Total Pageviews
Saturday, November 28, 2015
Friday, November 27, 2015
விவசாயம் பண்ணப் போறேன்!
இளைஞன் : வன்முறை இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்க முடிவு பண்ணியிருக்கேன் சார்!
முதியவர் : வெரிகுட்! வெரிகுட்!! அதுக்கு நான் என்ன உதவி பண்ணனும்?
இளைஞன் : உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அவ்வளவு தான் சார்!
********************************
என்னடா மாப்ளே.... நம்ம தெரு ஜோசியருக்கு திடீர்னு மவசு கூடிருச்சு !!
எப்பவும் பெண்கள், கூட்டம் கூட்டமா போறாங்க !!! " அப்படி என்ன நல்லாவா குறி சொல்றாரு ???!! "
,
"ஆமாம் மச்சான்.. இப்பல்லாம் அவர் ஜோசியம் சொல்லிப்புட்டு கூடவே.. அடுத்த வாரம் மழை பெய்யுமா ? குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகுமா ? இல்லையா ? மழை வருமா ? வராதான்னு ! சொல்லிப்புடுறாராம்!!!! ??? அதான் !
***********************************
சாப்பாட்டு பந்தியில் ராமு : “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…!”
சோமு : சாப்பாட்டை வாய்க்குள் திணித்துக் கொண்டே “அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உங்க எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…” நாந்தான் அது !
ராமு : “ஏங்க..! நீங்க மொய் வைக்கலை…?” .
சோமு : அட… போங்க தம்பி ! மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல… ! நான் ஏன் அவனுக்கு மொய் வைக்கணும்?”
ராமு : அடப்பாவிப்பயலே ஓசில சாப்பிட வந்தவனாடா நீ..
*********************************
காவல் துறை அதிகாரியிடம் பெண் ஒருவர் : என்னைக் கண்டபடி திட்டி வாரம் ஒரு முறை மொட்டைக்கடிதம் வருது சார்!”
“காவல் துறை அதிகாரி : உங்களுக்கு யார் மேலாவது சந்தேகமா இருக்கா ?”
“பெண் : நேர்ல திட்டுவதற்க்கு பயந்துகிட்டு ! என் புருசனே மொட்டை கடிதாசி எழுதுறாறோன்னு சந்தேகப்படறேன், சார்!”
***************************************
ராமு: மழை எப்போ நிக்கும்?
சோமு : ஏண்டா மாப்ள ! வயல்ல இறங்கி வேலை பார்க்க போறியா?
ராமு: இல்ல மாமு, மழை நின்னுடுச்சுன்னா, ரோட்ட உழுது விவசாயம் பண்ணப் போறேன்!
************************************
முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?" 300 வது நகைச்சுவை பதிவு !
பிரதமர் : கடையில் என் படங்களை மட்டும் விற்க்கின்றாயே ! ஏன்? மற்ற தேசத்தலைவர்கள் படங்களை எல்லாம் விற்க்க மாட்டாயா?
படம் விற்பவர் : தேசத்தலைவர்கள் / சினிமா நட்சத்திறங்கள் எல்லாப்படங்களும் விற்று தீர்ந்து விட்டது ! தங்கள் படத்தை தவிர !
*******************************************
வந்தவர் : உங்க கடைய இன்னும் எப்படி ஆக்ரமிப்புல இடிச்சு காலி பண்ணாம இருக்காங்க??
கடைக்காரர் : என்னய்யா சொல்றே??
வந்தவர் : ஆமாங்க.. நீங்கதானே சொன்னீங்க ! திருச்சி மெயின்ரோடுல கடை வச்சிருக்கேன்னு..! அதான் !
******************************************
ராஜா : என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை !
மந்திரி : அப்படி என்ன பண்ணிட்டான்..?"
"ராஜா : என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டானே!
********************************
பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்.
டாக்டர்: எப்போ நடந்தது?
பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.
டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?
பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி உபயோகப்படுத்தினேன்,
டாக்டர் கோபமாக : இப்ப ஏன் வந்தீங்க ?
பேஷன்ட்: இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு !
***************************
நடிகை : இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?"
டாக்டர் : "எதுக்கு?"
நடிகை : ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு!
***********************************
Thursday, November 26, 2015
காந்தி படம் சேகரிக்கப் போறேன்.. !
நண்பர்1:நான் சாப்பிடாம என் மனைவி சாப்பிடவே மாட்டாடா மச்சி ! என் மேல அவ்ளோ பாசம் அவளுக்கு!
