Total Pageviews

130358

Saturday, July 7, 2012

பேய்க் கதைதான்


உன் வீட்டுக்காரர் கோலமெல்லாம் போடுறாராமே?
யார் சொன்னா?
 

என் வீட்டுக்காரர் காலையில் கோலம் போடும் போது பார்த்தாராம்...!
----------------------------------------
 

என் கணவருக்கு சர்க்கரை வியாதி இருக்குமோன்னு பயமா இருக்கு.
ஏன்?
 

அவரை சுத்தி எப்பவும் எறும்பு மொய்க்குது.
--------------------------------------
 

ஓட்டப் பந்தயத்துலு எப்படி சார்  தங்கபதக்கம் வாங்கினீங்க?
அதன் ரகசியம் சொல்லுங்க, இதற்கு யார் காரணம்?
 

என் மனைவிதான் தினமும் என்னை துரத்தி துரத்தி அடிக்க ஓடி வருவா
இப்படி ஓடி ஓடி பழக்கப்பட்டு முதல் பரிசு வாங்கிட்டேன்.
--------------------------------
 

திருமணமானவர்களையே ஏன் சேல்ஸ் மேனாக வைத்திருக்கிறீர்கள்?
 

அவர்கள் தான் மகிழ்ச்சியுடன் வெளியூர் செல்கிறார்கள்!
----------------------------------------
 

என் மனைவி தன் கையாலேயே எனக்கு பரிமாறுவாள்!
 

கொடுத்துவைத்தவண்டா  நீ
 

ம்ஹும் சமையல் மட்டும் என்னை செய்ய சொல்கிறாளே!
----------------------------------------
 

என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அருள் புரியனும் !
 

மகனே, அது முடியாமத்தானே நானே சாமியாராகிடேன்.
--------------------------------------
 

என்னங்க மாப்பிள்ளை, உடம்புபூரா ஒரே தழும்பா இருக்கு?
 

நான் அப்பவே சொல்லல.. மாப்பிள்ளை வாழ்க்கையில் ரொம்பவும் அடிபட்டவர்ன
---------------------------
 

ஒருத்தி: உன் வீட்டுக்காரரைத் திட்டுவியா?
 

மற்றொருத்தி: சே,சே அதெல்லாம் நான் செய்யமாட்டேன்...
                            அப்பப்ப அடிக்கறதோடு சரி!
-------------------------------
 

உங்க மனைவியை தேள் கொட்டிச்சாமே என்ன பண்ணீங்க?
 

என்ன பன்றது? சந்தோஷத்தை கொண்டாட முடியாம தவிச்சுப் போயிட்டேன்.
-----------------------------------
உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்கிடுச்சாமே?
 

ஆமா! கடைசியா இருந்தது சந்தோஷம் இப்ப அதுவும் நீங்கிருச்சி.
--------------------------------
 

உங்க மனைவி போட்டாவை பக்கத்துல வச்சி கிட்டு கதை எழுதுறீங்கேள என்ன கதை?
 

பேய்க் கதைதான்...!

No comments:

Post a Comment

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...