நோயாளி: நான் நிறைய வருஷம் வாழணும். அதுக்கு ஏதாவது மருந்து இருக்கா டாக்டர்?
டாக்டர்: நீ கல்யாணம் செய்துக்க வேண்டிய நேரம் வந்தாச்சு.
நோயாளி: கல்யாணம் செய்துகிட்டா நிறைய வருஷம் வாழலாமா டாக்டர்?
டாக்டர்: ம்ஹூம், இந்த மாதிரியே ஆசையே உனக்கு வராது.
*****************
மனைவி: ஏங்க, நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டேபோகுது. அவளுக்கு சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?
கணவன்: அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிற வரை காத்திருக்கத்தானே வேணும்?
மனைவி: எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?
**************
நீதிபதி: பார்த்தா சின்னப் பையனா அப்பாவியா இருக்கே!
நீயா பிக்பாக்கெட் அடிச்சே? நம்பவே முடியலை!
குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க!
*************
நபர்: தம்பி! அங்க பாரு! பசங்களெல்லாம் பந்தை எடுத்துக்கிட்டு அங்கேயும் இங்கேயும் ஓடி விளையாடுறாங்க. நீ மட்டும் இப்படி தனியா ஒரே இடத்துல நிக்கலாமா, சொல்லு?
மாணவன்: ஐயோ! நான் கோல் கீப்பருங்க!
No comments:
Post a Comment