நண்பர் 2: சில பேரு காக்காவுக்கு சோறு வைக்காம கூடத்தான் சாப்பிட மாட்டாங்க...! அதுக்காக காக்கா மேல காதல்னு எடுத்துக்க முடியுமா?
நண்பர் 1: ???? ...
*************************************
ராமு: சோமு, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி வருதில்ல... அதனால நான் காந்தி படமா சேகரிக்கப் போறேன்.. !
சோமு: நல்ல விஷயம்.. அதுக்கு நான் என்ன பண்ணனும்?
ராமு: உன்கிட்ட இருக்கற காந்தி படம் போட்ட 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டெல்லாம் எனக்குத் தந்தா ரொம்ப யூஸ் புல்லா இருக்கும்!
சோமு: !!!!
நண்பர் 2: சில பேரு காக்காவுக்கு சோறு வைக்காம கூடத்தான் சாப்பிட மாட்டாங்க...! அதுக்காக காக்கா மேல காதல்னு எடுத்துக்க முடியுமா?
நண்பர் 1: ???? ...
*************************************
ராமு: சோமு, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி வருதில்ல... அதனால நான் காந்தி படமா சேகரிக்கப் போறேன்.. !
சோமு: நல்ல விஷயம்.. அதுக்கு நான் என்ன பண்ணனும்?
ராமு: உன்கிட்ட இருக்கற காந்தி படம் போட்ட 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டெல்லாம் எனக்குத் தந்தா ரொம்ப யூஸ் புல்லா இருக்கும்!
சோமு: !!!!
சந்தோஷம் தான்! ...
ஜோசியர் : உங்களுக்கு ஒரு தோஷம் இருக்கு...
கல்யாணம் ஆனா அது நிச்சயமா காணாமப் போயிடும் !
ராமு: அப்படி என்ன தோஷம்?
ஜோசியர்: வேறென்ன சந்தோஷம் தான்! ...
**************************************
ரமா: ஆனாலும் இந்த கீதாவுக்கு பணத் திமிர் அதிகம் தான்...
பாமா: ஏன் என்ன பண்ணினா?
ரமா: தீபாவளிக்கு ‘பருப்பு' வடை சுட்டு, எல்லா வீட்டுக்கும் கொடுத்து விட்ருக்கா... ...
பாமா: ஏன் ?
ரமா: பருப்பு ஒரு கிலோ 180/- உளூந்து ஓரு கிலோ 170/- நல்லெண்ய் 1 லிட்டர் 220/- ரூபாய்.
*****************************
நண்பர் 1: மனைவி, மழை - இந்த ரெண்டுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?
நண்பர் 2: தெரியலையேப்பா...
நண்பர் 1: இந்த ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்.... வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்....!
********************************
Wednesday, November 18, 2015
பென்சன் வாங்குறார் !
வேலைவாய்ப்பு அதிகாரி: நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"
கல்லூரி மாணவர் : அப்பாவுக்குப் பதிவை புதுப்பிக்கணும் ! எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!" அதான் !
---------------------------------------------------
அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."
"ஏன்...?"
"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"
***************************************
தரகர் : பொண்ணு புண்ணியம் பன்னியிருக்குங்க! "மாப்பிள்ளைப் பையனுக்கு மாத வருமானம் இருபதாயிரம் !.
மாப்பிள்ளை வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டியதில்லை."
பெண்னின் தகப்பனார் : அப்படியா, என்ன வேலை?"
தரகர் : "ரிட்டயர்டு ஆகிப் பென்சன் வாங்குறார் !
*****************************
டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"
ரெண்டு நாளைக்கு அப்புறம் கெட்டு போயிடும்! எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும் !
-------------------------------------------------------------------------------------------
கல்லூரி மாணவர் : அப்பாவுக்குப் பதிவை புதுப்பிக்கணும் ! எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!" அதான் !
---------------------------------------------------
அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."
"ஏன்...?"
"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"
***************************************
தரகர் : பொண்ணு புண்ணியம் பன்னியிருக்குங்க! "மாப்பிள்ளைப் பையனுக்கு மாத வருமானம் இருபதாயிரம் !.
மாப்பிள்ளை வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டியதில்லை."
பெண்னின் தகப்பனார் : அப்படியா, என்ன வேலை?"
தரகர் : "ரிட்டயர்டு ஆகிப் பென்சன் வாங்குறார் !
*****************************
டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"
ரெண்டு நாளைக்கு அப்புறம் கெட்டு போயிடும்! எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும் !
