Total Pageviews

Tuesday, October 18, 2016

மாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு!


நகைச்சுவை தத்துவங்கள் | Comedy Quotes in Tamil


மச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீ தாண்டா காரணம்!?

நானா ....எப்படிடா??!!....

இப்பவோ......அப்பவோன்னு இருந்த என் மாமனார்கிட்ட நீ எழுதின ஒரு ஜோக்க படிச்சு காட்டினேண்டா வ்வளவுதான் பொட்டுன்னு போயி சேர்ந்துட்டாருடா! அப்புறம்! அவருடைய சொத்தெல்லாம் எனக்கு வந்துடுச்சில்ல??!!!

******************************
உடம்பு பூராவும் தங்க நகைகளை மாட்டிக்க பயமாயிருக்கு.”

“ஏன்?”

“திடீர்ன்னு ஞாபகமறதியா என் கணவர் என் கிட்டயே கத்தியைக் காட்டி, எல்லாத்தையும் கழட்டுன்னு சொல்றார்.”

******************
அந்த பொண்ணைப் பார்த்து மத்தாப்பூ மாதிரி சிரிக்கிறே‌ன்னு
சொன்னது ஒரு தப்பா?

ஏ‌ன்டா எ‌ன்ன ஆ‌ச்சு?

அவ அண்ணன் சாட்டையோட வந்து வெளுத்துட்டான் முதுகை. ..!

************************
‘‘டாக்டர்... எனக்கு சுகரும், மனைவியும் ஒண்ணுதான்!’’

‘‘எப்படிச் சொல்றீங்க..?’’

‘‘ரெண்டையும் என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை டாக்டர்...’’

*******************************

கணவன் : "எதுக்கு பக்கத்து வீட்டுக்காரியோட புடவையை வாங்கி கட்டிக்கிட்டு இருக்கே...?"

மனைவி: "அப்படியாவது நீங்க என்னைப்பார்த்து பல்லைக் காட்டறீங்களான்னு பார்க்கலாம்னு தான்!


கணவன்:(உள்ளுக்குள் முணங்கிய படி) நான் பல்லை காட்டுனதை இவ எப்படி பார்த்தா?

**********************
போன்ல, நான் அழகா இருக்கேன்னு ஒரு முறை கூட எனக்கு பார்த்த  மாப்பிள்ளை சொல்ல வில்லையே தரகரே…!

நான் தான் சொன்னேனேம்மா…மாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு!

************************

காதலி: டியர் சில்மிஷம் எதும் செய்யமாட்டேன்னு சத்யம் செஞ்சா தான் சினிமாக்கு வருவேன் !.

காதலன்: டியர் வேணாம்....! எதுக்கு தண்டச்செலவு!

*************************

உன்னைவிட அப்பாதாம்மா நல்லவர்..!


Tamil Doctor Nurse Joke - Facebook Image Share

மகன் : உன்னைவிட அப்பாதாம்மா நல்லவர்..!

அம்மா: எப்படிடா?

மகன் : பக்கத்து வீட்டுக்குப் பாப்பாவுக்கு முத்தம் கொடுத்துட்டு நீ பாட்டுக்கு வந்துட்டே…  

அப்பா மட்டும் தான் மறக்காம அந்த ஆண்டிக்கும் முத்தம் கொடுத்தாரே..!

******************************]
உலகத்துல ஒருத்தர் மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாமே..!

ஆமாம் அதுக்கென்ன இப்போ..?

இல்ல! மத்த ஆறு பேருக்காவது நல்ல மனைவியா
அமைஞ்சிருக்காங்களான்னு பார்க்கலாம்னு ஆசை..!
**********************************
சொன்னதெல்லாம் கேக்கற நாய் ஒண்ணு வளர்த்தியே இப்ப
எங்கேடி அது காணோம்!

எனக்குத்தான் இப்ப கல்யாணம் ஆயிடுச்சே அதனால அதை
வித்துட்டேன்!

**************************

கணவன்: என்னோட மூக்குக்கண்ணாடி எங்கே?

மனைவி : வேலைக்காரி வீட்டை கூட்டித் தள்ளிட்டு போகட்டும்  தர்றேன்…!

