டாக்டர்: நோயாளியிடம், ஏம்பா.. எதுக்கு நர்ஸ் கையை தடவி பார்க்கிரற..?
நோயாளி: நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!
டாக்டர்: (மைன்ட் வாய்ஸ்ல்) நல்லவேளை இடுப்பில் ஊசியை போட சொல்லலை!!
இல்லாட்டி இடுப்பல்ல.. தடவிபார்த்திருப்பான் !
************************
மனைவிக்கு காது கேட்கவில்லை
கணவன் : 10 அடி தொலைவில் நின்றுகொண்டு "சமையலறையில் என்ன செய்கிறாய்" என்று ராமு கேட்கிறார். பதில் வரவில்லை.
மறுபடியும், 5 அடி முன்னே சென்று அதே கேள்வியை கேட்டபோதும் பதில் கிடைக்கவில்லை.
மனைவியின் மிக அருகே சென்று நின்றுகொண்டு, மீண்டும் அதே கேள்வி.
மனைவி : "சிக்கன் சமைக்கிறேன்ங்க.. இத்தோடு மூன்றாவது முறை சொல்லியாச்சு" உங்க காத சரி பண்ணுங்க! எத்தனை தடவதான் சொல்வது என்று சலித்துக் கொண்டார் ராமுவின் மனைவி.
*********************
பிரச்சனை
பெண்: என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டா உங்க எல்லா துக்கத்திலும் நான் பங்கெடுத்துக்குவேன் !
ஆண்: சந்தோசம்...
ஆனா, எனக்கு இப்போ ஒரு பிரச்சனையும் இல்லையே....
பெண்: நீங்க இன்னும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே...
கல்யாணம் மட்டும் செஞ்சு பாருங்க! எல்லாமே உங்களூக்கு பிரச்சனைதான் !
ஆண்: ஞே ஞே ஞே!!!!!
*********************
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?
20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்) அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?
மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து "மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?"
என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?
கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????
எனக்கு இன்று முதல் விடுதலை கிடைக்குமா!
இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!
நன்றி
thatstamil.com