Total Pageviews

Friday, November 27, 2015

விவசாயம் பண்ணப் போறேன்!



இளைஞன் : வன்முறை இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்க முடிவு பண்ணியிருக்கேன் சார்!

முதியவர் : வெரிகுட்! வெரிகுட்!! அதுக்கு நான் என்ன உதவி பண்ணனும்?

இளைஞன் : உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அவ்வளவு தான் சார்!

********************************

என்னடா மாப்ளே.... நம்ம தெரு ஜோசியருக்கு திடீர்னு மவசு கூடிருச்சு !!

எப்பவும் பெண்கள், கூட்டம் கூட்டமா போறாங்க !!! " அப்படி என்ன நல்லாவா குறி சொல்றாரு ???!! "
,
"ஆமாம் மச்சான்.. இப்பல்லாம் அவர் ஜோசியம் சொல்லிப்புட்டு கூடவே.. அடுத்த வாரம் மழை பெய்யுமா ? குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகுமா ? இல்லையா ?  மழை வருமா ? வராதான்னு !  சொல்லிப்புடுறாராம்!!!! ??? அதான் !

***********************************

சாப்பாட்டு பந்தியில் ராமு : “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…!”

சோமு : சாப்பாட்டை வாய்க்குள் திணித்துக் கொண்டே “அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உங்க எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…” நாந்தான் அது !

ராமு : “ஏங்க..! நீங்க மொய் வைக்கலை…?” .

சோமு : அட… போங்க தம்பி ! மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல… ! நான் ஏன் அவனுக்கு மொய் வைக்கணும்?”

ராமு  : அடப்பாவிப்பயலே ஓசில சாப்பிட வந்தவனாடா நீ..

*********************************

காவல் துறை அதிகாரியிடம் பெண் ஒருவர் : என்னைக் கண்டபடி திட்டி வாரம் ஒரு முறை மொட்டைக்கடிதம் வருது சார்!”

“காவல் துறை அதிகாரி : உங்களுக்கு யார் மேலாவது சந்தேகமா இருக்கா ?”

“பெண்  : நேர்ல திட்டுவதற்க்கு பயந்துகிட்டு !  என் புருசனே மொட்டை கடிதாசி எழுதுறாறோன்னு சந்தேகப்படறேன், சார்!”

***************************************

ராமு: மழை எப்போ நிக்கும்?

சோமு : ஏண்டா மாப்ள ! வயல்ல இறங்கி வேலை பார்க்க போறியா?

ராமு: இல்ல மாமு, மழை நின்னுடுச்சுன்னா,  ரோட்ட உழுது விவசாயம் பண்ணப் போறேன்!

************************************

No comments:

Post a Comment

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...