*******************

நான் தலைல பூ வெச்சுக்கிட்டு போனா மானேஜர்
திட்டுவாரு..!

அநியாயமா இருக்கே…!

அப்புறம் அவரு வாங்கின பூவை எங்கு வைப்பாரு..!

***************************************
நேத்து சாயங்காலம் போன் பண்ணேன்…
ஏன்டா எடுக்கல?’’
-
‘‘நான் வீட்டுக்குப் போன உடனே என் மனைவி சைலன்ட்
மோட்ல போட்ருவா!’’
-
‘‘உன் மொபைலை உன் மனைவி  ஏன் சைலன்ட்
மோட்ல போடணும்?’’
-
‘‘மொபைல இல்ல! என்னையவே பல நேரம் சைலன்ட்
மோட்லதான் போட்டுவா(ங்க)..!’’
**********************************

மப்புல அது தெரிந்தால்தானே..!




பக்தையே என் தவத்தை ஏன் கலைத்தாய்..?

என் வயித்துல வளர்ற உங்க வாரிசை கலைக்கவா
வேண்டாமான்னு கேட்கத்தான் சாமி..!

**************************
கையில் என்ன கட்டு?

மாடிப்படி ஏறும்போது தவறி விழுந்து விட்டேன்..!

உங்க வீட்டிலதான் மாடியே இல்லையே..?

மப்புல அது தெரிந்தால்தானே..!

***************************

கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?

மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். 

சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!

*************************

உங்க கணவரிடம் உள்ள நல்ல விஷயம் ஒண்ணு சொல்லுங்க !.

நான் எவ்வளவு அடிச்சாலும் திருப்பி ஒரு அடி கூட அடிக்க மாட்டார்…!

************************

அடுத்தவங்க சந்தோஷமா இருக்கணும், அதை நான் என் கண்ணால பார்க்கணும்னு அவரு அடிக்கடி சொன்னப்பவே
நான் சந்தேகப்பட்டேன், அது சரியாப் போச்சு…!

ஏன் ? என்னாச்சு?

பக்கத்து வீட்டுப் பெட்ரூமை எட்டிப் பார்த்தார்னு!

போலீஸ் அவரை கைது செய்துட்டுப் போறாங்களே…!
******************************

நேத்து சாயந்திரம்தான் அவங்களோட அம்மா வீட்டுக்குப் போனா !





மனைவி- உலகம் பூரா போய் தேடினாலும் என்ன மாதிரி மனைவி கிடைக்கமாட்டா..!!!

கணவன்- எனக்கென்ன பைத்தியமாடி புடிச்சிருக்கு.. மறுபடியும் உன்னை மாதிரியே தேட..!!!!

*************************

நான் 'இன்னிக்கு' சந்தோஷமா இருக்கேன்னா அதுக்கு என் மனைவிதான் சார் காரணம் !

அந்த மகாலட்சுமியை பார்க்கணுமே!

நேத்து சாயந்திரம்தான் அவங்களோட அம்மா வீட்டுக்குப் போனா !

****************************
காதலன்: செல்லம் நம்ம கல்யாணத்த எங்க வீட்டுல ஏத்துக்க மாட்டேன்றாங்க. தடுத்து நிறுத்த ஏற்பாடு பண்றாங்க!

காதலி: நம்ம கல்யாணத்த தடுத்து நிறுத்த அவுங்க யாருங்க?

காதலன்: என் மனைவியும் மாமியாருந்தான்!!

***********************************

ஆண்கள் ஏன் பெண்களின் கண்ணைப் பார்த்து
பேசுவதில்லை? தெரியுமா?

ஏனென்றால் அவர்கள் பார்க்கும் இடத்தில் இருப்பவை
கண்கள் இல்லையே!

***********************
"உன் மாமியாரோட செல்போனை எடுத்து, எதுக்காக வைப்ரேஷன் செட் பண்றே..?"

"அவங்களால ஒரு சின்ன அதிர்வைக்கூட தாங்கிக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்..... அதை டெஸ்ட் பண்ணலாமேன்னுதான்!"

*****************************

Saturday, June 18, 2016

மிகவும் வலு விழந்து இருக்கின்றான் !

Just to Relax


ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான்,  ஐயா!


