Total Pageviews

Saturday, July 14, 2012

அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?



கணவன்:அன்பே,உனக்காக தாஜ்மஹால் எழுப்பவா,கோவில் எழுப்பவா?
 

மனைவி:நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுப்புங்கள்.ஆனால்
தூங்கும் போது மட்டும் எழுப்பாதீங்க.
**********
இரண்டு தந்தைமார்கள் தங்களுக்கள் பேசிக்கொண்டார்கள்.
 

ஒருவர்:என் மகன் கடிதம் எழுதினால் கடிதத்தைப் படிக்க எப்போதும் அகராதியைத் தேடித் போக வேண்டியிருக்கிறது.
 

மற்றவர்:உங்கள் மகனாவது பரவாயில்லை.என் மகன் கடிதம் எழுதினால் நான் வங்கியை அல்லவா தேடிப் போக வேண்டியிருக்கிறது!
************
''அடடா,உனக்கு அல்வா வாங்கிட்டு வர மறந்துட்டேன்,கமலா''
'சரி,அதனாலென்ன?'
 

''எங்க அம்மா ஒரு சதிகாரி,மோசக்காரி,கூனி.....''
 

'இப்ப உங்க அம்மாவை ஏன் திட்டுறீங்க?'
'

'அவங்களைத் திட்டினா உனக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்குமே!''
************
டாக்டர்:கவலைப்படாதீங்க,நீங்க நிச்சயமாய் அறுபது வயது வரை உயிரோடு இருப்பீங்க.
 

நோயாளி:ஐயோ டாக்டர்,எனக்கு ஏற்கனவே அறுபது வயது ஆகிடுச்சி.
**************
கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
 

மனைவி:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
**********
''ஆபீசுக்கு குடிச்சிட்டு போதையில் போனது தப்பாப் போச்சு.''
'

ஏன்?என்ன ஆயிற்று?''
 

''இப்ப என்னை தண்ணி இல்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க.''
********

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...