Total Pageviews

Sunday, October 11, 2015

வலைபதிவர் திருவிழா 11.10.2015 புதுகை !


வலைபதிவர் திருவிழா நடந்தது  - புதுகை !


கூடமோ                       :  செழுமை !


வறவேற்பு,உபசரிப்பில் திரு.முத்து நிலவனின்:  புதுமை !

செயல்பாடுகளில்     :  மேன்மை!

மேடையிலே               : பசுமை! மற்றும் குளுமை !

விழாக்குழுவினர் உடையோ : செம்மை!

தமிழிசை பாடல்களோ    :       அருமை!

விழாக்குழுவினர் அனைவரும்   : மென்மை!

செய்ததோ வந்திருந்த பதிவர் அனைவருக்கும்: நன்மை !

எழுத்தாளர் திரு இராமகிருஷ்ணன் பேச்சோ :  நுண்மை !

பேசுவது  அவரவர்     : உரிமை!

குழிப்பணியாரமோ   : வெண்மை !

வந்தவர்களில் பாதி  : முதுமை !

மீதி                                    : இளமை ! 


விழாவை சீரும் சிறப்பாக நடத்தியது விழாக் குழுவினரின்: திறமை!


மொத்ததில் இந்த வலைபதிவர் திருவிழா நமக்கு எல்லாம் : பெருமை !

நான் சொல்லுவது அனைத்தும்:உண்மை!உண்மை ! உண்மை!

மதுரை சித்தையன் சிவக்குமார்-9965244410




Friday, October 9, 2015

நான் கொஞ்சம் கவுரவமானவன் !




ராதா: "அந்த நடிகை ரொம்ப மனித நேயம் உள்ளவருன்னு எப்படிச் சொல்றே?

சீதா: " "தன்னோட முன்னாள் 5  கணவர்களுக்கு மாதாமாதம் கருணைத் தொகை அனுப்புறாங்களே!"

***************************************

பிச்சைக்காரன் 1: அதோ உண்டியல் குலுக்கிக்கிட்டுப் போறாரே கட்சித்தலைவர். அவரும் நம்மளப் போலத்தான்!

பிச்சைக்காரன் 2: எப்படி சொல்றே...!

பிச்சைக்காரன் 1: அவருக்கு வசதி இருந்தும் பிச்சை எடுக்கிறாரு ! , நாம வசதியில்லாம பிச்சை எடுக்கிறோம் ! அதான்!.

******************************************

சாமியார் : தம்பி! உன் மனைவியை ஏளனமாக எண்ணாதே. அவள் பஞ்ச பூதங்களால் ஆனவள் !

ஒருவர் : ஓ! அப்படிங்களா சாமி? அவ அடிக்கும் போது மனுஷி அடிக்கிற மாதிரி இல்லையேன்னு நான் நினைச்சது சரியாப் போச்சு!!

***************************

TTR: ஏன்யா டிக்கெட் எடுக்காம போறே..... இதிலே ஏ.சி. பெட்டி கேக்குதோ...?"

பயணி :"எதிலேயும் நான் கொஞ்சம் கவுரவமா நடந்துக்குவேன் சார்!"

************************
அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?"

மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்" 

அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்?

மகன்: இது என் "ரேங் கார்ட் இல்லைப்பா ! இது உங்களோடது ! 

************************

எமகண்டம் !



தயாரிப்பாளர் : "ஆரம்பத்துலே படத்துக்கு பத்துக்கோடிதானே பட்ஜெட் சொன்னீங்க, இப்போ இருபதுகோடின்னு சொன்னா எப்படி? எதற்கு?"

நடிகர்: "ஒருவேளை படம் ஓடாட்டி படத்தை வாங்கினவங்களுக்கு திருப்பிக் கொடுக்கறதுக்காகதான்!

பட்ஜெட்டுல ரீஃபண்ட் திட்டம் வச்சிருக்கோம்!" எப்புடி!

*************************

மனைவி: "இந்த ஆள் டி.வி. மெக்கானிக்கா.. இல்லே சைக்கிள் மெக்கானிக்கா..?"