******************************

மனைவி: டாக்டர் ஒரு மாதம் நல்ல மலைப் பகுதியான இடத்துக்குப் போய்ஓய்வெடுக்க சொல்றார். நாம எங்க போகலாம்?

கணவன்: வேற டாக்டர்கிட்ட போகலாம் !

***************************

வங்கி மேலாளர்: நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. 
 
மாசம் தவணை கட்டாததால நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.

நபர்: இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கி யிருப்பேனே!!


வங்கிமேலாளர்: .......ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!


************************************

ராமு : என் பையன் வாங்கியிருக்கிற 98% மார்க்கைப் பார்த்தா மெடிக்கல் கிடைக்குமுனு தோணுது...!

சோமு : கவலையே படாதீங்க, கண்டிப்பா கிடைக்கும்ண்ணே!

ராமு : இப்ப ஒண்ணாவதுல வாங்கியிக்கிறமார்க்கை தொடர்ந்து +2 வரை வாங்கனுமேனு தான் கவலையா இருக்கு...!


*****************************

கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?

மனைவி: நம்ம வீட்டு வேலைக் காரியைக் காணோம்.

நீங்களாவது ஆபீசில இருக்கீங்க ளான்னு............. பார்த்துட்டு போகத் தான் வந்தேன்!

*******************************

இப்ப நான் கதாநாயகியாச்சே!




சென்சஸ் அதிகாரி; போன வருசம் நான் சென்சஸ் எடுக்கும் போது உங்க வயது 23ன்னு சொன்னிங்க !

இப்போ 18 வயதுன்னு சொல்லுறிங்களே !?

நடிகை: போன தடவ நான் துணை நடிகை, இப்ப நான் கதாநாயகியாச்சே! வயசு குறைத்தானே செய்யும்?

*********************************

ஆசிரமத்தில் :

குருவே பெண்ணாசை அறவே ஒழிய தாங்கள் எனக்கு அருள் புரிய வேண்டும் !

சிஷ்யா  பின்ன எதுக்கு இந்த ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்த்தாய் ?


******************************

 நீதிபதி : ஏன் பகலில் திருடுனே ?

திருடன் : தொழிலுக்கு வந்த பின் ராத்திரி பகல்னு பார்க்க கூடாதுன்னு என்னோட குரு சொல்லிருக்கார் ,  நான் 24x7 சர்விஸ் பண்ணுவேன் ஐயா!


********************************

தரகர் : மாப்பிள்ளை மெகாசீரியல்ல நடிக்கறார்..

பெண் : அப்ப மாப்பிள்ளை நிரந்திர வேலைல இருக்கார்னு சொல்லுங்க !

******************************************

நடிகர் :  இது என்னோட மானப்பிரச்சனை விடமாட்டேன்னு சொல்றாங்களே என்னாச்சி ?

நடிகை : படத்துல நான் நடித்த குளிக்கிற ஸீனை சென்ஸார்ல கட் பண்ணிட்டாங்களாம்!


*******************************

தொண்டர் 1 : தலைவர் வீட்டுல ஆயிரக்கணக்குல செருப்பு இருந்ததுக்கு அதிகாரிங்க கணக்கு கேட்டாங்களாமே .. தலைவர் என்ன சொன்னார் ?

தொண்டர் 2: வாங்கினா கணக்கு காட்டலாம் , மேடைல வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதுன்னாராம் !

**********************************************

Friday, May 27, 2016

ஆசைக்கும் பேராசைக்கும் சிறிய வித்தியாசம்தான்.






திருமண மோதிரம்:  
உலகத்திலேயே விரலுக்கு போடும் மிகச் சிறிய விலங்கு
——————————–
ஏன் உறவுக்காரங்க வந்தா நீ சரியா கவனிக்கிறதில்லை?
மனைவி: ஏன் இப்படி சொல்றீங்க. என் மாமியாரைவிட, உங்க மாமியாரத்தான நான் நல்லா கவனிக்கிறேன்.
——————————-
தூக்கத்தில் உளறுவது பற்றி அவன் கவலைப்பட மாட்டான். அவனுடைய மனைவிக்கும் அவனுடைய ஸ்டெனோவுக்கும் ஒரே பேர்தான். ______________________________________________



ஆசைக்கும் பேராசைக்கும் சிறிய வித்தியாசம்தான். நீ என்னுடன் பேசணும் என்று நினைப்பது ஆசை; நீ என்னுடன் மட்டுமே பேசணும் என நினைப்பது பேராசை
 _____________________________


"நீங்க குடிச்சா என்னையே மறந்துடறீங்களே...?"
"அதுக்குத் தானே நான் குடிக்கிறேன்...!"

