்கு அதிகாரிங்க கணக்கு கேட்டாங்களாமே .. தலைவர் என்ன சொன்னார் ?
தொண்டர் 2: வாங்கினா கணக்கு காட்டலாம் , மேடைல வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதுன்னாராம் !
**********************************************
No comments:
Post a Comment