Total Pageviews

Saturday, June 18, 2016

மிகவும் வலு விழந்து இருக்கின்றான் !

Just to Relax


ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான்,  ஐயா!


******************************

மனைவி: டாக்டர் ஒரு மாதம் நல்ல மலைப் பகுதியான இடத்துக்குப் போய்ஓய்வெடுக்க சொல்றார். நாம எங்க போகலாம்?

கணவன்: வேற டாக்டர்கிட்ட போகலாம் !

***************************

வங்கி மேலாளர்: நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. 
 
மாசம் தவணை கட்டாததால நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.

நபர்: இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கி யிருப்பேனே!!


வங்கிமேலாளர்: .......ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!


************************************

ராமு : என் பையன் வாங்கியிருக்கிற 98% மார்க்கைப் பார்த்தா மெடிக்கல் கிடைக்குமுனு தோணுது...!

சோமு : கவலையே படாதீங்க, கண்டிப்பா கிடைக்கும்ண்ணே!

ராமு : இப்ப ஒண்ணாவதுல வாங்கியிக்கிறமார்க்கை தொடர்ந்து +2 வரை வாங்கனுமேனு தான் கவலையா இருக்கு...!


*****************************

கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?

மனைவி: நம்ம வீட்டு வேலைக் காரியைக் காணோம்.

நீங்களாவது ஆபீசில இருக்கீங்க ளான்னு............. பார்த்துட்டு போகத் தான் வந்தேன்!

*******************************

No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...