________________________________________

Monday, May 9, 2016

இது எப்படி இருக்கு !


மனைவியின் நச்சரிப்பு தாங்காமல்

கணவன் அவளை ஜெருசலேமிற்கு


சுற்றுலா அழைத்து செல்கிறான்.


அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக


அவன் மனைவி மாரடைப்பில்


இறந்துவிடுகிறாள். அங்கே சொந்த


ஊருக்கு மனைவியின் உடலை


கொண்டு செல்வதற்கு தூதரகத்தின்


உதவியை நாடுகிறான்.


தூதரக அதிகாரி: "சார், உங்க


மனைவியின் உடலை சொந்த


ஊருக்கு கொண்டு போறதுக்கு


50,000 ரூபாய் செலவு ஆகும். இங்க


ஜெருசலேம்ல பொதைச்சிட்ட


வெறும் 500 ரூபாய் மட்டுமே."


கணவன் (அவசரமாக இடைமறித்து):


"அதெல்லாம் ஒரு மண்ணும்


வேணாம். ஜெருசலேம்ல ஏற்கனவே


ஒருத்தர (இயேசு கிறிஸ்து)


பொதைச்சி, அவரு மூணு


நாளைக்கு அப்பறம்


உயிர்த்தெழுந்து வந்துட்டார். இந்த


விசயத்துல நான் ரிஸ்க் எடுக்க


விரும்பல. அஞ்சி லட்சம் ஆனாலும்


பரவால என் பொண்டாட்டிய ஊருக்கு


கொண்டு போய்கிறேன்
.".


Thanks to Pon Sakthivel !

Saturday, April 30, 2016

அஞ்சு மணிக்கே எழுந்து....................... !





வாடிக்கையாளர் : அரிசி 25 கிலோ எவ்வளவு அண்ணாச்சி ?

முதாலாளி : வாங்க அண்ணாச்சி வாங்க ! நீங்க ரெகுலர் வாடிக்கையாளர் ஆயிற்றே உங்களுக்கு கூடாவா சொல்லப்போறோன்.

 வேலை பார்ப்பவரிடம் அண்ணாச்சிக்கு அரிசி போடு, நான் 5 நிமிடத்தில் வந்துடுறேன் !

அரிசி அளப்பவர்: நீங்க நிறுவனத்தின் MD முதலாளியாக இருந்தால் ரூ.5000/- மேலாளராயிருந்தால்-ரூ4000/-, கணக்கப்பிள்ளையாய் இருந்தால் -ரூ2000/-, நீங்கள் காவலாளி அல்லது தோட்டத் தொளிலாளியாகவோ அல்லது பியூனாகவோ இருந்தால்- -ரூ1000/- மட்டுமே!  நீங்க யாரு?

வாடிக்கையாளர் : ஏம்பா இப்படி ?

அரிசி அளப்பவர்:  அரிசி விலையை  சம்பளம்  வாங்கும்  தகுதிக்கு ஏற்பத்தான்யா நான் நிற்னயம் செய்துள்ளேன் !

******************************************

சார், ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?

நோயோடதான்!

**********************************

சார் உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?

அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி !

******************************

ஆறு மணிக்கு, பெட் காபி குடிக்கலாம்னு ஆசையா மாடு வாங்கினேன்..."

"என்ன கஷ்டம் இப்போ?"

"அஞ்சு மணிக்கே எழுந்து அதுக்குத் தீனி வைக்க வேண்டியிருக்கே?"

************************************.

Wednesday, April 20, 2016

இலவசம் என்றால் .....................



கஞ்சன் 1 : ரொம்ப வெய்யில் தாங்க முடியலேன்னா என்ன செய்வீங்க?

 கஞ்சன் 2 : போய் ஏசி முன்னாடி உக்காருவேன்.

 கஞ்சன் 1 : அப்பயும் முடியலேன்னா?