-------------------------------------------------------------------------------------------
Tuesday, November 17, 2015
மழை விட்டு விட்டு பெய்யும் !
கணவன்: நமக்கு, டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் 1000/- ரூபாய் ஆகுது.
மனைவி: டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
**************************************
எஜமானி: நம்ம ஊர்ல 24 மணி நேர LOCAL நியூஸ் சானல் வரப்போகுதாம்.......
வேலைக்காரி: அதுக்காக என்னைய வேலையை விட்டு நீக்கிவிடாதீங்கம்மா.... !
****************************************
பாலு : வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்"
சீனு : "நாலு செண்ட் தான்"
பாலு : "ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே..!
************************************
ராமு : "டைம் இஸ் கோல்டுன்னு சொன்னா, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?"
சோமு: அதை அடமானம் வைக்க முடியாதே !
******************************************
கீதா: ஏன்டி.. டிவியில மழை விட்டு விட்டு பெய்யும்னு சொல்றாங்களே... ஏன் ? தொடர்ந்து பெய்யாதா?
சுதா: வானத்துல மழைத் தண்ணி கம்மியா இருக்காம் ! அதான் நம்ம ஊர்ல கரண்ட் விட்டு விட்டு வர்ற மாதிரி மழையையும் விட்டு விட்டு பெய்யுமாம் !
********************************************
.
ஒரு கிறுக்கு ! முறுக்கு சாப்பிடுது !
காவல் அதிகாரி: உங்களை கைது செய்கிறேன்... வாங்க ஆஸ்பத்திரிக்கு...!
அரசியல்வாதி: எதுக்கு?
காவல் அதிகாரி: எப்படியும் ஜெயிலுக்குப் போனதும் நெஞ்சுவலின்னு, ஆஸ்பத்திரிக்குத்தானே போகப் போறீங்க. அதான் !.
********************************
இஞ்ஜினீயரிங் வகுப்பறையில்... ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம், என்னோட நண்பர் ஒருவர் திருச்சியில 25,000 ரூபாய் வாங்கிண்டு இருந்தார், இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கார் !
மாணவர்: என்ன கடனா?
ஆசிரியர்: ஹே............................... ! சம்பளம் தான் !
********************************
காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.
காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க !
காதலன்: ஒரு கிறுக்கு ! முறுக்கு சாப்பிடுது !
*******************************
"சென்னையிலே இந்த மழைக்காலத்திலும் தண்ணிக் கஷ்டமாமே?"
ஆமா! குடிகாரங்க பெருத்துப் போயிட்டாங்கலே!"
******************************
தொழிலாளி : ஐயா, எனக்கு ஏழு குழந்தைகள்... உற்பத்திக்கு ஏத்த படி சம்பளம் கூட்டிக் கொடுங்க !
முதலாளி : "அந்த உற்பத்திக்கெல்லாம் சம்பளம் கூட்டித் தரமுடியாது... பேக்டரியிலேயே உற்பத்தியைக் கூட்டினவங்களுக்குத்தான் சம்பளம் கூட்ட முடியும்."
******************************
Saturday, November 14, 2015
மழைக்கால நகைச்சுவை !
முதலாளி : வேலைகாரரைப்பார்த்து, டேய் வேலா.. தோட்டத்துக்கு போய் எல்லா செடிகளூக்கும் தண்ணீர் ஊற்று !
வேலா: முதலாளி ஏற்கனவே மழை பெய்துக்கொண்டிருக்கிறது !
முதலாளி: அதனாலென்னா குடை பிடித்துக்கொண்டுபோய் தண்ணீர் ஊற்று..???
***************************************
புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான்.
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?
வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!??
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...
******************************
பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே தலைவரை பேசவிட்டது, தப்பா போச்சுது…!
அப்படி என்ன பேசினார்?
பள்ளிக்கூடத்துப் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காத நானே பல கோடி சம்பாதிக்கும்போது,
பல்கலைக் கழகத்தில் படிக்கும் நீங்கள் பல்லாயிரம் கோடி சம்பாதிக்க வேண்டாமா?ன்னு பேசிட்டார்..!
***********************************
ராமு : ஏதோ ….உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் மழை பெய்யுது ! “
சோமு : ”அப்படியா… நான் அவ்வளவு நல்லவனா ?
ராமு : இல்லை ! உங்களை மாதிரி இல்லைனா !” ” நிறையவே மழை பெய்யும் ! “
*************************************
"நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர்கூட நனையவில்லை."
"அதெப்படி?" " அந்த நேரத்தில்தான் மழையே பெய்யவில்லையே!
