Total Pageviews

Friday, October 17, 2014

சந்தோஷங்களை தாங்கிக்கிற சக்தி !



நண்பன் 1: டேய் மச்சான்! எந்த மாசத்துல கல்யாணம் செய்துக்கிறது நல்லது?
 
நண்பன் 2: அக்டம்பவரி
 
நண்பன் 1: போடா, அப்படி ஒரு மாசமே கிடையாது.
நண்பன் 2: அதையேதான் நானும் சொல்றேன்.
*******************

ஆஸ்பத்திரியிலிருக்கும் மனைவி கணவனிடம்,

மனைவி: நான் செத்துப் போனா நீங்க என்ன செய்வீங்க?
 
கணவன்: நானும் செத்துப் போயிடுவேன்.
 
மனைவி: என் மேல உங்களுக்கு அவ்வளவு அன்பா?
 
கணவன்: அதெல்லாம் தெரியாது. ஆனால் பெரிய பெரிய சந்தோஷங்களை தாங்கிக்கிற சக்தி என்னுடைய இதயத்துக்கு இல்லைன்னு மட்டும் தெரியும்!
********************

நபர் 1: என்னுடைய துணிகளை நானே துவைச்சு, நானே சமைச்சு, நானே சாப்பிட்டு, வாழ்க்கையே ரொம்ப போரடிக்குதுப்பா. பேசாம கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்.
 
நபர் 2: ஆச்சர்யமாயிருக்கே! இதே காரணங்களுக்காகவே நான் என்னுடைய மனைவியை விவாகரத்து செய்யலாம்னு முடிவெடுத்திருக்கேன்.
********************

வீட்டிற்குள் நுழைந்து திருட முற்பட்ட திருடனிடம்,

கணவன்: இந்த வீட்டுல இருந்து என்ன வேணும்னாலும் எடுத்துக்கோ. அதுக்குப் பதிலா ‘சத்தம் போடாம வீட்டிற்குள் நுழையும் ரகசியத்தை' எனக்கு சொல்லித் தரணும். என்ன டீல் ஓகேவா?
*******************

மனைவியை இழந்த கணவனிடம்,

நண்பன் : துக்கத்தை உனக்குள்ளேயே அடக்கி வைச்சுக்காதே. மனசு விட்டு அழுதிடு.
 
கணவன்: நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துட்டேன், அழுகையே வர மாட்டேங்குதுடா.
 
நண்பன்: கவலைப்படாதே! உன்னுடைய மனைவி திரும்பவும் உயிருடன் வந்துட்டதா நினைச்சுக்கோ, அழுகை தன்னாலே வந்துடும்.
*********************

காலிங்பெல் அடிச்சும் !





வீட்டு ஓனர் : காலிங்பெல் ரிப்பேர் பார்க்க பலமுறை சொல்லியும் ஏன் வரல?

ஜோ : நான் பலமுறை வந்து காலிங்பெல் அடிச்சும் நீங்க கதவு திறக்கலயே சார்!!
*****

ஆசிரியர் : உன்கிட்ட உள்ள டேலன்ட் பற்றி சொல்லுப்பா!

மாணவன் : நான் பின்னாடியே நடப்பேன் சார்.

ஆசிரியர் : அப்படியா! வெரிகுட், எவ்வளவு தூரம் நடப்ப?

மாணவன் : உங்க பொண்ணு எவ்வளவு தூரம் போகுமோ அவ்வளவு தூரம்.
****
 
போலிஸ் : தினமும் காலையும், மாலையும் போலிஸ் ஸ்டேசனுக்கு வந்து கையெழுத்துப் 
போட்டு போகணும். சரியா?

திருடன் : சரிங்க அய்யா, அப்போ நான் என் தொழிலுக்கு போகலாங்களா!

*****
பெரியவர் : (எல்லா பரிசோதனைகளும் முடிந்ததும் டாக்டரிடம் கேட்டார்) டாக்டர்.. கண்ணாடி 
போட்டுக்கிட்ட பின்னாடி என்னால நல்லா படிக்க முடியும்… இல்லையா?

டாக்டர் : இதிலென்ன சந்தேகம்? ரொம்ப நல்லா படிக்க முடியும்!

பெரியவர் : (வருத்தத்துடன்) இவ்வளவு நாளா படிக்கத் தெரியாம இருந்துட்டேனே!

*****

நோயாளி : போன வருசம் எனக்கு ஜொரம் வந்தப்ப குளிக்கவேண்டாம்னு சொல்லிருந்திங்க டாக்டர்.

