Total Pageviews

Tuesday, November 17, 2015

ஒரு கிறுக்கு ! முறுக்கு சாப்பிடுது !




காவல் அதிகாரி: உங்களை கைது செய்கிறேன்...  வாங்க ஆஸ்பத்திரிக்கு...!

அரசியல்வாதி: எதுக்கு?

காவல் அதிகாரி: எப்படியும் ஜெயிலுக்குப் போனதும் நெஞ்சுவலின்னு, ஆஸ்பத்திரிக்குத்தானே போகப் போறீங்க. அதான் !.

********************************

இஞ்ஜினீயரிங் வகுப்பறையில்... ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம், என்னோட நண்பர் ஒருவர் திருச்சியில 25,000 ரூபாய் வாங்கிண்டு இருந்தார், இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கார் !

மாணவர்: என்ன கடனா?

ஆசிரியர்: ஹே............................... ! சம்பளம் தான் !


********************************

காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.

காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க !

காதலன்: ஒரு கிறுக்கு ! முறுக்கு சாப்பிடுது !

*******************************

"சென்னையிலே இந்த மழைக்காலத்திலும் தண்ணிக் கஷ்டமாமே?"

ஆமா! குடிகாரங்க பெருத்துப் போயிட்டாங்கலே!"

******************************

தொழிலாளி : ஐயா, எனக்கு ஏழு குழந்தைகள்... உற்பத்திக்கு ஏத்த படி சம்பளம் கூட்டிக் கொடுங்க !

முதலாளி : "அந்த உற்பத்திக்கெல்லாம் சம்பளம் கூட்டித் தரமுடியாது... பேக்டரியிலேயே உற்பத்தியைக் கூட்டினவங்களுக்குத்தான் சம்பளம் கூட்ட முடியும்."

******************************


3 comments:

  1. ஜோக் அத்தனையும் சூப்பர். எல்லாமே புதுசு

    ReplyDelete
  2. முடிவில் சிந்திக்க வேண்டிய கேள்வி...

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் விமர்சனத்திற்க்கு நன்றி ! நண்பரே ! தாங்கள் எழுத்து பணி மற்றும் தகவல் தொழில் நுட்பப்பணி தொடர வாழ்த்துக்கள் !

      Delete

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...