 கஞ்சன் 2 : ஏசியை "ஆன்" பண்ணுவேன்.

*****************************
வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?

மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன்,

பட்டதுன்னா அவள் சிரிப்பா.

**********************************

இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...

அப்படியா?..

ஆமாம்!

இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...

***************************

இருபது கிலோ எடை குறைஞ்சது. !


நீதிபதி : நீ செய்த குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.

குற்றவாளி : எவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்?

****************************

மச்சான் நீயே சொல்லு, என்னைப்பாத்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?

அந்த பொண்ணுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.

*******************************
உன் மனைவி உடம்பைக்குறைக்க குதிரை சவாரி செஞ்சாங்களே, பலன் இருந்ததா?

ஓ இருந்ததே! இருபது கிலோ எடை குறைஞ்சது.

நெஜமாவா?

எடை கொறஞ்சது குதிரைக்குன்னு சொல்லவந்தேன்.

***********************************

காலில் என்ன காயம்?

செருப்பு கடித்து விட்டது!

பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?

*********************************
சார்! உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும்!  வீட்டுக்கு வரலாமா ?

ஐயய்யோ ! ! வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணா தீங்க ! ஆபீசுக்கே வந்துடுங்க ! ! ஒரு மணி என்ன,

ரெண்டு மணி நேரம்கூட பேசலாம் ! ! !

***********************

சுரங்கப் பாதை !

Pin by Selvaraj on JOKES | Comedy quotes, Funny comments, Funny quotess

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

ஏன்.. குடிச்சிட்டு வந்து ரொம்ப சண்டை போடறாரா..?

இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..!

***********************************************
மறுபடியும் நான் எப்ப வரணும் டாக்டர்?"

"பீஸ் கொடுக்க நூறு ரூபா சேர்ந்த பிறகு வாங்க போதும்"

***********************************************
"மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் வயசாகி இருக்கலாம்... அதுக்குன்னு பொண்ணுவீட்டுக்காரங்க இப்படிப் பேசக்கூடாது..."

"ஏன்...?"

"'மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்க...?'னு கேட்டா, 'பல்செட் போட்றோம்'னு சொல்றாங்க!"

*************************************************

தலைவர் : டாக்டருக்கு படிக்கலாம்னு இருந்தேன், பாதிலயே படிப்பை நிறுத்த வேண்டியதா போச்சு.

தொண்டர் : அப்புறம் ?

தலைவர் : அஞ்சாங் கிளாஸோட ஸ்கூல் லைஃப்புக்கு முற்றுப் புள்ளி வெச்சிட்டேன்

****************************************
தொண்டர்  : "உங்க ஆட்சியில் சுரங்கப் பாதைகளை அமைச்சதுக்காகவா இப்ப உங்க மேல் வழக்குப் போட்டிருக்காங்க ?"

தலைவர் : "ஆமா. என்னோட பெரிய வீட்டுல இருந்து, சின்ன வீட்டுக்குப்போய் வர்ற மாதிரி,

சுரங்கப் பாதைகளை அமைச்சிருந்தேன்!" அதான் !..................


*******************

(ரேஷன் கடையில்)

என்னப்பா இது.. அநியாயமா இருக்கு.. பட்டப்பகல்ல இப்படி மூட்டை மூட்டையா அவருக்கு அரிசி கொடுக்குறே..?

பின்னே.. அவரோட குடும்ப கார்டுல மொத்தம் 234 பேர் இருக்காங்களே..!? என்ன செய்ய முடியும் ?


*********************

Saturday, April 16, 2016

யாருங்க அந்த மகாலட்சுமி ?


61 Tamil comedy ideas | tamil jokes, comedy quotes, photo album quote


மனைவி : ஏழு! ஏழு! பிறப்பிலும் நான் உங்களுக்கு மனைவியாக பிறக்க வேண்டும்

கணவன் : எனக்கு இதுதாம்மா ஏழாவது பிறப்பு !

******************************

கணவன் : டார்லிங் உன்னோட பிறந்த நாளுக்கு நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு.

மனைவி : ஒரு கார் வாங்கிட்டு வந்திருக்கலாமே.