*****************
சென்னையில் பலத்த மழை !
# சென்னையில் பலத்த மழை செய்தி #
சன் டிவி : சென்னையில் கடும் மழை ! மக்கள் அவதி ! ஸ்டாலின் கண்டனம் !
ஜெயா டிவி : சென்னையில் நல்ல மழை ! வறட்சி நீங்கியது! ஏறி குளங்கள் நிறைந்தது!மக்கள் மகிழ்ச்சி !
கலைஞர் டிவி: (பொதுமக்களில் ஒருவர்) " மழை பெயிஞ்சுகிட்டே இருக்கு! ...அதுக்கு இந்த அம்மா ஒண்ணுமே செய்ய மாட்டேன்குறாங்க!! "
கேப்டன் டிவி : இரு ஆட்சியிலும் முடங்கி கிடந்த சாலை பணிகளால், சென்னை சாலைகளில் கடும் வெள்ளம் ! மக்கள் அவதி !
வசந்த் டிவி : தமிழக காங்கரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் நிவாரண பணிகளில் தீவிரம் !
பொதிகை டிவி : (ரமணன் ) நாளை சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காண படும் ..சில இடங்களில் மிதமான மழையும்! , ஒரு சில இடங்களில் பலத்த மழையும் , ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்ய கூடும் !
Friday, November 6, 2015
தீபாவளி நகைச்சுவை 4 !
வந்தவர் : ஐயா இல்லீங்களா...?
பெண் : என்ன விசயம்!
வந்தவர்: தீபாவளி இனாம் வேணும்!
பெண் : ஐயாவும் தீபாவளி இனாம் வாங்கத்தான் அடுத்த தெருவுக்குப் போயிருக்காரு !
******************************
மனைவி : என்னங்க இது தீபாவளியும் அதுவுமா இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே?
கணவர் : பின்ன நீ செஞ்சு வச்ச பலகாரத்தை எல்லாம் சாப்பிடணும்னா வேற என்ன பண்றது சொல்லு?
***************************
மனைவி : கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தீங்களே. .. ஜோடிப் பொருத்தம் எப்படி ?
கணவர் : ஒரு செருப்பு கூட என் காலுக்குப் பொருந்தலை !
***************************
மனைவி : எதுக்கு தீபாவளி சமயத்துல பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடறீங்க?
கணவர் : தீபாவளிப் பலகாரமெல்லாம் என் ஒருத்தனால செய்ய முடியாதே !
****************************
தீபாவளி நகைச்சுவை 3 !
ஏட்டு: "301, தலை தீபாவளிக்கு வர்ற எங்க மாப்பிள்ளையை.............."
காவலர் : "வரவேற்கணுமா ஏட்டய்யா..?"
ஏட்டு: சும்மா மிரட்டி திருப்பி அனுப்பிடணும்..!"
**************************
மாமனார் : கண்டிப்பா அடுத்த வருஷம் தீபாவளிக்கு மோதிரம் போடுறேன் மாப்ளே..."
மாப்பிள்ளை : அப்போ மோதிரம் போட்ட பிறகே நான் ஊருக்குக் கிளம்பறேன் மாமா!"
************************
ராமு : "என்னடா இந்த வருஷம் உனக்கு தலை தீபாவளி தானே.. மாமனார் வீட்டுக்குப் போகலையா?"
சோமு : "அட! நீ வேற.. தலை தீபாவளிக்குப் போன என் மாமனாரே இன்னும் அவர் மாமனார் வீட்டுலத்தான் இருக்காருடா..."
*********************
தொண்டன் 1 : "நம்ம தலைவர் இன்னமும் புதுமாப்பிள்ளையாவே இருக்காரா... எப்படி?"
தொண்டன் 2 : "ஒவ்வொரு தீபாவளிக்கு முன்னாடி ஒரு திருமணத்தைப் பண்ணி தலை தீபாவளி கொண்டாடிடுறாரே!"
****************************
ராமு : "ஹைய்யா.. தீபாவளி வரப்பேகுது ஜாலின்னு கத்திக்கிட்டே போறாரே யாரு அவரு.."
சோமு : "பட்டாசுக்கடைக்காரரா?" "இல்லை... பிக்பாக்கெட் திருடன்."
************************
காவலர் : "வரவேற்கணுமா ஏட்டய்யா..?"
ஏட்டு: சும்மா மிரட்டி திருப்பி அனுப்பிடணும்..!"