டாக்டர் : சரி. அதுக்கு இப்ப என்ன?

நோயாளி : இனிமே குளிக்கலாமான்னு கேட்க வந்தேன் டாக்டர்.

*****

தொண்டர் : நம்ம கட்சிக் கூட்டத்துக்கு வர்றவங்க எல்லாம் மூக்குமேல வெரல வக்கிற அளவுக்கு 
ஏற்பாடு செஞ்சிருக்கோம் தலைவரே.

தலைவர் : அப்படியா?

தொண்டர் : ஆமா தலைவரே! கூவம் பக்கத்துல இருக்கற திடல்ல மீட்டிங் வச்சிருக்கோம்!

*****

ஆசிரியர் : (இராமாயண வகுப்பில்) ராமன் ஏன் காட்டுக்கு சென்றான் தெரியுமா?

மாணவன் : மூலிகை பெட்ரோல் தேடிச் சென்றான் சார்.

*****


 

ஃப்ரீ எல்லாம் கிடையாது!”



“டாக்டர்! நான் உங்களைப் பார்க்கணும். எப்ப நீங்க 

ஃப்ரி?”

“இப்ப இல்ல, எப்ப வந்தாலும் நான் ஃபீஸ் வாங்குவேன்! ஃப்ரீ எல்லாம் கிடையாது!”


****************

 “சார், எனக்கு நாசாவுல வேலை கிடைச்சிருக்கு!”

“அப்படியா, சந்தோஷம்! எவ்வளவு சம்பளம்?”

“16000 ரூபாய் சார். ஆனா ஜாயின் பண்றதுக்குள்ள அம்மா எழுப்பிட்டாங்க!”


****************

 போலிஸ்: உங்களை கைது செய்யப் போகிறோம்.. வாங்க ஆஸ்பத்திரிக்கு.

அரசியல்வாதி: எதுக்கு ஆஸ்பத்திரிக்கு?

போலிஸ்: எப்படி இருந்தாலும் ஸ்டேஷனுக்கு உள்ளே போனவுடன் நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரிக்குதானே போகப் போறீங்க.


**************

 போலிஸ்: ஏன் இப்படி மூச்சிறைக்க ஓடி வர்ற?

திருடன்: சங்கிலி பறிக்கிறப்ப ஆளுங்க பார்த்துட்டாங்க, எல்லாரும் துரத்திக்கிட்டு வர்றாங்க. 


நல்லவேளை.. உங்களை பார்த்தப்புறம்தான்  நிம்மதியாயிருக்கு!  உயிரே திரும்பி வந்திருக்கு !

********************
"ஹலோ.. இன்ஸ்பெக்டர் சார்! 10ம் நம்பர் வீட்ல விபசாரம் நடக்குது. உடனே வாங்க சார்!"

"ச்சீ.. நான் அந்த மாதிரி ஆளு இல்ல! போன வைடா ராஸ்கல்!"

*********************

கோபால் எ‎ன் ரூம் மேட்!"



போலிஸ்: ஏற்கெனவே இரண்டு முறை திருடின வீட்ல போய் ஏன் இன்னைக்கு திரும்பவும் திருடின?

திருடன்: காலண்டர்ல இன்று புதுமுயற்சிகளைத் தவிர்க்கவும்னு போட்டிருந்தது, அதான்!
--------
உங்க கல்யாண ஆல்பத்துல ஒருசிலரோட ஃபோட்டோக்கள் மட்டும் ஏன் கறுப்பு, வெள்ளை படமா இருக்கு?

அவுங்கெல்லாம் மொய் செய்யாம ஏமாத்திட்டுப் போனவங்க.
--------
"நம்ம காதலை வீட்டுல மெதுவாப் பேசி ஆரம்பிச்சி வச்சிட்டே‎ன்!"

"அப்படியா! அதுக்கு எ‎ன்ன ரெஸ்பா‎ன்ஸ்?"

"மெதுவா சொன்னதால அது யார் காதிலயும் விழல.. நா‎ன் இப்ப என்ன செய்ய..?"

*****

"நீ எ‎ன்ன சோப் யூஸ் ப‎ண்ற?"

"கோபால் சோப், கோபால் டூத்பேஸ்ட், கோபால் பனிய‎ன், கோபால் ஜட்..."

"ஆ.. போதும் போதும்! கோபால் பெரிய இ‏ண்டர்நேஷனல் கம்பெனியா?"

"இல்ல.. கோபால் எ‎ன் ரூம் மேட்!"


 

தனியாக நிற்கிறீர்களே, அதனால்தான்!




