கணவன்: நீ இவ்வளவு சந்தோஷமா இருக்குறத நான் இன்னிக்குத்தான் பாக்குறேன் !.
மனைவி: பின்ன இருக்காதா... நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!
***************************************
ஆசிரியர் : உங்க அப்பா என்ன வேலை செய்றாரு?
மாணவன் : எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு...!
*************************************
மாப்பிள்ளை: கவலைப்படாதீங்க மாமா! உங்க பொண்ணை நான் கண் கலங்காம பார்த்துக்கறேன்!
மாமனார்: மாப்பிள்ளை! அட நீங்க வேற நான் கவலைப்படறது, பாவம்... உங்களுக்காகத்தான்!
மாப்பிள்ளை: என்ன சொல்றிங்க !
மாமனார்: ம்ம்ம்... நாங்க தப்பிச்சோம்...நீங்க என்ன பாடு படப் போறீங்களோ!... ஆண்டவண் தான் உங்களை காப்பாத்தனும்!
********************************
எப்படி இப்படி நகைச்சுவை வருது உங்களுக்கு?!!!!! ரசித்தோம்!
ReplyDelete