**************************
மாமனார் : கண்டிப்பா அடுத்த வருஷம் தீபாவளிக்கு மோதிரம் போடுறேன் மாப்ளே..."
மாப்பிள்ளை : அப்போ மோதிரம் போட்ட பிறகே நான் ஊருக்குக் கிளம்பறேன் மாமா!"
************************
ராமு : "என்னடா இந்த வருஷம் உனக்கு தலை தீபாவளி தானே.. மாமனார் வீட்டுக்குப் போகலையா?"
சோமு : "அட! நீ வேற.. தலை தீபாவளிக்குப் போன என் மாமனாரே இன்னும் அவர் மாமனார் வீட்டுலத்தான் இருக்காருடா..."
*********************
தொண்டன் 1 : "நம்ம தலைவர் இன்னமும் புதுமாப்பிள்ளையாவே இருக்காரா... எப்படி?"
தொண்டன் 2 : "ஒவ்வொரு தீபாவளிக்கு முன்னாடி ஒரு திருமணத்தைப் பண்ணி தலை தீபாவளி கொண்டாடிடுறாரே!"
****************************
ராமு : "ஹைய்யா.. தீபாவளி வரப்பேகுது ஜாலின்னு கத்திக்கிட்டே போறாரே யாரு அவரு.."
சோமு : "பட்டாசுக்கடைக்காரரா?" "இல்லை... பிக்பாக்கெட் திருடன்."
************************
கடன் வாங்க ஆரம்பிச்சுட்டேன்....
ராமு : நான் செத்த பிறகு நாலு பேராவது என்னைப் பற்றி பேசணும்ன்றதுக்காக........
கீதா : எல்லோர் கிட்டேயும்... கருணை காட்ட ஆரம்பிச்சுட்டீங்களா?
ராமு : ம்ஹும்! எல்லார் கிட்டேயும்..... கடன் வாங்க ஆரம்பிச்சுட்டேன்....
********************************
சோமு: கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு......
ராமு: எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.......
கீதா: எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு........
சோமு - ராமு: ?!?!?!?!?!?
*****************************
"சோமு: நான் வனஜாவை லவ் பண்ற விஷயத்தை ஊர்ல இருக்கற எல்லார்ட்டயும் சொல்லிட்டேன்"
"ராமு: அப்புறம் ஏன் சோகமா இருக்கே?"
""சோமு: இன்னும் வனஜாகிட்டே சொல்லலையே?"
***************************
இன்சல்டேசன் பீஸ் !
நர்ஸ் மீனா : டாக்டர், அந்த நோயாளி நம்ம நர்ஸ் விமலாதேவிய அவனோட செல்போன்ல பல கோணத்துல போட்டோ புடிச்சி வெச்சிருக்கான்!
டாக்டர் : பாஸ்போர்ட் சைஸ் போட்டோவு ஒன்றுக்கு நூறு ரூபாயும், ஃ புல் சைஸ் போட்டோவுக்கு ஒன்றுக்கு இருநூறு
ரூபாயும் சேர்த்து பில் போட்டிடுங்க..!
********************************
நோயாளி : நரஸ், டாக்டர் கன்சல்டேசன் பீஸ் ருபாய் 200 தானே வாங்குவார், நீங்க 300 ருபாய் கேட்குறீங்க !
நர்ஸ் : நீங்க வெளியில் உட்காருட்ந்து, டாக்டர இன்சுல்ட் பண்ணதால இன்சல்டேசன் பீஸ் ருபாய் 100 சேர்த்து போட்டார் !
*************************
ரமா : வேலைக்காரியை கட்டி பிடிச்சுக்கிட்டு அழுவுறாரே உன் புருஷன், ஏன்?
உமா : வேலைக்காரிகிட்டே எல்லாம் சிரிச்சுப் பேசாக்கூடாதுன்னு சொன்னேன், அதான்!
*************************
உமா: ‘‘என்ன… உன் கணவர் உனக்கு மிஸ்டுகால் கொடுக்கறாரு..?’’
ரமா: ‘‘நான்தான் சொன்னேனே… அவரு என்கிட்டே பேசறதுக்கே பயப்படுவார்னு !
**********************
Thursday, November 5, 2015
Wednesday, November 4, 2015
Subscribe to:
Posts (Atom)
அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*
ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...
-
ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...
-
மனம் விட்டு சிரியுங்க! வியாதிகள் தீரும், ஆயுள் கூடும் ஹலோ! யார் பேசுறது? பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... நான் மட்டும் ...
-
காதலி : நம்ம காதல் புனிதமானது சிவா !' காதலன் : 'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, ச...