போலீஸ்: ஏ.டி.எம் கவுண்டர் முன்னாடி ஏன் சும்மா நிக்கறீங்க?
 
நம்மவர்: தெரிஞ்சவங்க யாராவது பணம் எடுக்க வந்தாங்கன்னா கடன் கேட்கலாம்ன்னுதான்.
--------

பேஷண்ட்: வீட்டுல சமையல் வேலையெல்லாம் உங்களோடதுதானா டாக்டர்?

டாக்டர்: ஆமாம், எப்படி கண்டுபிடிச்சீங்க?

பேஷண்ட்: மாத்திரைகளையெல்லாம் வகை வகையாப் பிரிச்சி அஞ்சரைப் பெட்டிக்குள்ள போட்டு வச்சிருக்கீங்களே, அதான் கேட்டேன்.
--------

எல்லோரும் லைசென்ஸ் எடுக்குறதுக்கு ஏன் அந்த ஆர்.டி.ஓ ஆபீசுக்கே போறாங்க?

அவங்க எட்டு போடறதுக்கு பதிலா அவங்கவங்க ராசிப்படி ராசியான எண்ணைப் போடச் சொல்றாங்களாம் அதான்!
--------

தலைவரே உங்களை கைது பண்ணச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கு!
யாருய்யா உத்தரவு போட்டது?
உங்க சம்சாரம்…!
--------

வாத்தியார் : எங்கே முட்டாள்களெல்லாம் எழுந்து நில்லுங்க!

சிறிது நேரம்வரை யாரும் எழுந்திருக்கவில்லை. பின்பு ஒருவன் மட்டும் தயங்கி தயங்கி எழுந்து நிற்கிறான்.

வாத்தியார் : (எல்லோரும் ஏளனமாக சிரிக்கின்றனர்!) நீ முட்டாள் என்று எப்படித் தெரியும்?

மாணவன் : அதெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் தனியாக நிற்கிறீர்களே, அதனால்தான்!

Monday, October 13, 2014

நான்தான் பேசவேயில்லையே !





போலீஸ்: செல்போன்ல பேசிக்கிட்டே வண்டி ஓட்டினா அபராதம்னு உனக்குத் தெரியாதா?

நபர்: தெரியும். ஆனா நான்தான் பேசவேயில்லையே சார்!,                                                                           

என் பொண்டாட்டி திட்டறத் தானேக் கேட்டுக்கிட்டு இருக்கேன்!

********************

தொண்டன்-1: எங்க நிக்க வச்சாலும் நிப்பேன்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பாப் போச்சு!

தொண்டன்-2: ஏன், என்னாச்சு?

தொண்டன்-1: வீட்டு வாசல்ல செக்யூரிட்டியா நிக்க வச்சுட்டாரு !

*************

தொண்டன்-1: தலைவர் எதுக்கு அனாவசியமா சலூன் போகும்போதெல்லாம் தொண்டர்களையும் கூட்டிட்டுப் போறார்?

தொண்டன்-2: முடி வெட்டறதுக்கு முன்னாடி துண்டு போர்த்துவாங்கயில்ல, அப்போ கை தட்டுறதுக்குத்தான் !

***************

நிருபர்: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ரெண்டுக்கும் பொதுவான விஷயம் ஒண்ணு இருக்குன்னு அன்னிக்கு மீட்டிங்ல பேசினீங்களே, அது என்ன?

அரசியல்வாதி: மக்களோட பணம்!

*******************

நோயாளி: டாக்டர்! நீங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே, அந்த வேலை முடிஞ்சுதா?

டாக்டர்: இன்னும் இல்லை. நீங்க ஏன் தினமும் இதையே கேட்கறீங்க?

நோயாளி: என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கன்னு தெரிஞ்சுக்கத்தான்.

*********************

நர்ஸ்: டாக்டர்! இந்த நோயாளிக்கு ரெண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயக்கமே வரலை.

டாக்டர்: ஊசியோட விலையைச் சொல்லு, உடனே மயங்கி விழுந்துடுவாரு.

*****


டாக்டர்: அந்த நோயாளிக்கு என் மேல கோபம் போல தெரியுது.

நர்ஸ்: எப்படிச் சொல்றீங்க?

டாக்டர்: நாக்கை நீட்டச் சொன்னா, துருத்திக் காட்டறாரே!

*****************
நிருபர்: நீங்க எழுதின நாவல் ரொம்ப சுவையா இருக்கே!

எழுத்தாளர்: கிச்சன்லே சமையல் பண்ணும்போது எழுதினதாச்சே!

*****************

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...