Total Pageviews

Monday, November 24, 2014

பொய் கண்டு பிடிக்கும் எந்திரம் !

அது ஒரு பொய் கண்டு பிடிக்கும் எந்திரம்! 

யார் பொய் சொன்னாலும் சப்புன்னு கன்னத்தில் அறைந்து விடும்.

 அந்த ரோபோட் மெஷினை வாங்கி வந்தார் 

அப்பா. பிறகு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல். 

அப்பா - மகனே பள்ளி நேரத்தில் எங்கே போயிருந்தே...? 


மகன் - அப்பா நான் பள்ளியில்தான் இருந்தேன் அப்பா. 

ரோபோட் - "பளார்" மகன் - இல்லை அப்பா.. நான் எனது நண்பனின் வீட்டில் டிவிடி பார்த்தேன். 

அப்பா - என்ன பார்த்தே...? மகன் - குங்பூ பாண்டா ரோபோட் - "பளார்" 

 மகன் - சரி. சரி.. ஆபாசப் படம் பார்த்தேன்.. அப்பா - என்னது ஆபாசப் படமா..

 உன் வயசுல. ஆபாசப் படம்னா என்ன என்றே எனக்குத் தெரியாது தெரியுமா...?

ரோபோட் (அப்பாவுக்கு) - "பளார்" 

அம்மா - ஹாஹாஹாஹா.. 

அவன் உங்க பிள்ளைதானே. பின்ன எப்படி இருப்பான்.? 

ரோபோட் (அம்மாவுக்கு) "பளார்"

குப்புமி...

பயணி: பிளைட்டில் ஏறினதும் காதுக்கு வச்சுக்க பஞ்சு கொடுக்கறீங்களே! அதை அப்புறமா என்ன பண்ணறது? 

விமான பணிப்பெண்: ஒன்னும் கவலையில்லை சார்!


விமானம் திடீர்னு கீழ விழுந்துட்டா நாங்களே அதை எடுத்து உங்க மூக்கில் வச்சுருவோம் அதுக்குத்தான்! 


பயணி: ஞே ஞே ஞே ஞே !!!!
****************
ஒரு ஊரில் குப்புசாமி என்ற பெயரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சாகா வரம் பெற வேண்டும் என ஆசை. உடனடியாக கடவுளிடம் வரம் வேண்டி தவமிருக்கத் தொடங்கினார். 

குப்புசாமியின் தவத்தால் மனம் மகிழ்ந்த கடவுள் அவர் முன்னே தோன்றினார்.

  
கடவுள்: பக்தா என்ன வரம் வேண்டும் கேள்? 

குப்புசாமி: கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது. 


கடவுள்: சரி பக்தா அப்படியே ஆகட்டும். 

 குப்புசாமி ஹேப்பி....................

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது வழியில் ஒருவர் குப்புசாமியிடம் பேச வந்தார்.  

வழிப்போக்கர்: உங்க பேரு என்ன? 

 குப்புசாமி: குப்புமி... குப்புமி... குப்புமி... 

நீதி... பாவம், எவ்வளவோ முயற்சித்தும் கடைசிவரை குப்புசாமிக்கு "சா" வே வரலையாம்... நீதி: கடவுள் நம்மை விட புத்திசாலி

  Thanks to : http://tamil.oneindia.com/jokes/

Friday, November 21, 2014

அப்படி மட்டும் நடந்திருந்தா !







மனைவி: ஹூம்... உங்க கையில இருக்கும் மொபைலா பிறந்திருந்தா எப்பவும் உங்க கூடவே இருந்திருப்பேன்.

கணவன்: ஹூம்... அப்படி மட்டும் நடந்திருந்தா, மார்க்கெட்ல புது மாடல்கள் வரும்போது பழசை மாத்திக்கிற வாய்ப்பு எனக்கும் கிடைச்சிருக்குமே!!

*************
கணவன்: அடுத்த ஜென்மம்னு ஒன்னிருந்தா நான் பூனையா பிறக்கணும்னு ஆசைப்படறேன்.
 
மனைவி: பூனையாவா? ஏங்க?
 
கணவன்: பூனையைப் பார்த்தா மட்டும்தானே நீ பயப்படறே?
 

******


ஹன்சிகா மேத்வானி !







மனைவி: நான் பேசறது எதையுமே கேட்க மாட்டேங்கிறீங்க. இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுடறீங்க. ஏன் இப்படி இருக்கீங்க?

கணவன்: நீ கூடத்தான் நான் சொல்றது எல்லாத்தையும் இரண்டு காதுலேயும் வாங்கிட்டு வாய் வழியா விட்டுடறே. நீ ஏன் இப்படி இருக்கேன்னு நான் என்னைக்காவது கேட்டிருக்கேனா?

*******************

மனைவி: நீங்க எவ்வளவு குண்டாகிட்டீங்க தெரியுமா?

கணவன்: நீ கூடத்தான் குண்டாகிட்ட.

மனைவி: நான் அம்மாவாகப் போறேன். அதனாலதான் குண்டாயிருக்கேன்.

கணவன்: நான் அப்பாவாகப் போறேன். அதனாலதான் நானும் குண்டாகியிருக்கேன்.


********************

தன்னுடைய மடியில் படுத்திருக்கும் கணவனிடம்,

மனைவி: இப்போ உங்களுக்கு எப்படியிருக்கு?

கணவன்: நடிகை ஹன்சிகா மேத்வானி மடியிலே படுத்திருக்கிற மாதிரி இருக்கு!


**************
 







காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!




டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."

மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.

கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...

இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.  

மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு.

சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....

உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!

கணவன்: ஞேஏஏஏஏ!!!!!!!



Thanks to Oneindia.com


Thursday, November 13, 2014

தள்ளி வச்சுடறாரே...!



நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா
ஏன்?

விசாரணைய தள்ளி வைப்பது போல்

அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...!

*****************

இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி
ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க
முடியும்?

சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா
கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...!

*********************
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாசம் எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..

மனைவி: ?????


**********************

தூங்கிட்டு இருந்தாளே' !



உங்க சட்டை எப்பவும் பளிச்சுனு இருக்குதே எப்படி?”

“துவைக்கும்போது அவ என்ன நினைச்சுக்குவா…

அயர்ன் பண்ணும்போது நான் அவளை நினைச்சுக்குவேன்!”

சட்டை பளிச்சுனு ஆயிடும் !

***********************

காலிலே பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட ஆகலையே... எப்படி செத்தாரு?

விஷம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டாங்க..


*************************

"நேத்து என் மனைவியை செமையா திட்டிட்டேன்''

""நீங்க திட்ற வரைக்கும் அவங்க சும்மாவா இருந்தாங்க?''

""அப்ப அவ தூங்கிட்டு இருந்தாளே''

********************

""என் பொண்ணு பின்னால சுத்தாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?''

""கரெக்டா தெரியாது... சுமாரா முன்னூறு தடவை இருக்கும்.''

சரி!  நான் சுத்திர 50 பெண்களில்  உங்க பெண் பெயரன்ன ?

******************

30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...