கணவன் : கார் கவரிங்ல வராதுடா டார்லிங்.

மனைவி : ??????

********************************

மனைவி : ஏங்க! ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினாராமே. நான் செத்தா நீங்க என்ன கட்டுவீங்கன்னு ?

கணவன் : உன் தங்கச்சியை கட்டுவேன்.

***********************************


மனைவி : இந்த காக்கா கத்தறதைப் பார்த்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது?

கணவன் : எப்படி சொல்றே?

மனைவி : எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்டே இருக்கே, அதவச்சுதான்..

***********************************


கணவன் : நாளைக்கு அம்மா வர்றாங்க டியர் !

மனைவி : என்ன விளையாடுறீங்கள? அவங்க வந்து 4 மாசம் தானே ஆச்சு. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற ஆட்டோக்காரனே இருக்க மாட்டான். நானேலேட்டாதான் எழுந்திருப்பேன். என்ன சமைக்கிறதுன்னு தெரியலை. 
 
அதுசரி எத்தனை நாள் அவங்க இங்க இருப்பாங்க?

கணவன் : வரப்போறது எங்க அம்மா இல்லை உங்க அம்மா !

மனைவி : அட அத நீங்க முதலியே சொல்லியிருக்கலாமே? 
 
எங்கம்மாவை பார்த்து 2 மாசம் ஆச்சு. ஆட்டோகாரங்க நம்பர் என்கிட்ட இருக்கு ஸ்டேசனுக்கு போய் அழைச்சுட்டு வரச் சொல்லனும். நாளைக்கு காலையில நல்ல டிபனா செய்யணும். இந்த முறையாவது அவங்களை நிறைய நாள் இருக்கச் சொல்லணும்.

கணவன் : ?!?!?!....

********************************************
கணவன் : இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...

மனைவி : யாருங்க அந்த மகாலட்சுமி ?

கணவன் : எங்க ஆபிஸ் ஸ்டெனோ கிரபர்...!

******************************

வாட்ஸ்அப்-ல அனுப்பியிருக்கா!''




'உன்னோட மருமக தீபாவளிப் பலகாரமெல்லாம் அனுப்பியிருக்காளா... பரவாயில்லையே!''

''அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்கிறே? எல்லாத்தையும்

வாட்ஸ்அப்-ல அனுப்பியிருக்கா!''

*********************************

மனைவி : ”என்னங்க, அழகான பொண்ணுங்களை எப்படி நினைக்கணும் ?”

கணவன் : ”உன் தங்கச்சியா நினை !”

*****************************
மனைவி :- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

கணவன் :- சொன்னேனே... மறந்துட்டியா...

மனைவி :- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...

கணவன் :- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..

மனைவி :-????????

*******************************

மனைவி : என்னங்க இது. நான் சொல்றதை இந்த கம்ப்யூட்டர் கேக்கவே மாட்டேங்குது...

கணவன் : கண்டிப்பா டார்லிங், ஏன்னா அது கம்ப்யூட்டர்.. உன் புருஷன் கிடையாது!

******************************

மனைவி : “வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா.... நீங்க பேசாம நிக்கிறீங்களே....“

கணவன் : “திரும்பி வரட்டும்.... பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன் பாரு.“

*********************************

ஊதுபத்தியெல்லாம் கொளுத்தி .................



மனைவி : என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க ..

கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று..

*********************

மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க !

கணவன் : ஒண்ணுமில்ல!

மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!

கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

************************************

மனைவி : உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல!  இட்லி தோசை போட்டா பிடிக்கல! உப்புமா போட்டா பிடிக்கல. . .

கணவன் : வேற என்னதான் போட்ட?

மனைவி : பேசாம பட்டிணி போட்டுட்டேன்.................

*************************************

மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?

கணவன் : ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?

*****************************

கணவன் : "வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல"

மனைவி : "தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே."

************************

: நமக்குள் எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி !

மனைவி : ஏங்க! சாதாரணமா இருக்கறப்ப கண்ணே ! முத்தே! மணியே! -ன்னு கொஞ்சறீங்க….

குடிச்சா மட்டும் மூதேவியே, பேயே, பிசாசே-ன்னு திட்டுறீங்களே?

