Total Pageviews

Tuesday, March 6, 2012

திருப்பிக் கட்டாத லோன்





உங்களுக்கு என்ன வகையான லோன் வேணும்?"
 "திருப்பிக் கட்டாத லோன் கொடுங்க...!"

"உங்களுக்கு என்ன பிரச்சினை?"
"லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் போடுறப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்?"


"நம்ம தலைவர் டைரக்ட் பண்ண படம் சென்சார் போர்டைத் தாண்டிருச்சா..?" "படம் சென்சார் போர்டைத் தாண்டிருச்சு ஆனா, படம் பார்த்த சென்சார் அதிகாரிங்கதான் அபாய கட்டத்தை தாண்டாம இருக்காங்க!


"கல்யாணப் பந்தியில சாப்பிட்டுட்டு, அடுத்த அஞ்சாவது நிமிஷமே மறுபடி சாப்பிட வந்த அந்த ஆளை, தலைவர் ஏன் கட்டிப்பிடிச்சு பாராட்டறார்..?" "அடுத்த தேர்தல்ல கள்ள ஓட்டு போட ஆள் செலக்ட் பண்ணிட்டாராம்..!"


அரசியல்லயும் 'ராகிங்'கா என்னய்யா சொல்றே..?" "புதுசா கட்சி தொடங்கின தலைவரைப் பார்த்து ஆ.ராசா மாதிரி நடந்து காட்டச் சொன்னாங்களாம்!"


போலீஸ் ஸ்டேஷனில் ஒரு திருடன்: "என்னோட அந்த பழைய போட்டோவை எடுத்துட்டு, இந்த புது போட்டோவை மாட்டிடுங்க சார்!"


நம்ம பாலன் ரொம்ப நல்லவரு....
அவரை எம்.எல்.ஏ. ஆக்கிடுவோம்."
"வேண்டாம் வேற ஆளைப் பாருங்க.....
 பாவம்! அவரு நல்லவராகவே இருந்திட்டுப் போகட்டும்


"யோவ்... என் சுயசரிதை சூப்பரா சேல்ஸ் ஆகுதாமே!" "ஆமாம் தலைவரே... ஒரு நல்ல தலைவர் எப்படி இருக்கக்கூடாதுன்னு தெரிஞ்சுக்க ஆளாளுக்கு வாங்கறாங்களாம்!"


ஆபரேஷன் தியேட்டர்ல இருந்து வெளியே வந்த டாக்டர், ஏன் 'ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்'னு சொல்றார்?" "ஆபரேஷனோடு சேர்த்து போஸ்ட்மார்ட்டமும் முடிச்சுட்டாராம்!"


No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...