மனைவி : "என்னத்த ரொம்ப நேரமா தேடுறீங்க... கண்ணாடியப் போட்டுக்கிட்டுத் தேட வேண்டியதுதானே?"
கணவன் :அந்தக் கண்ணாடியத்தான் எங்கே வச்சேன்னு தேடிக்கிட்டுருக்கேன்!"
*************************
நிருபர் : மின்சாரம் தாக்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?''
'வாசகர்: அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!''
**************************
மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..
அப்பா : Very Good.., பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல சாதிக்க போற.....
மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு பையன் "சாதிக்"-ஐ விரும்பறேன்.......
*************************
ஆபீஸ் பியூன் கிட்டே சண்டை போட்டது தப்பாப் போச்சு..?
ஏன் .. என்னாச்சு..?
சம்பள உயர்வு வந்ததை வீட்டுல போட்டுக் கொடுத்துட்டான் பரதேசி..!
_________________
ஒரு மருந்துக் கடையில் பெண்ணும் கடைக்காரரும்..
அய்யா சயனைட் இருக்கா..?
என்ன..? சயனைடா.. எதுக்கு..?
என் கணவனை கொல்லுவதற்கு..
அதெல்லாம் நாங்கள் தரக்கூடாது..அப்புறம் ரெண்டு பேரும் சிறைக்கு போகணும்..
இதைப் பாருங்க.. அப்புறம் சொல்லுங்க..( ஒரு புகைப்படத்தை காட்டுகிறாள்.. அதில் அவள் கணவனும் மருந்து கடைக்காரர் மனைவியும் ஒன்றாக உணவகத்தில் இருக்கிறார்கள்)
ஏம்மா.. மருந்து சீட்டு (prescription) இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா..? இந்தா வாங்கிட்டு போ..!