ஏன் மாமா வீட்டிற்கு டி.வி. வாங்கலை?
பையன் படிப்பு கெட்டுவிடும் அதனால் டி.வி. வாங்கவில்லை.
பையன் எங்க மாமா போயிருக்கான்.?
பக்கத்து வீட்டிற்கு டி.வி.பார்க்க போயிருக்கான்.
---------------------------------
கல்யாண வீட்ல, ரொம்பநேரமா செருப்புகளை உத்து உத்து பார்க்கறீங்கேள, உங்க செருப்பை கானோமோ?
ம்ஹும், நல்ல டிசைன் செருப்பா தேடிக் கிட்டிருக்கிறேன
-----------------------------------
ஹேலோ அது நான் பார்த்து வெச்சிருக்குற செருப்பு, நீங்க வேற ஏதாச்சும் எடுத்துக்குங்க
அடப்பாவி இது என்னோட சொந்த செருப்புய்யா.
-------------------------------
மாப்பிள்ளை அழைப்பு எங்கியிருந்து ஆரம்பம்!
சென்டரல் ஜெயிலில் இருந்து.
--------------------------------------
ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
என்னாச்சி?
போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்ச!
---------------------------------------