Total Pageviews

Monday, November 18, 2013

கொழுப்பு ஜாஸ்தி !


மனைவி : ஏங்க இப்படியே நான் சமைச்சி சமைச்சி போட்டுக்கிட்டு இருக்கேனே, எனக்கு என்னதான் கிடைக்கப்போகுது சொல்லுங்க.

கணவன் : இப்படியே சமைச்சின்னா கூடிய சீக்கிரம் என்னோட எல்.ஐ.ஸி. பணம்  முழுவதும் உனக்கு கிடைச்சிடும்!

-----------------------------

கணவன் : வீட்டு வேலைக்காரியை கல்யாணம் செய்தது தப்பா போச்சு !

ஒருவன் : ஏண்டா ?

கணவன் :  1ம் தேதி ஆனவுடன் பழக்க  தோசத்தில சம்பளத்த கொடுங்கள் எஜமான்ங்கிறாள் !

--------------------------------

கணவன் :  ஏண்டி நம்ம வீட்டுக்கு ஒரு புதிய  வேலைக்காரியை நியமனம் செய்யலாமா ?

மனைவி  :  வேணங்க! உங்களுக்கு 2ம் திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லைங்க!

கணவன் :  முன்னால்  வேலைக்காரிகிட்ட கேட்டா, இதை தான்  சொல்லுவா !

மனைவி :   வேலைக்காரியை  மனைவி ஆக்கிறதுல நீங்க கில்லாடி!  உங்களப்பத்தி எனக்கு தெரியாதா!

_____________________

வேலைக்காரி : எஜமான் நம்ம பையன் டாக்டருக்கு படிக்கப் போறான் !

முதலாளி  :  உனக்கு என்ன வேணுமுன்னாளு கேளு !

வேலைக்காரி :  உங்க ஆசிர்வாதம் மட்டும் போதும்!


-----------------------------------

கணவன் "எங்க அம்மாவுக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆயிட்டதுன்னு டாக்டர் சொல்றார்டி!"

மனைவி ; ;"இதைதான் நான் அன்னிக்கு சொன்னதுக்கு நீங்க  என்கூட சண்டைக்கு வந்தீங்க!"

-------------------------------

 தாய்: ஏண்டா உனக்கு மருந்தை எப்பவும் பாட்டியே கொடுக்கணும்னு சொல்றே?

சிறுவன்: பாட்டிக்குத்தான் கை நடுங்கும், அதனால பாதி மருந்து கீழேயே போயிடும்!

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...