Total Pageviews

Saturday, July 11, 2015

சந்தோசமான செய்தியை தாங்க கூடிய சக்தி !



மனைவி:- இனி ஒரு நிமிஷம் கூட என்னால, உங்களோடு சேர்ந்து வாழ முடியாது! அதனால நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!

கணவன்:- அந்த நிமிஷமே நானும் என் உயிரை விட்ருவேன்!

மனைவி:- நீங்க எதுக்காக சாகணும்?

கணவன்:- எந்த ஒரு அதிக சந்தோசமான செய்தியையும் தாங்க கூடிய சக்தி என் இதயத்திற்கு இல்லேண்ணு டாக்டர் சொல்லி இருக்கார்!

மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?

***************************************

மனைவி: டிபன் வேணுமா?  சாப்பாடு வேண்டுமா ?

கணவன்: ஏதாவது சாய்ஸ் இருக்கா?

மனைவி: ரெண்டு இருக்கு!

கணவன்: என்னன்ன?

மனைவி: சாப்பாடு வேணுமா? வேண்டாமா?

********************************

கணவன்: நெஞ்சு வலிக்குது டாக்டருக்கு போன் பண்றியா!

மனைவி: உங்க செல்போன் பாஸ்வேர்ட் சொல்லுங்க?

கணவன்: இப்ப நெஞ்சு வலி பரவால்ல, போன் பண்ணவேண்டாம். !

****************************

ஐயா. .. ரெண்டு கண்ணும் தெரியலே சாமி.. .ஒரு பத்து ரூபா பிச்சை போடுங்க சாமி!.

ஏண்டா பொய் சொல்றே.. . உனக்குத்தான் ஒரு கண் நல்லா தெரியுதே !

யோவ்..அப்போ  ஒரு 5 ரூபாவாவது போட்டு போய்யா !

************************

 கணவன் : ஆஹா…நான் உதைச்சி ஸ்டார்ட் ஆகாத வண்டி நீ உதைச்சதும் ஸ்டார்ட் ஆகிடிச்சே…!.

மனைவி:  ஹி..ஹி…உங்கம்மாவ நெனச்சு உதைச்சேங்க.. அவ்ளோதான். !!

***********************

அனிதா: எதற்கெடுத்தாலும் எதிர்வாதம் பண்ணுவாளே உன் மாமியார்…இப்ப எப்படி இருக்காள்..?

புனிதா: பக்கவாதம் வந்து படுத்துட்டாள்…!

*************************

பெயில்- bail !



தொண்டர்: "தலைவரே.. உங்க பையன் 
பரிட்சையிலே 'பெயிலா' யிட்டான்னு சொன்னா, எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்க சொல்லறீங்க..!.."

தலைவர் : "ம்ம்..'பெயில்' (bail) கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தாண்டா தெரியும்..!.."
 
தொண்டர்:  அனுபவம் பேசுது !
******************************
 
ராமு : “பொண்டாட்டிக்கு ஆசையா ஒரு புடவை வாங்கித்தர முடியலைடா” என்ன வாழ்க்கை!
 
சோமு : “ஏன்டா, காசு இல்லையா?”

ராமு : போடா! பொண்டாட்டியே இல்லைடா”!
 
********************
 
மனைவி:- என்னங்க! இனி மேல் உங்ககம்பெனியில் இருந்து இரவு வெளியே தங்கற மாதிரி வேலை கொடுத்தாங்கன்னா மாட்டேன்னு சொல்லிடுங்க...! நீங்க இல்லாம என்னாலநிம்மதியா தூங்க முடியலீங்க!

கணவன்:- அடிக்கள்ளி! என் மேல உனக்கு அவ்ளோ பிரியமா..?

மனைவி:- ஒரு மண்ணும் இல்ல! தினமு‌ம் உங்களோட புலி உறுமற மாதிரியான குறட்டை சத்தத்தைக் கேட்டு தூங்கி பழகிட்டதனால,
அந்த சத்தம் இல்லாம தூக்கமே வரமேட்டேங்குது! அதான்!

