Total Pageviews

Tuesday, November 17, 2015

ஒரு கிறுக்கு ! முறுக்கு சாப்பிடுது !




காவல் அதிகாரி: உங்களை கைது செய்கிறேன்...  வாங்க ஆஸ்பத்திரிக்கு...!

அரசியல்வாதி: எதுக்கு?

காவல் அதிகாரி: எப்படியும் ஜெயிலுக்குப் போனதும் நெஞ்சுவலின்னு, ஆஸ்பத்திரிக்குத்தானே போகப் போறீங்க. அதான் !.

********************************

இஞ்ஜினீயரிங் வகுப்பறையில்... ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம், என்னோட நண்பர் ஒருவர் திருச்சியில 25,000 ரூபாய் வாங்கிண்டு இருந்தார், இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கார் !

மாணவர்: என்ன கடனா?

ஆசிரியர்: ஹே............................... ! சம்பளம் தான் !


********************************

காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.

காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க !

காதலன்: ஒரு கிறுக்கு ! முறுக்கு சாப்பிடுது !

*******************************

"சென்னையிலே இந்த மழைக்காலத்திலும் தண்ணிக் கஷ்டமாமே?"

ஆமா! குடிகாரங்க பெருத்துப் போயிட்டாங்கலே!"

******************************

தொழிலாளி : ஐயா, எனக்கு ஏழு குழந்தைகள்... உற்பத்திக்கு ஏத்த படி சம்பளம் கூட்டிக் கொடுங்க !

முதலாளி : "அந்த உற்பத்திக்கெல்லாம் சம்பளம் கூட்டித் தரமுடியாது... பேக்டரியிலேயே உற்பத்தியைக் கூட்டினவங்களுக்குத்தான் சம்பளம் கூட்ட முடியும்."

******************************


Saturday, November 14, 2015

மழைக்கால நகைச்சுவை !



முதலாளி :  வேலைகாரரைப்பார்த்து, டேய் வேலா.. தோட்டத்துக்கு போய் எல்லா செடிகளூக்கும் தண்ணீர் ஊற்று !

வேலா: முதலாளி ஏற்கனவே மழை பெய்துக்கொண்டிருக்கிறது !

முதலாளி: அதனாலென்னா குடை பிடித்துக்கொண்டுபோய் தண்ணீர் ஊற்று..???

***************************************

புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான்.

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!??

அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...

******************************
பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே தலைவரை பேசவிட்டது, தப்பா போச்சுது…!

அப்படி என்ன பேசினார்?

பள்ளிக்கூடத்துப் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காத நானே பல கோடி சம்பாதிக்கும்போது,

பல்கலைக் கழகத்தில் படிக்கும் நீங்கள் பல்லாயிரம் கோடி சம்பாதிக்க வேண்டாமா?ன்னு பேசிட்டார்..!

***********************************
 ராமு : ஏதோ ….உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் மழை பெய்யுது ! “

சோமு : ”அப்படியா… நான் அவ்வளவு நல்லவனா ?

ராமு :  இல்லை ! உங்களை மாதிரி இல்லைனா !” ” நிறையவே மழை பெய்யும் ! “

*************************************
"நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர்கூட நனையவில்லை."

"அதெப்படி?" " அந்த நேரத்தில்தான் மழையே பெய்யவில்லையே!

*****************

சென்னையில் பலத்த மழை !



# சென்னையில் பலத்த மழை செய்தி #

சன் டிவி : சென்னையில் கடும் மழை !  மக்கள் அவதி !  ஸ்டாலின் கண்டனம் !

ஜெயா டிவி : சென்னையில் நல்ல மழை !  வறட்சி நீங்கியது! ஏறி குளங்கள் நிறைந்தது!மக்கள் மகிழ்ச்சி !

கலைஞர் டிவி: (பொதுமக்களில் ஒருவர்) " மழை பெயிஞ்சுகிட்டே இருக்கு! ...அதுக்கு இந்த அம்மா ஒண்ணுமே செய்ய மாட்டேன்குறாங்க!! "

கேப்டன் டிவி : இரு ஆட்சியிலும் முடங்கி கிடந்த சாலை பணிகளால், சென்னை சாலைகளில் கடும் வெள்ளம் ! மக்கள் அவதி !

வசந்த் டிவி : தமிழக காங்கரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் நிவாரண பணிகளில் தீவிரம் !