கணவன் : என்னடி பண்றது! போதை ஏறிட்டா எனக்குப் பொய்யே வரமாட்டேங்குது!!!???..

****************************


கணவன் : ஒரு மணி நேரம் விசிறியால் எனக்கு விசிறியதற்கு ரொம்ப தாங்க்ஸ்!

மனைவி : நமக்குள் எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி எல்லாம், ஒரு மணி நேரம் நீங்க மாவாட்டியதற்கு நான் தாங்க்ஸ் சொன்னேனா?

******************

மனைவி : ஏங்க நான் மாசமா இருக்கேன்.............

கணவன் : இந்த சந்தோச சமாச்சாரத்த, உங்க அப்பா, அம்மாகிட்ட சொன்னயா?

மனைவி : போங்க ! நான் காலேஜ் படிக்கும் போதே இத சொன்னதுக்கு அடிச்சாங்களே !

இப்ப எப்படி சொல்றதாம். ?

கணவன் : ஹே........................................

*******************************
கணவன் : எனக்கு ஆபிஸ்ல ஒரு பிரச்சனை..

மனைவி : நமக்கு கல்யாணம் ஆயிருச்சு. இனிமேல் எனக்கு உனக்குன்னு பிரிச்சு பேசாதீங்க. நமக்குன்னு சொல்லுங்க!

கணவன் : சரி நமக்கு ஒரு குழந்தை பிறக்க போகுது ! என்னோட செகரட்டரி மூலமா..

மனைவி : ???????????????????????

*******************

மனைவி : வர வர நீங்க இளைச்சிக் கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க!

கணவன் : நீ என்ன சொன்னே ?

மனைவி : ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்னு சொன்னேங்க.

**********************

Tuesday, April 12, 2016

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் - நகைச்சுவைக்காக மட்டும் !


1) இலவச செல் போன் - with wifi connection - எங்களுக்கு வாக்களித்தமைக்கான சான்றை அளிக்கும் வாக்காளர்களுக்கு மட்டும்.


2) குளிர் சாதனப் பொட்டி ! அனைவருக்கும் இலவச மின்சாரம்-ஒரு மாதத்தில் 3000 Unit க்கு மேல் பயன் படுத்துவோர்க்கு மட்டும்!




3) தமிழகத்தில் மட்டும் கொளுத்தும் வெயிலை குறைக்க நடவடிக்கை ஏற்படுத்தப்படும் !



4) படிப்படியாக வெயிலைக் குறைத்து 30 டிகிரிக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் !. டிசம்பர் மற்றும் ஜனவரி தை திங்களுக்குள் !



5) ஏழைகள் குடும்பத்துடன் தங்குவதற்க்கு நவீன வாகன நிறுத்தத்துடன் கூடிய இலவச சத்திரங்கள், சாவடிகள்- ஊர் ஊருக்கு அமைக்கப்படும். 



6) இலவச பசுமை வீடுகள் கட்டி தரப்படும் - வீட்டில் உள்ள ஓவ்வொரு நபரும் 30 மரங்களை நட்டு, 4 வருடங்களுக்கு மரங்களை பராமரிப்பு செய்வோருக்கு மட்டும் ! 





7) மாலை நேரம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்- மாலை நேரத்தை 4 மணியிலிருந்து - இரவு 9 மணி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



8) 60 வயது நிரம்பிய முதியோர்க்கு மாதம் 4 படங்களுக்கான புத்தம் புதிய சினிமா டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும்- மாற்று திரணாளி என்றால் உடன் வருபவருக்கும் இலவச டிக்கெட் வழ்ங்கப்படும்



9). ஊர் ஊருக்கு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் - சனி ஞாயிறு மட்டும் கிரிக்கெட் நடைபெறும். மற்ற நாட்களில் தமிழர் வீர விளையாட்டான திங்கள்-ஜல்லிக்கெட்டு, செவ்வாய்-சேவல் சண்டை, புதன்- கம்பு சுற்றுதல்,  வியாழன்-ரேக்லா பந்தயம்,  வெள்ளி- மல்யுத்தப்போட்டி WRESTLING-WWF போன்ற போட்டிகள் நடை பெற இந்த அரசு உறுதி பூண்டுள்ளது!






அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...