ஓனர் : "வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?"
குடியிருப்பவர்: "சம்பளம் கைக்கு வந்ததும்..."
ஓனர் :"சம்பளம் எப்போ கைக்கு வரும்?"
குடியிருப்பவர்:"கேனத்தனமா கேக்காதீங்க... சார், நான் வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"
ஓனர் : அடப்பாவி !
____________________
பேராசிரியர் : "ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?"
மாணவர் : "சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ! ஓரே இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு ! அதான்.......!
____________________
"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏண்டா?"
என் மனைவி சொன்னா எங்க அம்மா, "கேரட் அல்வான்னா உயிரையே விட்டுடுவாங்கன்னு. அதான்..... !
------------------------------------
கல்யாணத்திற்க்கு வந்தவர் : "என்ன.. கல்யாண சீர்ல எல்லாம் பித்தளை பாத்திரமாவே இருக்கு?"
மாமனார் : "ஹி..ஹி.. மாப்பிள்ளைக்குப் பேரீச்சம்பழம் ரொம்பப் பிடிக்குமாம்.. அதான்..!"
__________________________
கண்டக்டர் : படிக்கட்டில் தொங்கும் தம்பிகளா, உள்ளே வாங்கப்பா...
மாணவர்கள்: ஏன் சார் இதே தொல்லையா போச்சே!.
கண்டக்டர் பஸ்சுக்குள்ளே நாம ஏறினாலும், பஸ் நம்ம மேல ஏறினாலும் 'டிக்கெட்' வாங்கப் போறதென்னவோ நாமதானே?... அதான்.... !
_______________________
ரசித்தேன் நல்ல வெடிகள் அருமை நண்பரே....
ReplyDeleteபேரீச்சம்பழம் ஹா... ஹா...
ReplyDelete