கணவன் : நான் இறந்துபோனா நீ மறுபடியும் கல்யாணம் செய்துக்குவியா?
மனைவி : மாட்டேங்க! நான் என் தங்கச்சி கூடவே இருந்துடுவேன்.
நான் இறந்துபோனா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவீங்களா?
கணவன் : சேச்சே! நானும் உன் தங்கச்சி கூடவே இருந்துடுவேன் !
*********
நண்பர் - 1 : தினமும் எனக்காக காலையில் 50 பொண்ணுங்க காத்திருக்காங்க தெரியுமா?
நண்பர் - 2 : குடுத்து வச்சவன்யா நீ! ஆமா… என்ன வேல பாக்கறே?
நண்பர் - 1 : லேடீஸ் காலேஜ்ல பஸ் டிரைவர் !
*********
விருந்தினர்: என்ன சார், உங்க வீட்டு ஸ்டூல் ரொம்ப வித்தியாசமா இருக்கே! எங்க வாங்கினீங்க?
வீட்டுக்காரர்: என் பொண்டாட்டி செஞ்ச மைசூர்பாகு சரியா வரலே. அதை வீணாக்க வேண்டாம்னு ஸ்டூலாக்கிட்டோம் !
***********
நீங்க இதுவரைக்கும் எவ்வளவு கதை எழுதியிருப்பீங்க?
சரியா சொல்லணும்னா 10 கிலோ 450 கிராம்.
******
தொண்டன் - 1: நேத்து விழாவுக்குத் தலைவர் கொஞ்சம் அதிகமாவே குடிச்சிட்டு வந்துட்டார்.
தொண்டன் - 2: எப்படி சொல்றே?
தொண்டன் - 1: தேசிய கீதத்துக்குக் கைதட்டினாரே!
******
No comments:
Post a Comment