Total Pageviews

Tuesday, July 31, 2018

கோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு !




ராமூ   - என்னடா உதட்டெல்லாம் காயம்?

சோமு  - ஒன்னுமில்லடா மனைவி [wife] ஊருக்கு போறா ரயில் ஏத்திவிட்டு வந்தேன் !

ராமூ   - அதுக்கு.....?

சோமு  - சந்தோஷத்துல எஞ்சினுக்கு முத்தம் கொடுத்தேன் அதான்...!!

************

ஆசிரியர்: "என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"

 மாணவன்: "கொஸ்டீன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!

************

டாக்டர்: வாங்க , உட்காருங்க , சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க , நாக்க நீட்டுங்க.. திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சு விடுங்க....

 இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?

 வந்தவர் : ஒன்னுமில்லை டாக்டர் , என் மகளுக்கு கல்யாணம்... பத்திரிகை கொடுக்க வந்தேன்....!?!

************


மகன்: அப்பா... இந்த அப்ளிகேஷன்லே, 'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??.."

அப்பா: "ரொம்ப நீளம்னு எழுது..."

************
 நண்பர் 1 : உங்க மனைவி ஏன் எப்போதும் கோவமாவே இருக்காங்க?

நண்பன் 2 : கோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு ஒரு நாள் தெரியாம சொல்லிட்டேன் அதான் ..

நண்பர் 1 : ????
************
நண்பர் 1 : இன்னையில இருந்து நான்கு நாள் என் பொண்டாட்டிக்கு பயப்படரதில்லனு முடிவு பண்ணியிருக்கேன் ..

நண்பர் 2:ஏன் ?

நண்பர் 1 : நேத்துதான் என் பொண்டாட்டி ஊருக்கு போனா அதான்!

நண்பர் 2:?????

************
 கணவன் : ( மனைவியிடம் ) இன்னைக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வைச்சியா டி?

மனைவி : ஆமாங்க ஏன் கேக்குறிங்க ?

கணவன் : அதுவா தெரு ஓரத்துல ஒரு கருப்பு நாய் செத்து கிடந்தது அதான் கேட்டன்

மனைவி : ????

************

2 comments:

  1. பத்திரிகை கொடுக்க வந்தவருக்கு... ஹா... ஹா...

    ReplyDelete
  2. சந்தோஷத்துல எஞ்சினுக்கு முத்தம் கொடுத்தேன் சம்சாரத்தால பாதிச்சவனுக்கு இது ஒண்ணும் பெருங்காயம் இல்லை சாதாரண வெங்காயம்தான் ... My Web கிளிக்குங்க

    ReplyDelete

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...