Total Pageviews

Saturday, November 28, 2015

பயணிகளின் கனிவான கவனத்திற்கு !

பயணிகளின் கனிவான
கவனத்திற்கு
கடலூரிலிருந்து
பாண்டிச்சேரி வழியாக
சென்னை செல்லும்
படகு நான்காவது
பிளாட்பாரத்திலிருந்து
இன்னும் சற்று நேரத்தில் புறப்படத் தயாராக உள்ளது!
பயணிகள் அனைவரும்
தயாராக இருக்குமாறு
கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்!!"



Thanks to Sountha Manuel

Friday, November 27, 2015

விவசாயம் பண்ணப் போறேன்!



இளைஞன் : வன்முறை இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்க முடிவு பண்ணியிருக்கேன் சார்!

முதியவர் : வெரிகுட்! வெரிகுட்!! அதுக்கு நான் என்ன உதவி பண்ணனும்?

இளைஞன் : உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அவ்வளவு தான் சார்!

********************************

என்னடா மாப்ளே.... நம்ம தெரு ஜோசியருக்கு திடீர்னு மவசு கூடிருச்சு !!

எப்பவும் பெண்கள், கூட்டம் கூட்டமா போறாங்க !!! " அப்படி என்ன நல்லாவா குறி சொல்றாரு ???!! "
,
"ஆமாம் மச்சான்.. இப்பல்லாம் அவர் ஜோசியம் சொல்லிப்புட்டு கூடவே.. அடுத்த வாரம் மழை பெய்யுமா ? குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகுமா ? இல்லையா ?  மழை வருமா ? வராதான்னு !  சொல்லிப்புடுறாராம்!!!! ??? அதான் !

***********************************

சாப்பாட்டு பந்தியில் ராமு : “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…!”

சோமு : சாப்பாட்டை வாய்க்குள் திணித்துக் கொண்டே “அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உங்க எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…” நாந்தான் அது !

ராமு : “ஏங்க..! நீங்க மொய் வைக்கலை…?” .

சோமு : அட… போங்க தம்பி ! மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல… ! நான் ஏன் அவனுக்கு மொய் வைக்கணும்?”

ராமு  : அடப்பாவிப்பயலே ஓசில சாப்பிட வந்தவனாடா நீ..

*********************************

காவல் துறை அதிகாரியிடம் பெண் ஒருவர் : என்னைக் கண்டபடி திட்டி வாரம் ஒரு முறை மொட்டைக்கடிதம் வருது சார்!”

“காவல் துறை அதிகாரி : உங்களுக்கு யார் மேலாவது சந்தேகமா இருக்கா ?”

“பெண்  : நேர்ல திட்டுவதற்க்கு பயந்துகிட்டு !  என் புருசனே மொட்டை கடிதாசி எழுதுறாறோன்னு சந்தேகப்படறேன், சார்!”

***************************************

ராமு: மழை எப்போ நிக்கும்?

சோமு : ஏண்டா மாப்ள ! வயல்ல இறங்கி வேலை பார்க்க போறியா?

ராமு: இல்ல மாமு, மழை நின்னுடுச்சுன்னா,  ரோட்ட உழுது விவசாயம் பண்ணப் போறேன்!

************************************

முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?" 300 வது நகைச்சுவை பதிவு !




பிரதமர் : கடையில் என் படங்களை மட்டும் விற்க்கின்றாயே ! ஏன்?  மற்ற தேசத்தலைவர்கள் படங்களை எல்லாம் விற்க்க மாட்டாயா?

படம் விற்பவர் : தேசத்தலைவர்கள் / சினிமா நட்சத்திறங்கள் எல்லாப்படங்களும் விற்று தீர்ந்து விட்டது ! தங்கள் படத்தை தவிர !

*******************************************

வந்தவர் : உங்க கடைய இன்னும் எப்படி ஆக்ரமிப்புல இடிச்சு காலி பண்ணாம இருக்காங்க??

கடைக்காரர் : என்னய்யா சொல்றே??

வந்தவர் :  ஆமாங்க.. நீங்கதானே சொன்னீங்க ! திருச்சி மெயின்ரோடுல கடை வச்சிருக்கேன்னு..! அதான் !

******************************************

ராஜா : என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை !

மந்திரி : அப்படி என்ன பண்ணிட்டான்..?"

"ராஜா : என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டானே!

********************************
பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்.

டாக்டர்: எப்போ நடந்தது?

பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.

டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?

பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி உபயோகப்படுத்தினேன்,

டாக்டர் கோபமாக : இப்ப ஏன் வந்தீங்க ?

பேஷன்ட்:  இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு !

***************************

நடிகை : இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?"

