Total Pageviews

Tuesday, September 23, 2014

என் வயிறு ஒழுகுதான்னு



வன் : எங்க அம்மாவுக்கு ஏன் சாப்பாடு போடலை?
 
மனைவி:அவங்கதாங்க இனிமே நான் வாயே திறக்கப்போறதில்லைனு சொல்லிட்டாங்களே !
 _________________


நோயாளி : சிஸ்டர், எனக்கு வயித்தில ஆபரேஷன் பண்ணியாச்சில்ல?
சிஸ்டர் : ஆமா,
நோயாளி : தையல் எல்லாம் ஒழுங்கா போட்டாச்சா?
சிஸ்டர் : போட்டாச்சு !
நோயாளி : ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க.. என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பாக்கனும். 

-------------------------------

நோயாளி : (டாக்டரிடம்) அடிக்கடி என் கனவிலே யானை வருது டாக்டர் பயமா இருக்குது!

டாக்டர் : ஒரு மாத்திரை தர்றேன் சாப்பிடுங்க. கூடவே யானை பாகனும் வருவான்பிறகு பயமே இருக்காது !


-------------------------------------------

  அப்பு : ''இந்த ஊர்லயே எங்க கிளினிக் தான் சகல வசதிகளும் நிறைஞ்ச கிளினிக்.''
சுப்பு: ''எப்படிச் சொல்றீங்க?''
அப்பு : ''நீங்களே பாருங்களேன். பக்கத்திலேயே தந்தி ஆபீஸ் இருக்கு!. எதிரிலேயே புரோகிதர் வீடு இருக்கு! . இவ்வளவு ஏன் சுடுகாடு கூட நடக்கிற தூரத்துலதான் இருக்கு!''
சுப்பு: !!!!! 

------------------------

''ஆபீஸ்ல எனக்கு மாத சம்பளத்துக்கு பதிலா தினக்கூலி தந்தா நல்லாயிருக்கும்!''

''எதுக்கு?''

''என் மனைவிகிட்ட எனக்கு ஒண்ணாந்தேதி மட்டும்தான் மதிப்பு இருக்கு!''

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...