ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!
டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!
நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.
---------------------------
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்’ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.
அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
-----------------------------
புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை: இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்.
மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது வாண்டு பாபு மட்டும் நாற்காலியின் மீது ஏறி நின்றான்.
ஆசிரியை: பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே...
வாண்டு பாபு: இல்லை டீச்சர் நீங்க மட்டும் தனியாக நிக்கறீங்க. எனக்கு நொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிக்கிறேன்!
----------------------------------------
ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்னஆகும் ?
மாணவன்: (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.
-------------------------
மகன் : அப்பா.... நான் கணக்குல 100 மார்க் வாங்கினா நீங்க என்ன சொல்வீங்க?
அப்பா : அப்படியா.. நீ மட்டும் அப்படி வாங்கிட்ட, சந்தோஷத்துல எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தாலும் வந்துடும்.
மகன் : நல்லவேளை நான் உங்க உயிரை காப்பாத்திட்டேன். கணக்குல 30 மார்க் தான் எடுத்தேன்!
=================