டாக்டர் : "எதுக்கு?"

நடிகை : ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு!

***********************************


Thursday, November 26, 2015

காந்தி படம் சேகரிக்கப் போறேன்.. !




நண்பர்1:நான் சாப்பிடாம என் மனைவி சாப்பிடவே மாட்டாடா மச்சி ! என் மேல அவ்ளோ பாசம் அவளுக்கு!

நண்பர் 2: சில பேரு காக்காவுக்கு சோறு வைக்காம கூடத்தான் சாப்பிட மாட்டாங்க...! அதுக்காக காக்கா மேல காதல்னு எடுத்துக்க முடியுமா?

நண்பர் 1: ???? ...

*************************************

ராமு: சோமு, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி வருதில்ல... அதனால நான் காந்தி படமா சேகரிக்கப் போறேன்.. !

சோமு: நல்ல விஷயம்.. அதுக்கு நான் என்ன பண்ணனும்?

ராமு: உன்கிட்ட இருக்கற காந்தி படம் போட்ட 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டெல்லாம் எனக்குத் தந்தா ரொம்ப யூஸ் புல்லா இருக்கும்!

சோமு: !!!!





சந்தோஷம் தான்! ...




ஜோசியர் : உங்களுக்கு ஒரு தோஷம் இருக்கு... 

கல்யாணம் ஆனா அது நிச்சயமா காணாமப் போயிடும் !

ராமு: அப்படி என்ன தோஷம்?

ஜோசியர்: வேறென்ன சந்தோஷம் தான்! ...

**************************************

ரமா: ஆனாலும் இந்த கீதாவுக்கு பணத் திமிர் அதிகம் தான்...

பாமா: ஏன் என்ன பண்ணினா?

ரமா: தீபாவளிக்கு ‘பருப்பு' வடை சுட்டு, எல்லா வீட்டுக்கும் கொடுத்து விட்ருக்கா... ...

பாமா: ஏன் ?

ரமா: பருப்பு ஒரு கிலோ 180/-  உளூந்து ஓரு கிலோ 170/- நல்லெண்ய் 1 லிட்டர் 220/- ரூபாய்.

*****************************

நண்பர் 1: மனைவி, மழை - இந்த ரெண்டுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?

நண்பர் 2: தெரியலையேப்பா...

நண்பர் 1: இந்த ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்.... வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்....!

********************************

Wednesday, November 18, 2015

பென்சன் வாங்குறார் !


வேலைவாய்ப்பு அதிகாரி:  நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"

கல்லூரி மாணவர் : அப்பாவுக்குப் பதிவை புதுப்பிக்கணும் ! எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!" அதான் !
---------------------------------------------------

அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."

"ஏன்...?"

"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"

***************************************
தரகர் : பொண்ணு புண்ணியம் பன்னியிருக்குங்க! "மாப்பிள்ளைப் பையனுக்கு மாத வருமானம் இருபதாயிரம் !.

மாப்பிள்ளை வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டியதில்லை."

பெண்னின் தகப்பனார் : அப்படியா, என்ன வேலை?"

தரகர் : "ரிட்டயர்டு ஆகிப் பென்சன் வாங்குறார் !

*****************************

டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"

ரெண்டு நாளைக்கு அப்புறம் கெட்டு போயிடும்! எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும் !
-------------------------------------------------------------------------------------------

Tuesday, November 17, 2015

மழை விட்டு விட்டு பெய்யும் !




கணவன்: நமக்கு, டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் 1000/- ரூபாய் ஆகுது.

மனைவி: டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?

**************************************

எஜமானி:  நம்ம ஊர்ல 24 மணி நேர LOCAL நியூஸ் சானல் வரப்போகுதாம்.......

வேலைக்காரி: அதுக்காக என்னைய வேலையை விட்டு நீக்கிவிடாதீங்கம்மா.... !

****************************************

பாலு : வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்"

சீனு : "நாலு செண்ட் தான்"

பாலு : "ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே..!

************************************
ராமு : "டைம் இஸ் கோல்டுன்னு சொன்னா, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?"

சோமு: அதை அடமானம் வைக்க முடியாதே !

******************************************

கீதா: ஏன்டி.. டிவியில மழை விட்டு விட்டு பெய்யும்னு சொல்றாங்களே... ஏன் ?  தொடர்ந்து பெய்யாதா?

சுதா: வானத்துல மழைத் தண்ணி கம்மியா இருக்காம் ! அதான் நம்ம ஊர்ல கரண்ட் விட்டு விட்டு வர்ற மாதிரி மழையையும் விட்டு விட்டு பெய்யுமாம் !

********************************************

.

30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...