Total Pageviews

Friday, November 7, 2014

அவர்தான் உங்க சம்பந்தியா இருக்கணும்




நபர் 1 : நேத்து நீங்க காரில் போகும்போது விபத்தாயிடுச்சாமே.. எப்படி ஆச்சு ?

நபர் 2 : அதோ, அங்கே ஒரு மரம் இருக்கே உங்களுக்குத் தெரியுதா?

நபர் 1 : தெரியுதே!

நபர் 2 : அது நேத்து எனக்கு காரில் வரும்போது தெரியலைங்க!

******************

டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்கினால் போதும்.

மாணவன்: அது எப்பிடி டீச்சர் முடியும்?

ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம்தானே ஸ்கூல் நடக்குது!

*****************

ஒருவர்: நம்ம ராமசாமி திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம்....

மற்றொருவர்: அப்ப ராமசாமியை அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு சொல்லுங்க!

********************

நபர்: சார்! என்னோட பொண்ணைக் காலையிலேருந்து காணல! புகார் கொடுக்கணும்.

போலீஸ்: அதோ போறாரே, அவர்கிட்ட முதல்ல போய்ப் பேசுங்க!

நபர்: என்ன சார் நீங்க... பொண்ணக் காணலைன்னு சொல்றேன்... நீங்க என்னடான்னா அவர்கிட்ட போய்ப் பேசச் சொல்றீங்க? எதுக்கு நான் அவர்கிட்ட பேசணும்?

போலீஸ்: அவர்தான் உங்க சம்பந்தியா இருக்கணும். ஏன்னா, அவரோட பையனைக் காணோம்னு இப்போத்தான் புகார் கொடுத்துட்டு போறாரு. அதான் !

***********************

No comments:

Post a Comment

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...