கணவன்:-? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
***************************

வந்தவர் : பணம் தரணும் அப்பா இருக்காங்களா?
 
சிறுவன்: நீங்க தரணுமா? அப்பா தரணுமா?
 
வந்தவர் : நான்தான் தரணும்..!
 
சிறுவன்: எங்கிட்டே குடுங்க, நான் குடுத்துடறேன்..!!
 
வந்தவர் : உங்க அப்பா தரணும்னா?
 
சிறுவன்: வெளியூர் போயிருக்காரு, எப்ப வருவார்னு தெரியாது…!!!
 
********************************

Friday, June 5, 2015

ஆட்சி மாற்றம் !



ஏம்பா, இவ்வளவு குப்பையும், கூலமாக, துர்நாற்றமாக உள்ள இந்த வீட்டில் இருப்பவர் யாரப்பா ?

நம்ம சுகாதாரத்துறை அதிகாரிதான் !

************************

செய்தி : ஆட்சிக்கு வந்த நாலாவது  ஆண்டில்  41வது முறையாக வெளி நாடுகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பயணம் !

நிருபர் : அடிக்கடி வெளி நாடுகளுக்கு சுற்று பயணம் செய்கின்றீர்களே ஏன்?

அமைச்சர் : இந்த முறை ( 5 ஆண்டுகளில்)  இன்னும் 19 நாடுகளின் சுகாதாரத்தை அறிந்து கொண்டு,
 அடுத்த முறை மக்கள் எம்மை தேர்ந்தெடுத்தால்  உலகத்திலேயே சுகாதரத் துறையில் நம்பர் 1 நாடாக மாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்!

நிருபர் : கடந்த முறையும் இதே தான் சொன்னீர்கள், இந்த முறையும் இதையே சொல்கிறீகளே !

அமைச்சர் : எனக்கு ஒரு சொல்! ஓரு வார்தை! மாறி மாற்றி பேசுபவன் நானல்ல!

************************************

விருந்தாளி :  உன் மகன் என்னப்பா செய்கிறார் ?

தந்தை : அதுக்கெல்லாம் தண்ணி தெளிச்சி அனுப்பி ரெம்ப நாளச்சி !

அப்போது வந்த மகன் :  எனக்கு தெளிச்ச தண்ணிய செடிகளுக்கு தினமும் தெளிச்சிருந்தா இன் நேரம் பெரிய மரமாகி இருக்குமேயப்பா !

***********************************

கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை !.

மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்!

*************************************

தலைவர்: ஆளே இல்லாத இடத்துக்குப் போய் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கணுமே…எங்கய்யா போகலாம்..?

தொண்டர் : நம்ம கட்சி ஆபிசுக்குப் போகலாம் தலைவரே…!

******************************

நிருபர் : 5 வருடத்திற்க்கு ஒரு முறை கட்சி மாறினாலும் எப்போதும் மந்திரியாகி விடுகீறீர்களே!  எப்படி !

மந்திரி:  மக்கள் 5 வருடத்திற்க்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை விரும்பும் போது நான் என்ன செய்ய முடியும் ! இதைத் தவிர !

Wednesday, June 3, 2015

புனிதம் !



காதலி : நம்ம காதல் புனிதமானது சிவா !'

காதலன் : 'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !

*************************

பிறந்த நாளுக்கு நம்ம தலைவர், கைதிகளுக்கு இனிப்பு கொடுக்க போனப்ப, வார்டனுக்கு ஏதுக்கு ரெண்டு லட்டு அதிகமா குடுத்தாரு? ஏன் தெரியுமா  ?

'தலைவர் பழசை மறக்காதவர்' அதான் !

*******************

ராமு : உங்க சம்சாரத்துக்கு நீங்க மரியாதை தர்ற மாதிரி அவங்க உங்களுக்குத் தருவாங்களா ?'

சோமு : 'ம்...... ’அவ மரியாதை’ தருவா ?'

*******************************

டாக்டர் : ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !'

நோயாளி : 'ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?'