கணவன் : "ஏன் கேக்கற..?" "டி.வி-யில பிக்சர்டியூப் சரியில்லேங்கறேன்! 

பங்க்ச்சர் ஒட்டிடலாம்ங்கறான் !

*******************
காவலர்: "இது கொலையா தற்கொலையா?" 
"ஒருத்தனுக்குத்தான் தெரியும். சார், ஆனா அவன் சொல்ல மாட்டான்."

இன்ஸ்பெக்டர்: "யாரவன்?"

காவலர்: சார் ! "செத்தவன்தான்!" சார் !

**********************

மனைவி : நான் வீட்டுல இல்லாதப்ப வேலைக்காரியை கடுப்பா முறைச்சுப் பார்த்தீங்களாமே! அவளை வேலையை விட்டு நிறுத்திடவா?

கணவன் : முதல்ல அதை செய்! நான் காதலா பார்க்குறேனா? கடுப்பா பார்க்குறேனா?ன்னு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத கூமுட்டையை எல்லாம் வேலைக்கு வச்சுக்க கூடாது!!

*************************

தந்தை: எதுக்கு சார் என் பையன அடிச்சீங்க?"

ஆசிரியர் : "பின்ன என்ன சார், மேப்ல எல்லா கண்டமும் இருக்கு, 

ஆனா இந்த எமகண்டம் எங்க இருக்குனு கேட்டா என்னத்த சொல்லுறது?"

**************************

Monday, September 14, 2015

போலீஸ் வந்திருக்கு!!


கணவன்: பக்கத்து விட்டு அம்மணிக்கு தீபாவளி பலகாரம் கொடுத்தாயா ?

மனைவி: ஆமாங்க!! நிறைய கொடுத்தேங்க!!

கணவன்: வெளியே வந்து பாரு! போலீஸ் வந்திருக்கு!! கொலை முயற்சின்னு கம்ப்ளெயிண்ட் பண்ணி இருக்காங்க!!...

*********************
பெண் வீட்டார் :  எதுக்கு  வரதட்சணை பணத்தை கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே கேட்கிறீங்க..?.."

"மாப்பிள்ளை வீட்டார் : ” "மாப்பிள்ளையை ஜாமீனில் எடுக்க தான்..!,,"

*********************
ஜவுளி கடைக்காரர்: "ஐயாயிரம் புடவை வாங்கிட்டு, பத்தாயிரம் ரூபாய்க்கு பில் கேட்கிறீங்களே.. ஏம்மா ..?.."

பெண்: "பில்லை காட்டினா தான் புடவை ரூபாய் 10,000 /- பக்கத்துக்கு வீட்டுக்காரி நம்புவா...!.

*********************
ஒருவர் : வீட்டுக்குள்ளே தங்கத்தை புதைச்சு வச்சிருக்கேன்! அதை நீயே வச்சுக்கோ!!ன்னு வீட்டுக்காரன் சொன்னதை நம்பி வீட்டை வாங்கினதுனால, ஜெயிலுக்கு வர வேண்டியதாப் போச்சு!

மற்றொருவர் : எப்படிங்க?

ஒருவர் : அவன் வீட்டுக்குள்ளே புதைச்சு வச்சிருந்தது அவன் பொண்டாட்டி தங்கத்தை!!

*********************

தங்கம், வைரம், முத்து, பவளம் !


வருமானவரி அதிகாரி: உங்க வீட்டுல இருக்குற தங்கம், வைரம், முத்து, பவளம் எவ்வளவு இருக்குன்னு உடனடியா எங்களுக்கு தெரின்சாகனும் !

பெண் : தங்கம் - 55 கிலோ !  வைரம் 3 கிலோ ! முத்து 22 கிலோ ! பவளம் பிறந்த உடனே செத்து போச்சு !

வருமானவரி அதிகாரி: என்னம்மா சொல்றே!

பெண்  : தங்கம் எங்க வீட்டுக்காருங்க! முத்து எங்க முதல் மகனுங்க!  வைரம் 3 மாத குழைந்தங்க!  பவளம் 2 வருடத்திற்க்கு முன் பிறந்த உடனே செத்து போச்சு !

