Total Pageviews

Monday, July 16, 2012

கமலா, கிருத்திகா, சரிகா, காயத்ரி..


காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு? 

காதலன்: என்ன பேசற நீ?
 

கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன்  என்னை உதைக்க மாட்டானா?
------------------------
டார்லிங்! நமக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும்னு கோயில்ல நேத்து பிரார்த்தனை பண்ணிகிட்டேன் பலிக்குமா?'
 

'ஜம்பது சதவிகிதம் பளிச்சிடுச்சி!  வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க!
--------------------------------------
ஜோசியர்:    தம்பி, நீ விரும்புற பெண்ணே உனக்கு மனைவியா அமைவா! 
 

தம்பி :சரி,  'கமலா, கிருத்திகா, சரிகா, காயத்ரி..இவங்கள்ல யாருன்னு குறிப்பா சொல்ல முடியுமா ஜோசியரே...?'
------------------------------------
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !

டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !

மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா?
--------------------------------------
நம்ம கல்யாணத்துல எங்க வீட்ல  யாருக்குமே விருப்பமில்லை !'

'உனக்கு ?'

'இதென்ன கேள்வி.. நானும் எங்க வீட்லதானே இருக்கேன்
---------------------------------------------

2 comments:

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...