டாக்டர் : ''நீங்க சாப்பிட வேண்டிய அவசியமிருக்காதுன்னு  நினைக்குறேன் !

**************************
தலைவரே !.. எதிர்க்கட்சி தலைவருக்கு நீங்களே உங்க சொந்தச் செலவுல ஏன் சிலை வக்கிறீங்க ?

நடுரோட்ல உன்னை நிறுத்திக் காட்டறேன்னு சாவால் விட்டிருக்கேனே?  அதான் !

************************


ஏதோ கதை இருக்குன்னு ........ஜனங்க நம்புவாங்க !'



காவல் துறை அதிகாரி : யோவ்! நான் இல்லாதப்ப புகார் தர வந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியமே?'

காவலர்  : 'நீங்கதானே அய்யா, உங்க வேலையையும் சேர்த்து என்னை பார்க்க சொல்லிட்டு போனிங்க!' அதான் !

**************************

நர்ஸ் : ஆப்ரேசன் தியேட்டலேர்ந்து நோயாளி ஏன் பயந்து ஒட்றாரு?..'

வார்டு பாய் : 'ஆப்ரேசன் தியேட்டர் உள்ளே ’கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே’ அப்படின்னு  டாக்டர் எழுதி வச்சிருக்காரே!' அதான் பயந்து ஒடுறார் !

*************************

காதலன் : டார்லிங்! நமக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும்னு கோயில்ல நேற்று பிரார்த்தனை செய்தேன் பலிக்குமா?'

காதலி : 'அம்பது சதவிகிதம் பலிச்சிடுச்சி! வீட்ல எனக்கு வாத்தியார் மாப்பிள்ளை பார்த்துட்டாங்களே!

***************************

சினிமா இயக்குனர்: இந்தக் கதையை சினிமாவா எடுக்க நான் பத்து வருடம் தவம் இருந்தேன் !'

தொலைக்காட்சி நிருபர் : ஏன் ?

'சினிமா இயக்குனர்: இதே கதையை வெச்சு, இதுக்கு முந்தி வந்த படத்தை ஜனங்க மறக்க வேண்டுமா?' அதான் !

**************************

தொலைக்காட்சி நிருபர் : எதுக்கு நீங்களே ஒரு ஆளை செட் பண்ணி ’உங்க படத்தோட கதை என்னோடது’ன்னு கேஸ் போட வெச்சிருக்கீங்க ?'

'சினிமா இயக்குனர்: அப்பதானே படத்துல ஏதோ கதை இருக்குன்னு ஜனங்க நம்புவாங்க !' படம் பார்க்க வருவாங்க ! அதான் !

******************************


Thursday, May 28, 2015

அதான் ! கார் வாங்கித் தரத சொல்லிட்டங்கல்ல !





காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க…?

காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார் !

*****************************

மாப்பிள்ளையின் தாய் : தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படிச்  செய்யலாமா..?

தரகர் : ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

மாப்பிள்ளையின் தாய் : பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?

தரகர் : அதான் !  மாப்பிள்ளைக்கு கார் வாங்கித் தரத சொல்லிட்டங்கல்ல ! அப்புறம்மென்ன ?

மாப்பிள்ளையின் தாய் : அப்பச்சரி !

***********************

அம்மா: எதற்காக செல்லம் அழுதுக்கிட்டே வர்ற…?

சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கும் போது சுத்தி தவறி அவர் கையில் பட்டுவிட்டதும்மா..

அம்மா: இதற்கு போய் அழலாமா, நானா இருந்தா சிரிச்சி இருப்பேன். !

சிறுவன்: நானும் அதைத்தான் செய்தேன்! அதுக்கு போய் அடிச்சுட்டாரே !

******************************

போஸ்ட்மார்ட்டம்!



டாக்டர்-“சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை.”

நர்ஸ்-“டாக்டர் உளராதீங்க !  நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!”

****************************

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !

நபர் : ஏன்?

நர்ஸ்: டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

****************************

நோயாளி : டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?

நர்ஸ் : ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம் !.

*****************************

30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...