*********************
பெண் : இவ்வளவு இடம் இருக்கும் போது எதுக்கு நின்னு கிட்டே சாப்பிடுறீங்க?

ஆண் : பொண்டாட்டியோட சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடுறான் பார்னு யாரும் என்னைக் கேவலமா பேசிடக் கூடாதுன்னு தான்!

*************************

பெரியவர் : உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சும்மா! நீ எனக்கு மருமகளா வந்தா கடைசி காலத்துல கஞ்சி ஊத்துவியாம்மா?

பெண் : தப்பு தப்பா பேசாதீங்க ! கடைசி காலத்துல பால் தான் ஊத்துவாங்க !

**************

Monday, August 3, 2015

சேரனா , பாண்டியனா!



மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே.
 அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“

கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி. !

மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“

*********************

மனைவி - "ஏங்க என்ன பொண்ணு பார்க்க வரும் போது நான் கட்டியிருந்த புடைவை கலர் ஞாபகம் இருக்கா?? "

கணவன் : "இல்லையேமா"

மனைவி: "ம்ம்... தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை..."

கணவன் "அது இல்லடா செல்லம் தண்டவாளத்துல தலை வைக்க போறகிறவன் வருகிற இரயில் சேரன் எக்ஸ்பிரஸா, பாண்டியன் எக்ஸ்பிரஸான பாத்துட்டு இருப்பான்..."

***************************

கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை வாங்கலாம்ன்னு இருக்கேன் !“

மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?“

கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன் !

*********************************

 மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“

கணவன் – “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“

******************************

Saturday, July 11, 2015

சந்தோசமான செய்தியை தாங்க கூடிய சக்தி !



மனைவி:- இனி ஒரு நிமிஷம் கூட என்னால, உங்களோடு சேர்ந்து வாழ முடியாது! அதனால நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!

கணவன்:- அந்த நிமிஷமே நானும் என் உயிரை விட்ருவேன்!

மனைவி:- நீங்க எதுக்காக சாகணும்?

கணவன்:- எந்த ஒரு அதிக சந்தோசமான செய்தியையும் தாங்க கூடிய சக்தி என் இதயத்திற்கு இல்லேண்ணு டாக்டர் சொல்லி இருக்கார்!

மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?

***************************************

மனைவி: டிபன் வேணுமா?  சாப்பாடு வேண்டுமா ?

கணவன்: ஏதாவது சாய்ஸ் இருக்கா?

மனைவி: ரெண்டு இருக்கு!

கணவன்: என்னன்ன?

மனைவி: சாப்பாடு வேணுமா? வேண்டாமா?

********************************

கணவன்: நெஞ்சு வலிக்குது டாக்டருக்கு போன் பண்றியா!

மனைவி: உங்க செல்போன் பாஸ்வேர்ட் சொல்லுங்க?

கணவன்: இப்ப நெஞ்சு வலி பரவால்ல, போன் பண்ணவேண்டாம். !

****************************

ஐயா. .. ரெண்டு கண்ணும் தெரியலே சாமி.. .ஒரு பத்து ரூபா பிச்சை போடுங்க சாமி!.

ஏண்டா பொய் சொல்றே.. . உனக்குத்தான் ஒரு கண் நல்லா தெரியுதே !

யோவ்..அப்போ  ஒரு 5 ரூபாவாவது போட்டு போய்யா !

************************

 கணவன் : ஆஹா…நான் உதைச்சி ஸ்டார்ட் ஆகாத வண்டி நீ உதைச்சதும் ஸ்டார்ட் ஆகிடிச்சே…!.

மனைவி:  ஹி..ஹி…உங்கம்மாவ நெனச்சு உதைச்சேங்க.. அவ்ளோதான். !!

***********************

அனிதா: எதற்கெடுத்தாலும் எதிர்வாதம் பண்ணுவாளே உன் மாமியார்…இப்ப எப்படி இருக்காள்..?

புனிதா: பக்கவாதம் வந்து படுத்துட்டாள்…!

*************************

30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...