Total Pageviews

Tuesday, March 6, 2012

'கடமையைச் செய்; மாமூலை எதிர்பாராதே'




மனைவி: எதிர் வீட்டு வயசான அம்மாவோட ஏன் காரணமில்லாமே அடிக்கடி சண்டை போடறே?.
கணவன்: அவங்க பார்க்கறதுக்கு அசப்பிலே உங்க அம்மா மாதிரியே இருக்காங்க


"ஜெயிலில் தொழில் கற்றுத் தருவாங்களாமே... நீங்க ஜெயிலில் என்ன கத்துக்கிட்டீங்க?"
 "குற்றத்திலிருந்து எப்படித் தப்பிக்கறதுன்னு கத்துக்கிட்டேன்."


"அந்த டாக்டர்கிட்ட மட்டும் இவ்வளவு கூட்டம் அலை மோதுதே...
அவ்வளவு கைராசிக்காரரா?"
"அங்கதான் சூப்பரான நர்சுகளை வேலைக்கு வைத்துள்ளார்


"அரசியல் தலைவரோட வேகம் குறைஞ்சு போச்சு..." "எப்படிச் சொல்றே...?" "போன வருஷம் மூணு கட்சி தாவினாரு...
 இந்த வருஷம் ஒண்ணே ஒண்ணுதான்...!"


"யோவ் ஏட்டு... போன்ல யாரு?"
"எவனோ பெயர் தெரியாத திருடன் சார்...
 'கடமையைச் செய்; மாமூலை எதிர்பாராதே'ன்னு அட்வைஸ் பண்றான்!"


அந்த டாக்டர் உங்களை ஆறுமாசம் தங்கி வைத்தியம் பார்க்கச் சொல்றாரே...ஏன்?"
 "என்னோட சொத்து மதிப்பு இருபது லட்சமுன்னு சொன்னேன்."


பியூன்: "சார் மணி ஆறாகுது. வீட்டுக்குப் போகலையா...?"
 அதிகாரி: "இன்னிக்கு வருமானம் ஒன்னும் இல்ல...
வீட்டுக்குப் போனால் மானம் போகும்...!"


"கல்யாணமாகி அஞ்சு வருசத்தில ஒரு லாங் டூர் கூப்பிட்டுப் போகணும்னு சொன்னே..
 அதான் ராஜஸ்தான் பாலைவனத்துக்குக் கூப்பிட்டு வந்திருக்கேன்." "உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால என் வாழ்க்கையே பாலைவனமாயிடுச்சே...
 இதுல இந்தப் பாலைவனம் வேறயா?..."

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...