பொதிகை டிவி : (ரமணன் ) நாளை சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காண படும் ..சில இடங்களில் மிதமான மழையும்!  , ஒரு சில இடங்களில் பலத்த மழையும் , ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்ய கூடும் !

Friday, November 6, 2015

தீபாவளி நகைச்சுவை 4 !



வந்தவர் : ஐயா இல்லீங்களா...?

பெண் : என்ன விசயம்!

வந்தவர்:  தீபாவளி இனாம் வேணும்!

பெண் :  ஐயாவும் தீபாவளி இனாம் வாங்கத்தான் அடுத்த தெருவுக்குப் போயிருக்காரு !

******************************

மனைவி : என்னங்க இது தீபாவளியும் அதுவுமா இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே?

கணவர் : பின்ன நீ செஞ்சு வச்ச பலகார‌த்தை எ‌ல்லா‌ம் சா‌ப்‌பிட‌ணு‌ம்னா வேற எ‌ன்ன ப‌‌ண்றது சொ‌ல்லு?

***************************

மனைவி : கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தீங்களே. .. ஜோடிப் பொருத்தம் எப்படி ?

கணவர் : ஒரு செருப்பு கூட என் காலுக்குப் பொருந்தலை !

***************************

மனைவி  : எதுக்கு தீபாவளி சமயத்துல பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடறீங்க?

கணவர் : தீபாவளிப் பலகாரமெல்லாம் என் ஒருத்தனால செய்ய முடியாதே !

****************************  
 

தீபாவளி நகைச்சுவை 3 !


ட்டு:    "301, தலை தீபாவளிக்கு வர்ற எங்க மாப்பிள்ளையை.............."

காவலர் :  "வரவேற்கணுமா ஏட்டய்யா..?"

ஏட்டு: சும்மா மிரட்டி திருப்பி அனுப்பிடணும்..!"

**************************

மாமனார்    : கண்டிப்பா அடுத்த வருஷம் தீபாவளிக்கு மோதிரம் போடுறேன் மாப்ளே..."

மாப்பிள்ளை :  அப்போ மோதிரம் போட்ட பிறகே நான் ஊருக்குக் கிளம்பறேன் மாமா!"

************************

ராமு : "என்னடா இந்த வருஷம் உனக்கு தலை தீபாவளி தானே.. மாமனார் வீட்டுக்குப் போகலையா?"

சோமு : "அட! நீ வேற.. தலை தீபாவளிக்குப் போன என் மாமனாரே இன்னும் அவர் மாமனார் வீட்டுலத்தான் இருக்காருடா..."

*********************

தொண்டன் 1 : "நம்ம தலைவர் இன்னமும் புதுமாப்பிள்ளையாவே இருக்காரா... எப்படி?"

தொண்டன் 2 : "ஒவ்வொரு தீபாவளிக்கு முன்னாடி ஒரு திருமணத்தைப் பண்ணி தலை தீபாவளி கொண்டாடிடுறாரே!"

****************************

ராமு : "ஹைய்யா.. தீபாவளி வரப்பேகுது ஜாலின்னு கத்திக்கிட்டே போறாரே யாரு அவரு.."

சோமு : "பட்டாசுக்கடைக்காரரா?" "இல்லை... பிக்பாக்கெட் திருடன்."

************************

நம்பிக்கை துரோகம் !


செய்தி:  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  அரசு ரூ.400 கோடிக்கு மதுபானம் விற்க, இலக்கு நிர்ணயித்துள்ளது.

ரமேஷ் : என்னடா மாப்பிளே தீபாவளிக்கு ஊருக்கு போகலாயா ?

சுரேஷ் :  இல்லடா மாப்பிளே,  நம்மல நம்பி, அரசாங்கம் மதுபானம் விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 

அதுக்கு நாம நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது !

 

தீபாவளி போனஸ் !




தீபாவளி  செலவுக்கு காசில்லாம தவிச்சேன்....

அடிச்சான் பாரு பிரைசு...செம தூள். ... தேங்கூ பி எம் டபல்யூ...

பரிசை வாங்கிய உடனை சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இத படிக்கிற  எல்லா உறுப்பினர்க்கும் முதல்ல தீபாவளி போனஸ் குடுக்கனும் !


Thanks to R.P.Karthik

30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...